Published:Updated:

எலெக்ட்ரிக் வாகனங்களுக்குப் புதுச் சிக்கல்!

லித்தியம் அயன்
பிரீமியம் ஸ்டோரி
லித்தியம் அயன்

விலையேறக் காத்திருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள்!

எலெக்ட்ரிக் வாகனங்களுக்குப் புதுச் சிக்கல்!

விலையேறக் காத்திருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்கள்!

Published:Updated:
லித்தியம் அயன்
பிரீமியம் ஸ்டோரி
லித்தியம் அயன்

போன முறை கார்களுக்கு செமி கண்டக்டர் சிப்பில் ஏன் தட்டுப்பாடு என்பதைப் படித்து முடிப்பதற்குள்… பெரும் நம்பிக்கையாக இருந்த எலெக்ட்ரிக் கார்களுக்கும் ஒரு சிக்கல் வந்துவிட்டது.

அது, லித்தியம் அயன் தட்டுப்பாடு!

லித்தியம் அயன் பேட்டரி என்பது ஒரு வகையான ரீசார்ஜபிள் பேட்டரி என்பது உங்களுக்குத் தெரியும். இதில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன், இயற்கையில் உலோகமாகப் பெறப்படுவதில்லை. உலகில் பெரும்பாலான லித்தியம், கடினமான பாறைகள் அல்லது உப்புநீரில் இருந்து தயாரிக்கப்படுகிறது. உலகின் மிகப் பெரிய லித்தியன் அயன் சப்ளையர் ஆஸ்திரேலியாதான். ஆஸ்திரேலியாவில் கடலுக்கா பஞ்சம்? இதற்கு அடுத்து இருப்பவை – அர்ஜென்டினா, சிலி, பொலிவியா, பிரேசில், ஜிம்பாப்வே, போர்ச்சுகல் மற்றும் சீனா போன்ற நாடுகள். இவை, கடினமான பாறைச் சுரங்கங்களிலிருந்தும் உப்பு ஏரிகளிலிருந்தும் லித்தியத்தை உற்பத்தி செய்கின்றன.

IEA (International Energy Agency) எனும் புள்ளிவிவரம் இப்படிச் சொல்கிறது: ‘‘எலெக்ட்ரிக் கார்கள் தொழில்துறை வளர்ந்து வந்தாலும், 2030–க்குள் இப்போது இருப்பதைவிட 40 மடங்கு தேவை ஏற்படும் என்று தெரிகிறது!’’

ஒரு எலெக்ட்ரிக் காரில், பேட்டரிதான் விலை அதிகமான பாகம். ஒரு kWh பேட்டரி தயாரிக்கத் தேவைப்படும் லித்தியம் கார்பனேட்டுக்கு 100 டாலர்கள் செலவாகிறதாம். இப்போது இன்னும் அதிகரிக்க இருக்கிறதாம். ஒரு பேட்டரியில் Li கார்பனேட் தவிர்த்து கிராபைட், மேங்கனீஸ், நிக்கல், கோபால்ட் போன்ற கனிமங்களும் கணிசமாக அடங்கும். இவற்றுக்கான சப்ளையும் குறைய வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

டெஸ்லா போன்ற பெரிய எலெக்ட்ரிக் நிறுவனங்களுக்கு இதில் பெரிய பாதிப்பு இல்லையென்றாலும், தனது 40,000 டாலர்களுக்கு மேற்பட்ட ப்ரீமியம் கார்களைத் தவிர்த்து இப்போது ‘டெஸ்லா மாடல் 2’ எனும் 25,000 டாலர்களுக்குட்பட்ட விலை குறைந்த எலெக்ட்ரிக் காரைத் தயாரிப்பது குறித்துக் கலந்தாலோசித்து வருகிறதாம் டெஸ்லா. காரணம், இந்த Li கார்பனேட் தட்டுப்பாடு!

உலகளவில் Li கார்பனேட் தயாரிப்பாளர்களில் டாப்–10–ல் ஒருவரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்கெம் என்பவர், ஜூன் 2021 முதல் டிசம்பர் 2021 வரை சுமார் 80 சதவீதம் விலை அதிகரித்துள்ளதாகவும், இனிமேல் ஒரு டன்னுக்கு 20,000 அமெரிக்க டாலர்கள் வரை விலை உயரும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறியிருக்கிறார்.

இந்த அதிகரிக்கும் விலையை கார் நிறுவனங்கள் ஏற்றுக் கொள்ளுமா; அல்லது வாடிக்கையாளர்கள் தலையில் கட்டுமா என்பது இனிமேல்தான் தெரியும்.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்குப் புதுச் சிக்கல்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism