Published:Updated:

USB டைப்-C சார்ஜைப் பயன்படுத்த விரும்பும் பல நாடுகள்; காரணம் இதுதான்!

யூஎஸ்பி டைப்-C சார்ஜ்

முந்தைய காலங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் மொபைல்களில் 30 பின் டாக் கனெக்டர் தான் வரும். அதன்பின்னர் அதைவிடவும் மேம்பட்ட வடிவமான லைட்னிங் கனெக்டரைப் பயன்படுத்தத் தொடங்கியது ஆப்பிள்

USB டைப்-C சார்ஜைப் பயன்படுத்த விரும்பும் பல நாடுகள்; காரணம் இதுதான்!

முந்தைய காலங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் மொபைல்களில் 30 பின் டாக் கனெக்டர் தான் வரும். அதன்பின்னர் அதைவிடவும் மேம்பட்ட வடிவமான லைட்னிங் கனெக்டரைப் பயன்படுத்தத் தொடங்கியது ஆப்பிள்

Published:Updated:
யூஎஸ்பி டைப்-C சார்ஜ்
பொதுவாக மொபைல்களுக்கு யூஎஸ்பி டைப்-C சார்ஜிங் போர்ட்டை உருவாக்க பல நாடுகள் விரும்புகிறது.அந்த வரிசையில் தற்பொழுது பிரேசிலும் இணைந்துள்ளது.

அந்தவகையில் சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அனைத்திற்கும் பொதுவாக டைப்-C சார்ஜிங் போர்ட் கட்டாயமாக பொருத்த வேண்டும் என்று ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கும் , மின்னணு சாதன உற்பத்தியாளர்களுக்கும் அறிவுறுத்திருந்தது. இதனை தொடர்ந்து அமெரிக்காவும் அவர்களது உற்பத்தியாளர்களுக்கு இதனை வலியுறுத்திருந்தது.இந்த வரிசையில் தற்பொழுது யூஎஸ்பி டைப்-C சார்ஜை பயன்படுத்த விரும்பும் மற்றொரு நாடு பிரேசில்.

யூஎஸ்பி  டைப்-C சார்ஜ்
யூஎஸ்பி டைப்-C சார்ஜ்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒயர்லெஸ் ரெகுலேட்டர் உடைய சாதனங்களுக்கு யூஎஸ்பி டைப்-C சார்ஜை பயன்படுத்த பிரேசில் பரிந்துரை செய்திருக்கிறது. இந்தப் பரிந்துரை பற்றி மக்களும், நிறுவனங்களும் தங்களது கருத்தை ஆகஸ்ட் 26 வரை பகிர்ந்து கொள்ளலாம் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.இதுபோன்ற நாடுகள் யூஎஸ்பி டைப்-C சார்ஜை பயன்படுத்துவதற்கு காரணம் மின் கழிவு சிக்கலுக்கு தீர்வு காணுவதற்குதான் என்று தெரிவிக்கிறது.இதன் மூலம் மக்கள் புதிய மின் சாதனங்கள் வாங்கும் பொழுது அவர்களது பழைய சாதனத்தின் சார்ஜரைப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆனால், இதில் பெரும் சிக்கலில் சிக்கயிருப்பது ஆப்பிள் நிறுவனம் தான். முந்தைய காலங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் மொபைல்களில் 30 பின் டாக் கனெக்டர் தான் வரும். அதன்பின்னர் அதைவிடவும் மேம்பட்ட வடிவமான லைட்னிங் கனெக்டரைப் பயன்படுத்தத் தொடங்கியது ஆப்பிள். யூஎஸ்பி- C கனெக்டர்களைப் போலவே, லைட்னிங் கனெக்டர்களும் பல்வேறு வசதிகளைத் தன்னுள்ளே பெற்றிருந்தது. ஸ்லிம்மாக இருப்பதும், வேகமாக மின்சாரத்தைக் கடத்தவும் அது பயன்பட்டது. ஆப்பிள் நிறுவனம் தற்போது தயாரிக்கும் லேப்டாப்களில் எல்லாம் யூஎஸ்பி- C கனெக்டரைத்தான் பயன்படுத்தி வருகிறது. ஆனால், மொபைல்களுக்கு மட்டும் இன்னமும் லைட்னிங் கனெக்டரைத் தான் பயன்படுத்தி வருகிறது .

அதற்கான பிரத்யேகக் காரணங்களும் இல்லாமல் இல்லை. வாடிக்கையாளர்கள் ஐஃபோனைப் பயன்படுத்துவது என்பது பல காலமாகவே ஒரு ஸ்டேட்டஸ் சிம்பலாகவே பார்க்கப்பட்டு வருகிறது. அதில் இருக்கும் எல்லா வசதிகளையும் கடந்து ஸ்டேட்டஸ் சிம்பலும் அதைப் பயன்படுத்துவதற்கு ஒரு முக்கிய காரணம். அப்படியெனில், அதற்கென பிரத்யேகமாக சில விஷயங்களை உருவாக்க வேண்டும். உண்மையில், டைப்- சி கனெக்டர் பயன்படுத்தலாம் என முதலில் முடிவெடுத்த நிறுவனம் ஆப்பிள் தான். ஆனால், அப்போது இந்த தொழில்நுட்பம் அவ்வளவு பரவலாக வரவில்லை. அதனாலேயே , பிரதேயகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே லைட்னிங் கனெக்டரைத் தேர்வு செய்தது ஆப்பிள் நிறுவனம். அதே போல், தற்போது டைப் சி கனெக்டர்களுக்கு மாற வேண்டும் என்றால், ஏற்கெனவே லைட்னிங் கனெக்டர்களுக்கான உதிரிபாக விற்பனையும் பாதிப்படையும். இவையெல்லாவற்றையும் ஆப்பிள் நிறுவனம் கருத்தில் கொண்டு என்ன செய்யப் போகிறது என்பதைத்தான் ஒட்டுமொத்த டெக் உலகமும் எதிர்நோக்கி காத்திருக்கிறது.