Published:Updated:

வங்கிக் கணக்குகளைக் குறிவைக்கும் `பிளாக்ராக் மால்வேர்' - மத்திய அமைச்சர் எச்சரிக்கை

பிளாக்ராக் மால்வேர்
பிளாக்ராக் மால்வேர்

மொபைல் போன்களில் உள்ள தகவல்களைத் திருடும் புதுவகை `பிளாக்ராக் மால்வேர்’ பரவிவருவதாக மத்தியத் தகவல் தொடர்பு இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே தெரிவித்திருக்கிறார்.

ஆண்ட்ராய்டு மொபைல் சாதனங்களைக் குறிவைத்து தகவல்களைத் திருடும் தன்மையுடைய `பிளாக்ராக் மால்வேர்’ குறித்து மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. மால்வேர் தாக்குதலைத் தடுக்க மத்திய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக டி.ஜி.வெங்கடேஷ் எம்.பி எழுப்பியிருந்த கேள்விக்கு, மத்திய தகவல் தொடர்புத்துறை இணையமைச்சர் சஞ்சய் தோத்ரே எழுத்துபூர்வமாக பதிலளித்திருந்தார்.

அவர், தனது பதிலில் பிளாக்ராக் மால்வேர் விவகாரத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்துவருவதாகத் தெரிவித்திருந்தார். மேலும், ``பிளாக்ராக் மால்வேர், மொபைல்போன்களிலுள்ள வங்கி, மின்னஞ்சல் முகவரி, ஈ-காமர்ஸ் பயன்பாடுகள், சமூக ஊடகப் பயன்பாடுகள் மற்றும் நிதிப் பயன்பாடுகள் தொடர்பான 350-க்கும் அதிகமான செயலிகளில் ஊடுருவித் தகவல்களைத் திருடும் தன்மைகொண்டது.

மொபைல்
மொபைல்
Representational Image

இந்த மால்வேர் குறித்து, இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (CERT) கடந்த ஜூலை மாதமே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த மால்வேர் தாக்குதலைச் சமாளிக்கவும், பயனாளர்களின் தகவல்களைப் பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இதற்காக, இணையச் சேவை வழங்குநர்கள் (ஐஎஸ்பி-Internet Service Provider) மற்றும் தொழில்துறையினருடன் சேர்ந்து செயல்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

பிளாக்ராக் மால்வேர்

கடந்த மே மாதம், நெதர்லாந்தைச் சேர்ந்த `திரெட்ஃபேப்ரிக்’ என்ற சைபர் பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் பிளாக்ராக் மால்வேர் செயல்பாடுகளைக் கண்டறிந்தது. பிளாக்ராக் மால்வேர், பேங்க்கிங் டிரோஜன் வகையைச் சார்ந்தது. பொதுவாக பேங்க்கிங் டிரோஜன், வங்கி விவரங்கள், பாஸ்வேர்டு, கார்டு விவரங்களைப் போன்ற தகவல்களை மட்டுமே திருடக்கூடியதாக இருக்கும்.

பிளாக்ராக் மால்வேர்
பிளாக்ராக் மால்வேர்

ஆனால், பிளாக்ராக் மால்வேர் நமது மொபைலிலுள்ள அனைத்துத் தகவல்களையும் திருடக்கூடியது. நம்முடைய எந்த அனுமதியும் இல்லாமல் மொபைலிலுள்ள 377 செயலிகளின் தகவல்களைத் திருடக்கூடியது. மேலும், இந்த வகை மால்வேர்களை மொபைல் ஆன்டி வைரஸ்களால்கூட கட்டுப்படுத்த முடியாது என்றும் கூறப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு