இப்போது உலகமே வீட்டில் முடங்கியிருக்கும் இந்த நேரத்தில் பொழுதுபோக்குக்காக பலரும் பயன்படுத்துவதால், கடந்த சில வாரங்களில் மட்டும் அதிக அளவிலான வாடிக்கையாளர்களைப் பெற்றுவருகின்றன ஸ்ட்ரீமிங். மக்களைத் தன்வசம் ஈர்க்க பல புதிய வசதிகளை அறிமுகம் செய்யத்தொடங்கியுள்ளன இந்த நிறுவனங்கள். அப்படித்தான் உலகமெங்கும் வாடிக்கையாளர்களை வைத்திருக்கும் நெட்ஃப்ளிக்ஸ், புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

நெட்ஃப்ளிக்ஸ் மொபைல் ஆப்பை உங்களால் `ஸ்கிரீன் லாக்' (Screen lock) செய்யமுடியும். அதென்ன ஸ்கிரீன்லாக் என்கிறீர்களா... உங்கள் போனில் நெட்ஃப்ளிக்ஸ் போன்ற ஆப்களில் வீடியோக்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போது தெரியாமல் கை பட்டு அது பாஸ் ஆகும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். அதைத் தடுக்கவே இந்தப் புதிய வசதி. இந்த ஸ்கிரீன் லாக்கை ஆன் செய்துவிட்டால் தெரியாமல் ஸ்கிரீனை தொட்டுவிட்டாலும் வீடியோ பாஸ் ஆகாது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
லாக்கை எடுத்தால் மட்டுமே ஆப்பில் மற்ற தொடுதிரை வசதிகளைப் பயன்படுத்தமுடியும். இது ஏற்கெனவே MX Player போன்ற சில ஆப்களில் இருக்கிறது. இது பயணத்தின்போது மொபைலில் வீடியோ ஸ்ட்ரீம் செய்வதை இன்னும் சௌகரியமாக்கும்.
மேலும், இந்த இக்கட்டான சூழலிலும் 2020-ன் முதல் காலாண்டில் (மார்ச் வரை) உலகம், முழுவதும் 1.58 கோடி புதிய வாடிக்கையாளர்களைச் சேர்த்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ்.