Published:Updated:

இன்ஜினீயரிங் கில்லியா நீங்க... உங்க திறமையைக் காட்ட ஒரு வாய்ப்பு! #Prayatna2020

செயற்கை நுண்ணறிவு தொடங்கி டீப் லேர்னிங் வரை இன்று உலகத்தை மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் முக்கிய தொழில்நுட்பங்கள் குறித்த பயிலரங்கங்கள் நடைபெறவுள்ளன. அமேசான், பேபால் போன்ற பிரபல நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே இந்த தொழில்நுட்பங்கள் குறித்து கற்றுத்தரவுள்ளனர்.

`எங்களுக்கு எண்டே கிடையாது' என்று தொழில்நுட்பங்கள் அனைத்தும் பரபரவென வளர்ச்சி கண்டுவருகின்றன. இதனால் அவற்றுடன் சேர்ந்து ஓட வேண்டிய கட்டாயம் சாமான்யனுக்கும் வந்துவிட்டது. அப்படியிருக்க பொறியியலாளர்கள் இன்னும் வேகமாக ஓடவேண்டியதாக உள்ளது. அப்படியாக ஓடிக்கொண்டிருக்கும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு லிஃப்ட் கொடுக்கத் தயாராக இருக்கிறது மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (MIT).

இந்த கல்லூரியின் 'Prayatna' என்னும் பிரபல தேசிய அளவிலான டெக் கருத்தரங்கு வரும் பிப்ரவரி 8,9 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (MIT)
மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி (MIT)

செயற்கை நுண்ணறிவு தொடங்கி டீப் லேர்னிங் வரை இன்று உலகத்தை மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் முக்கிய தொழில்நுட்பங்கள் குறித்த பயிலரங்கங்கள் நடைபெறவுள்ளன. அமேசான், பேபால் போன்ற பிரபல நிறுவனங்களைச் சேர்ந்தவர்களே இந்த தொழில்நுட்பங்கள் குறித்து கற்றுத்தரவுள்ளனர். இதுதவிர டெக் போட்டிகள், ஜாலியான விளையாட்டுகள் என களைக்கட்டப்போகிறது நம்ம MIT. இதை முன்னெடுத்து நடத்தும் Association of Computer Technology, MIT-யின் தலைவர் நிரஞ்சனிடம் இதுகுறித்து பேசினோம்.

``8 ஒர்க்-ஷாப்ஸ், 20-க்கும் அதிகமான போட்டிகள் என முன்ன விட இன்னும் பிரமாண்டமாக `Prayatna'-வை நடத்த திட்டமிட்டிருக்கோம். முன்னணி நிறுவனங்களின் இன்டெர்ன்ஷிப்தான் எங்க சிம்போஸியத்தோட முக்கிய ஹைலைட். போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு முன்னணி டெக் கம்பெனிகளிலிருந்து 30 இன்டெர்ன்ஷிப் வாய்ப்புகளும் கிடைக்கப்போகுது.

Amazon Web services, ஒர்க்-ஷாப்'ப அமேசான்ல இருக்குறவங்களே வந்து எடுக்குறாங்க. Hexathlon-னு புதுசா போட்டி ஒண்ண இந்த வருஷம் அறிமுகப்படுத்துறோம். கம்ப்யூட்டர் சயின்ஸ்ல இருக்குற அனைத்து டொமைன்லயுமே ரவுண்ட்ஸ் இருக்கும். இதில் கம்ப்யூட்டர் சயின்ஸ் சம்மந்தப்பட்ட அனைத்திலும் கில்லியாக இருக்கும் ஒரு ஆல்-ரவுண்டரால மட்டும்தான் ஜெயிக்கமுடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்புறம் ஒரு செம ஜாலி மெகா ஈவென்ட் இருக்கு. அதுதான் `Prestige', இது ஒரு சஸ்பென்ஸ் ஈவென்ட். என்ன ரவுண்ட்ஸ்னே ஸ்பாட்லதான் சொல்லுவோம். அதுனால முன்னாடியே ரெடியாகிட்டு வரமுடியாது. இரண்டு நாள் நடக்கப்போற இதோட பரிசுத்தொகை 20,000 ரூபாய். இப்படியான டெக்னிக்கல் இல்லாத ஃபன் ஈவென்ட்ஸும் வச்சிருக்கோம். போன வருஷம் சுமார் 150 காலேஜ்ல இருந்து சுமார் 3,000 மாணவர்கள் பங்கெடுத்துகிட்டாங்க. இந்த வருஷம் இன்னும் கூடுதலாக வருவாங்கனு நம்புறோம்." என்கிறார் உற்சாகமாக!

ஒர்க்-ஷாப் விவரங்கள்
ஒர்க்-ஷாப் விவரங்கள்
MIT
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க... கூடவே உங்களுக்கு தெரிஞ்ச இன்ஜினீயரிங் மாணவர்களுக்கும் இதை தெரியப்படுத்துங்க... அவ்ளோதாங்க..!

இந்த சிம்போஸியம் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளப் பின்வரும் லிங்க்கை கிளிக் செய்யுங்கள்!

https://www.prayatna.org.in

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு