Published:Updated:

ஜெய் ஜியோ!

Jio GigaFiber is here!

ஜியோவின் அடுத்த பாய்ச்சலுக்கு நீங்க ரெடியா?

ஜெய் ஜியோ!

ஜியோவின் அடுத்த பாய்ச்சலுக்கு நீங்க ரெடியா?

Published:Updated:
Jio GigaFiber is here!
``340 மில்லியன் பயனர்களுடன், வருமானம், லாபம் மற்றும் பயனர்கள் என அனைத்து விதத்திலும் இந்தியாவின் நம்பர் ஒன் டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது ஜியோ"

ரிலையன்ஸ் குழுமத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி தெரிவித்த கருத்து இது!

ரிலையன்ஸ் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி ஆற்றிய உரைதான் கடந்த மாத டெக் உலகின் ஹாட் டாபிக். அதன் சாராம்சம் என்னவென்று பார்ப்போம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``இதுவரை 3.5 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளோம். ஜியோ நெட்வொர்க் ஏற்கனவே 4G+ சேவையை வழங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் குறைந்தபட்சத் தொகையைச் செலுத்துவதன் மூலம் பயனர்கள் 5G சேவையை விரைவில் பெற முடியும். இந்த வளர்ச்சிக்கு எங்கள் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்" என்று ஜியோவுக்குப் பின் இருக்கும் முதலீடு மற்றும் உழைப்பு பற்றிப் பேசிய அம்பானி அடுத்த அதிரடி திட்டத்தையும் அறிவித்தார்.

வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் இன்னும் வேகமான இணையச் சேவை வழங்கும் ஜியோ ஃபைபர் ஆப்டிக்ஸ் பிராட்பேண்ட் (Jio Fibre Optics Broadband) சேவை செப்டம்பர் மாதம் முதல் மக்களுக்குக் கிடைக்கத்தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் மின்னல் வேக இணையச் சேவையை 1 GBPS வரையிலான வேகத்தில் பெற முடியும். இத்துடன் ஒரு லேண்ட்லைன் (Landline service) சேவையும், ஒரு உயர்தர டிஜிட்டல் செட்-அப் பாக்ஸ் சேவையும் கிடைக்கும். இந்த செட்-அப் பாக்ஸில் விர்சுவல் ஷாப்பிங், கேமிங் போன்ற Virtual reality சேவைகளும் கிடைக்கும். டிவி-யின் வழியாகவே பலருடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடும் வசதியும் இதில் இருக்கும். இதுபோக வீட்டின் பாதுகாப்பு (Home Security) மற்றும் இதர ஸ்மார்ட் ஹோம் வசதிகளும் இதோடு வழங்கப்பட உள்ளது.

Jio Giga Router , Jio GigaTv
Jio Giga Router , Jio GigaTv

இதற்காக 13,000 வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் கேபிள் வழியாக சேவை அளித்து வரும் டென் (Den) மற்றும் ஹாத்வே (Hathway) நிறுவனங்களின் பங்குகளை ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. அவர்களது தொழில்நுட்பத்தை உலகத் தரத்துக்கு மேம்படுத்துவதன் மூலம் அனைத்து வீடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் உயர்தரத்தில் (High Definition) சேவையை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உங்கள் குரலை வைத்து டிவியை இயக்கும் வசதியும் (Voice Recognition) இதில் உண்டு. 4K தரத்தில் நேரில் விளையாடுவது போன்ற அனுபவத்தைத் தரக் கூடிய Mixed Reality தொழில்நுட்பத்தை ஜியோ முதன்முதலாக அறிமுகப்படுத்தியிருக்கிறது. அனைத்து வகையான விளையாட்டுகளையும் ஜியோ பிராட்பேண்ட் உதவியுடன் விளையாட இயலும். இந்த Mixed Reality உதவியுடன் நம்மால் திரைப்படங்களையும் காண இயலுமாம். இந்த ஜியோ ஹாலோபோர்ட் (Jio Holoboard) வெகு விரைவில் உங்களுக்கு ஏற்ற விலையில் சந்தைக்கு விற்பனைக்கு வரவுள்ளது.

Jio Broadband Features
Jio Broadband Features

ஜியோவின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவைக் கொண்டாடும் வகையில் வரும் செப்டம்பர் 5 அன்று ஜியோ ஜிகாஃபைபர் எனப்படும் இந்த ஃபைபர் ஆப்டிக்ஸ் பிராட்பேண்ட் வணிகச் சந்தையில் களம் இறங்க உள்ளது. இதற்கான களப்பணிகள் விறுவிறுவென கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டன. குறைந்தபட்சம் 100 MBPS வேகத்திலும் அதிகபட்சமாக 1 GBPS வேகத்திலும் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. உலக அளவில் இதற்கு வசூலிக்கப்படும் தொகையில் பத்தில் ஒரு பங்கையே ஜியோ வசூலிக்க உள்ளது. குறைந்தபட்சமாக ரூ.700 முதல் அதிகபட்சமாக ரூ.10,000 வரை ஜியோ ப்ராட்பேண்ட் விலை நிர்ணயம் செய்துள்ளது. அனைவரது வசதிக்கும், அனைவரது தேவைக்கும் ஏற்ற வகையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வாய்ஸ் கால்கள் இப்போது இருப்பதைப் போல இனியும் இலவசமாகவே வழங்கப்படும். மாதம் ரூ.500 செலுத்தி அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கு அன்லிமிடட் சர்வதேச வாய்ஸ் கால்களைப் பெற்றுக்கொள்ள இயலும்.

பைபர் ஆப்டிக்ஸ் பிராட்பேண்ட் சந்தையிலும் பிரீமியம் (Premium) சேவையை ஜியோ அறிமுகப்படுத்த உள்ளது. ஜியோ பைபர் ஆப்டிக் பிரீமியம் சந்தாதாரர்கள் அவர்கள் வீட்டில் இருந்தபடியே, புத்தம் புதிய படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் அதே தினத்தில் அதே நேரத்தில் அவர்கள் வீட்டில் இருக்கும் டிவி-யின் வழியாகவே கண்டு ரசிக்க இயலும். இந்த FDFS சேவையை 2020-ம் ஆண்டில் ஜியோ அறிமுகப்படுத்தவுள்ளது.

Jio FDFS
Jio FDFS

போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் எனும் புதிய திட்டத்தைத் துவங்க உள்ளது. இதன் மூலம் பிற நிறுவனங்களில் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்கள், அவர்களது எண்ணை மாற்றாமல் ஜியோ போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளராக முடியும். இதற்காக நீங்கள் ஜியோ நிறுவனத்தின் கிளை அலுவலகத்துக்கு வர வேண்டிய அவசியமில்லை. எங்கள் நிறுவன அதிகாரி உங்கள் வீடு தேடி வந்து, இந்த சேவையை உங்களுக்காகச் செய்துகொடுப்பார். ஒரே ஒரு டேட்டா ப்ளான் உதவியுடன் உங்கள் குடும்பத்துக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். தங்கு தடையின்றி வாய்ஸ் மற்றும் டேட்டா சேவைகளும் இதில் அடக்கம்!

ஜியோவின் இந்த அத்தனை வசதிகளையும் முழுமையாகப் பெற ஒரு HD/4K LED டிவி அவசியம் தேவை. ஆகவே, ஜியோ பைபர் அறிமுக சலுகையாக (Welcome offer) அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு 4K LED டிவி-யும் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதைப் பெற நீங்கள் Jio Forever Annual Plan-ல் இணைய வேண்டும். என்ன டிவி, ஏதேனும் டெபாசிட் தொகை கட்டவேண்டுமா போன்ற தகவல்கள் விரைவில் தெளிவாகும்.

Jio Plans
Jio Plans

ஃபைபர் ஆப்டிக்ஸ் தொழில்நுட்பத்தை முதல் மூலமாக நிறுவுவதற்கும் தொடர்பை ஏற்படுத்துவதற்கும் (Connectivity) மட்டும் மேலே குறிப்பிட்ட தொகையில் 80% செலவிடப்பட்டிருக்கிறது. வாடிக்கையாளர்கள் மேல் அந்த செலவைச் சுமையாகக் கொடுக்கமாட்டோம் எனவும் ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைபர் ஆப்டிக்ஸ் தொழில்நுட்பத்தை உங்கள் வீட்டில் நிறுவுவதையும், தொடர்பை ஏற்படுத்துவதையும் (Installation Charges) ஜியோ இலவசமாகவே மேற்கொள்ள உள்ளது. ஆனால், டெபாசிட்டாக 2,500 ரூபாய் வசூலிக்கப்படும். சேவையை நிறுத்திக்கொள்வதாக இருந்தால் இதை அப்படியே திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

இப்படி ஜியோ அதிரடியாகக் களமிறங்க ஏர்டெல் போன்ற மற்ற பிராட்பேண்ட் சேவைகளும் கவர்ச்சிகரமான புதிய திட்டங்களை வகுத்து வருகின்றன. இதனால் அடுத்த மாதங்களில் இந்த வீட்டு இணையச் சந்தை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism