Published:Updated:

`அனைவரும் எளிதில் படிக்க... நாட்டிலே முதல்முறை!'- பொது நூலகங்களை டிஜிட்டல் மயமாக்கும் கர்நாடகா

Digital Library
Digital Library

இந்த டிஜிட்டல் நூலகமானது வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்கு இணையதள வடிவிலும், செயலி வடிவிலும் இருக்கும். கூகுள் ப்ளேஸ்டோரில் `இ- ஸர்வஜனிகா க்ரன்தாலய' என்ற செயலியைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

கர்நாடக அரசு நாளை (பிப் 26, புதன்கிழமை) முதல் தனது பொது நூலகங்களை முழுமையாக டிஜிட்டல் (Digital Library) மயமாக்குகிறது. மேலும், தனது பொது நூலகங்களுக்கென பிரேத்யக டிஜிட்டல் செயலி ஒன்றையும் கொண்டுவருகிறது.

Library
Library

இதுகுறித்து கர்நாடகாவின் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் கூறுகையில் ``இந்தியாவிலேயே நூலகங்களை டிஜிட்டல் மயமாக்கும் இந்தத் திட்டம் முதன்முதலாக கர்நாடகாவில்தான் அறிமுகப்படுத்தப்படுகிறது. நாங்கள் அடைய நினைக்கும் இலக்கின் அடிப்படையிலும் இதுதான் இந்தியாவில் முதலாவதாக இருக்கும். இந்தத் திட்டத்தின்மூலம் கன்னடம், ஆங்கிலம், இந்தி, உருது, மராத்தி ஆகிய மொழிகளில் பாடங்கள் வரவுள்ளன. இவற்றோடு மாநில மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான பாடப் பொருள்களும் டிஜிட்டல் முறையில் வரவுள்ளது. இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக 10 லட்சம் அரசுப் பள்ளிகளுக்கும், பின்பு கல்லூரிகளுக்கும் தரமான பாடப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன" என்றார்.

Vikatan

கர்நாடக மாநிலத்தில் அதிக அளவிலான நூலகங்கள் உள்ளன. இவற்றில் மாநில அளவில் முதன்மை நூலகங்களாக இரண்டு உள்ளன. இவற்றோடு மாவட்ட அளவில் 30 மாவட்ட முதன்மை நூலகங்கள் உள்ளன. மேலும், 26 நகர்ப்புற மைய நூலகங்களும், 13 மொபைல் நூலகங்களும், 488 கிளை நூலகங்களும், 5,766 கிராம பஞ்சாயத்து நூலகங்களும் உள்ளன. நூலகங்களை நவீன மயமாக்கும் திட்டத்தில் 272 பொது நூலகங்கள் உள்ளன. இதில் 26 நகர்ப்புற மைய நூலகங்களும், 30 மாவட்ட மைய நூலகங்களும் 216 தாலுகா நூலகங்களும் அடங்கும்.

டிஜிட்டல் நூலகங்களுக்குப் பயன்படுத்தவிருக்கும் மென்பொருளும் மின் வளங்களும் (e-resource) கிளவுட் மூலமாக வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். இத்திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 272 நூலகங்களிலும் இரண்டு மேசை கணினிகளும், நான்கு டேப்லேட்களும் வைஃபை வசதியுடன் இருக்கும். இந்த டிஜிட்டல் நூலகமானது வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்கு இணையதள வடிவிலும், செயலி வடிவிலும் இருக்கும். கூகுள் ப்ளேஸ்டோரில் `இ- ஸர்வஜனிகா க்ரன்தாலய' (e-Sarvajanika Granthalaya) என்ற செயலியைத் தரவிறக்கம்செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

Library
Library

இந்த டிஜிட்டல் நூலகத்தின் நோக்கமானது, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் அனைத்துப் பாடங்களும் டிஜிட்டல் வடிவில் எளிதில் கிடைக்கும் வண்ணம் இருக்க வேண்டும் என்பதே. அந்த வகையில் அறிவியல், தொழில்நுட்பம், வணிகவியல், மேலாண்மை, கலை மற்றும் மனிதநேயம், போட்டி நுழைவுத் தேர்வுகள், இலக்கியம், செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் ஆகியவற்றை மாணவர்கள் எளிதில் பெற முடியும். டிஜிட்டல் முறையின் சிறப்பம்சங்களில் ஒன்று, ஆய்வுக்கூடத்தில் மாணவர்கள் செய்து பார்க்க இயலாத அறிவியல் செய்முறைகளையும் டிஜிட்டல் முறையில் செய்துபார்க்கலாம். இவ்வாறு டிஜிட்டல் முறையைப் பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகளை மாணவர்களால் பெற முடியும்.

இந்த டிஜிட்டல் நூலகம் பயன்படுத்துவோருக்கு எந்த அளவுக்கு உதவியாக உள்ளது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு