Published:Updated:

ஒன் ப்ளஸ் 7T படங்கள், வசதிகள், ரிலீஸ் டைம் பற்றி கசிந்த தகவல்கள்!

வழக்கமாக அக்டோபரில் வெளியாகும் டி சீரிஸ் மொபைல்கள் இந்த ஆண்டு வெளியாக கால தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

One plus 7T
One plus 7T ( SlashLeaks | Weibo )

"மார்ச் போனா செப்டம்பர் உண்டு கேளடா கண்ணா" என ஒரு பாட்டு உண்டு. மார்ச் மாத தேர்வில் அரியர் விழுந்தால் செப்டம்பரில் வரும் செமஸ்டரில் எழுதி பாஸ் ஆகலாம் என்பதற்காக மாணவர்களைக் குறி வைத்து அப்படிச் சொல்வார்கள். இந்த லாஜிக் ஒன் ப்ளஸ் ரசிகர்களுக்கும் பொருந்தும். ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறை புதிய மொபைல்களை அறிமுகப்படுத்துவது ஒன் ப்ளஸ்ஸின் வழக்கம். இந்த ஆண்டு கோடைக்காலத்தில் ஒன் ப்ளஸ் 7 மற்றும் ஒன் ப்ளஸ் 7 ப்ரோ என இரண்டு மொபைல்களை ஒன் ப்ளஸ் அறிமுகம் செய்தது. இதோ, 6 மாதம் கழித்து ஒன் ப்ளஸ் 7T மொபைல் வெளியாவது பற்றி செய்தி கசிந்திருக்கிறது.

one plus 7T
one plus 7T
SlashLeaks | Weibo

புதிய ஒன் ப்ளஸ் 7T மொபைல் இப்படித்தானிருக்கும் என்கிறது இந்த லீக்கான படங்கள். இதன்படி பார்த்தால் விஷுவலாகப் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை. ஒவ்வொரு முறையும் T சீரிஸ் மொபைல்கள் இப்படித்தான் இருக்கும். புராசஸர் உள்ளிட்ட சில விஷயங்களை மட்டுமே மாற்றும் ஒன் ப்ளஸ். இந்த முறை Snapdragon 855 Plus பிராசஸருக்கு மாறுமென எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே, நீண்ட நாள் எதிர்பார்ப்பான வயர்லெஸ் சார்ஜிங்கும் வரலாம்.

ஆனால், வழக்கமாக அக்டோபரில் வெளியாகும் டி சீரிஸ் மொபைல்கள் இந்த ஆண்டு வெளியாகக் கால தாமதமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 7T சீரிஸ் மொபைல்கள் வந்தால் 7 ப்ரோ விலை குறையலாம் என நினைப்பவர்கள் இன்னும் கூடுதல் காலம் காத்திருக்க வேண்டியிருக்கும்.