Published:Updated:

"விண்வெளி வீரர்... யூடியூப் ஸ்டார்..! - ஜென் Z குழந்தைகளின் ஃபேவரைட் வேலைகள்

நிலவுக்குச் சென்று 50 ஆண்டுகள் ஆனதைப் பல்வேறு விதமாகக் கொண்டாடிவருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக, 8-12 வயதுக்குட்பட்ட 3000 குழந்தைகளிடம் 5 வேலைகளைக் கொடுத்து, அவர்களின் விருப்பமான வேலை எதுவெனக் கேட்டார்கள்.

யூட்யூப்
யூட்யூப் ( யூட்யூப் )

மனிதன் நிலவில் காலடி வைத்து 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதைக் கொண்டாடியது நாசா. அப்போது, நீல் ஆம்ஸ்ட்ராங்தான் குழந்தைகளின் ஹீரோ. விண்வெளி வீரர் ஆக வேண்டுமென்பதுதான் அவர்களின் கனவு. ஆனால், இன்று காலம் மாறிவிட்டது. இந்தக் கால குழந்தைகளில் கனவு வேலை என்ன தெரியுமா? யூடியூப் ஸ்டார்.

நிலவுக்குச் சென்று 50 ஆண்டுகள் ஆனதைப் பல்வேறு விதமாகக் கொண்டாடிவருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக, 8-12 வயதுக்குட்பட்ட 3000 குழந்தைகளிடம் 5 வேலைகளைக் கொடுத்து அவர்களின் விருப்பமான வேலை எதுவெனக் கேட்டார்கள். விண்வெளி வீரர், இசைக்கலைஞர், ஆசிரியர், தடகள வீரர் மற்றும் யூடியூப் ஸ்டார் ஆகியவைதான் எனச் சொன்னார்கள். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சீன நாட்டுக் குழந்தைகளிடம் நடத்தப்பட்ட இந்த சர்வே முடிவுகள், ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடுகிறது. சீன நாட்டுக் குழந்தைகள், விண்வெளி வீரர் ஆவதில் அதிக ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். 56 சதவிகித குழந்தைகளுக்கு விண்வெளி போகவே விருப்பம். ஆனால், அமெரிக்க மற்றும் இங்கிலாந்து நாட்டுக் குழந்தைகளில் 11 சதவிகிதம் பேர் மட்டுமே விண்வெளி வீரர் ஆக விரும்புகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் யூடியூப் ஸ்டார் ஆகவே விரும்புகிறார்கள். சீனாவில் யூடியூப் ஸ்டார் ஆக விரும்பும் குழந்தைகள்தான் குறைவு. அந்த எண்ணிக்கை 11 சதவிகிதம் மட்டுமே.

Results of the Harris Poll survey
Results of the Harris Poll survey
Harris Poll

"தினமும் நான் சந்திக்கும் குழந்தைகளில் 90 பேருக்கு சமூக வலைதளங்களில் ஸ்டார் ஆகவே விருப்பம்" என்கிறார், இங்கிலாந்து நாட்டு ஆசிரியர் ஒருவர். பெற்றோர்களும் அதை ஊக்குவிக்கிறார்கள் என்பதுதான் கவனிக்கத்தக்க அம்சம்.