Published:Updated:

`9 மில்லியன் கணினிகளைத் தாக்கிய நெக்கர்ஸ் பாட்நெட்!' - கட்டுக்குள் கொண்டுவந்த மைக்ரோசாஃப்ட்

நெக்கர்ஸ்
நெக்கர்ஸ்

இந்த பாட்நெட்டின் மூலம் 3.8 மில்லியன் ஸ்பேம் இ-மெயில்கள், 40.6 மில்லியன் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது

எட்டு வருடத் திட்டத்துக்குப் பின், உலகின் மிகப்பெரிய அளவில் சைபர் குற்றங்கள் புரியும் பாட்நெட்டைக் கண்டுபிடித்திருக்கிறது மைக்ரோசாஃப்ட். நெக்கர்ஸ் (Necurs) என்ற இந்த பாட்நெட்டால், உலகில் 9 மில்லியன் கணினிகள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கின்றன.

கணினிகளுக்கு சைபர் தாக்குதல் விளைவிக்கக் கூடிய வகையில் மாற்றம் செய்யப்பட்ட பல கணினிகள் சேர்ந்த அமைப்பே பாட்நெட் எனப்படுகிறது. தற்போது கண்டறியப்பட்ட நெக்கர்ஸ் பாட்நெட்டை ரஷ்யாவைச் சேர்ந்த கும்பல் இயக்கிவருகிறது என்று தெரியவந்துள்ளது.

மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட்
எஸ் பேங்கின் வீழ்ச்சி... ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியுடன் கைகோக்கும் போன்பே!

ஸ்பேம் இ-மெயில்கள் அதிகளவில் வருவதற்கு இந்த பாட்நெட் காரணமாக இருந்துள்ளது. மைக்ரோசாஃப்டின் டிஜிட்டல் கிரைம் யூனிட், பிட் சைட் மற்றும் பிற தொழில்நுட்பப் பாதுகாப்பு நிறுவனங்கள் இணைந்து 2012-ல் இந்த பாட்நெட்டைக் கண்டறிந்துள்ளனர். அப்போது இருந்தே பல மால்வேர்கள் மற்றும் வைரஸ்கள் மூலம் பல கணினிகள் இந்த பாட்நெட் மூலம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாவது கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது இதன் செயல்பாடுகளை மைக்ரோசாஃப்ட் மற்றும் இதர பாதுகாப்பு நிறுவனங்கள் மூலம் முடக்கப்பட்டுள்ளன.

``58 நாள்கள் தீவிர விசாரணைக்குப் பின், இந்த பாட்நெட்டை முடக்கியுள்ளோம். இந்த பாட்நெட்டின் மூலம் 3.8 மில்லியன் ஸ்பேம் இ-மெயில்கள், 40.6 மில்லியன் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என மைக்ரோசாஃப்டின் வாடிக்கையாளர் பாதுகாப்பின் துணைத் தலைவர் டாம் பர்ட் (Tom Burt) தெரிவித்துள்ளார்.

பாட்நெட்
பாட்நெட்

இதே பாட்நெட், இணையத்தில் சைபர் தாக்குதல் நிகழ்த்தி பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைக் கைப்பற்றவும் மற்ற கணக்குகளைத் திருடவும் பயன்படுத்தியுள்ளனர். கடந்த 5-ம் தேதி நெக்கர்ஸின் மொத்த உள்கட்டமைப்பையும் மைக்ரோசாஃப்டின் கீழ் கொண்டுவர மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு நியூயார்க் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு