Published:Updated:

மற்ற நிறுவனங்களையும் ஆஃபர்களை அள்ளித் தர வைத்த ஜியோ பிராட்பேண்டு!

கார்க்கிபவா

ஏர்டெல் நிறுவனம் தனது ஃபைபர் பிராட்பேண்டு வாடிக்கையாளர்களுக்கு டேட்டாவை அதிகமாக்கியிருக்கிறது.

Fiber broadband
Fiber broadband ( Pixabay )

ஜியோ மொபைல் சேவைகள் வந்தபோது நடந்தவை உலகறியும் அப்போதிருந்து இப்போதுவரை ஒவ்வொரு மாதமும் மற்ற நெட்வொர்க்குகள் வாடிக்கையாளர்களை இழக்க, ஜியோ மட்டும் ஏற்றிக்கொண்டே போனது. அந்த ரெக்கார்ட் கடந்த ஜூன் மாதம் வரை தொடர்ந்தது. இப்போது, ஜியோ ஃபைபர் பிராட்பேண்டு சேவைக்குள் காலடி வைக்கிறது. செப்டெம்பர் மாதம் முதல் ஜியோ ஃபைபர் சந்தைக்கு வருவதால் மற்ற பிராட்பேண்டு சேவை நிறுவனங்கள் டெலிகாம் நிறுவனங்களுக்கு நடந்த அதே அடி விழாமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருக்கின்றன. வேறு என்ன? ஆஃபர்கள்தாம்.

ஏர்டெல் நிறுவனம் தனது ஃபைபர் பிராட்பேண்டு வாடிக்கையாளர்களுக்கு டேட்டாவை அதிகமாக்கியிருக்கிறது. பிளான்களுக்கேற்றபடி 200 ஜிபி முதல் 1000 ஜிபி வரை இலவச டேட்டா தருகிறது ஏர்டெல்.1599 பிளானில் இருப்பவர்களுக்கு 1000 ஜிபி இலவச டேட்டா கிடைக்கும். 1099 பிளானில் இருப்பவர்களுக்கு 500 ஜிபி இலவச டேட்டா கிடைக்கும். 799 பிளானுக்கு 200 ஜிபி இலவச டேட்டா கிடைக்கும் இந்த இலவச டேட்டாவுக்கு 6 மாதம் வரை வேலிடிட்டி உண்டு. 

broadband
broadband
pixabay

ஏர்டெல் தவிர டாட்டா ஸ்கை பிராட்பேண்டும் ஆஃபர்களை அறிவித்துள்ளது. இந்த சேவை எல்லா மாநிலங்களிலும் இல்லாததால் டெலிகாம் சென்டர்களுக்கு ஏற்றபடி ஆஃபர்கள் மாறும். ஆக்ட், ஹேத்வே போன்ற மற்ற நிறுவனங்களும் விரைவில் ஆஃபர்களை அறிவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.