Published:Updated:

`மூன்று மாடல்கள்; 3 கேமரா; செல்ஃபியில் ஸ்லோ மோஷன்!’ ஆப்பிள் பிரியர்களே தயாராகுங்கள்...!

கார்க்கிபவா

இந்த ஆண்டும் மூன்று புதிய மாடல்களை அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டமிட்டிருக்கிறது. மூன்றிலும் பின்புறம் மூன்று கேமராக்கள் இருக்கும்.

ஆப்பிள் மொபைல்
ஆப்பிள் மொபைல் ( twitter.com/BenGeskin )

ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் மொபைல் ரசிகர்கள் குஷியாகிவிடுவார்கள். ஆப்பிளின் புதிய மொபைல் மாடல்கள் அந்த மாதம் நடக்கும் நிகழ்வில்தான் வெளியாகும். அதற்கு முன்பாக அதிகாரபூர்வமாகவோ அல்லது தகவல்கள் கசிந்தோ அந்தப் புதிய மொபைல்கள் பற்றிய டெக்னிக்கல் விஷயங்கள் வெளியாகும். இந்த ஆண்டும் அப்படிச் சில தகவல்கள் டெக் உலகில் சுற்றத் தொடங்கியிருக்கின்றன.

ஆப்பிள்
ஆப்பிள்

இந்த ஆண்டும் மூன்று புதிய மாடலைகளை அறிமுகப்படுத்த ஆப்பிள் திட்டமிட்டிருக்கிறது. மூன்றிலும் பின்புறம் மூன்று கேமராக்கள் இருக்கும். அதிலொன்று, வைடு ஆங்கிளுக்கானது. மேலும், செல்ஃபி கேமரா மூலமாகவும் ஸ்லோ மோஷன் வீடியோ எடுக்க முடியும்.

ஏற்கெனவே வெளியான ஆப்பிள் மொபைல்களில் ரெட்டினா 2 டிஸ்ப்ளே இருந்தது. புதிய மொபைல்களில் இரண்டு மாடல்களில் ரெட்டினா 3 டிஸ்ப்ளேவும், ஒன்றில் ரெட்டினா 2 டிஸ்ப்ளேவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆப்பிள்
ஆப்பிள்
twitter.com/BenGeskin

ஆப்பிளும் டைப் 'சி' போர்ட்டுக்குத் தாவும் எனச் சென்ற ஆண்டே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாறவில்லை. இந்த ஆண்டும் அது மாறுவதற்கான வாய்ப்பில்லை. மூன்று மொபைல்களிலும் புதிய A13 chip பிராசஸர் இடம்பெறக்கூடும்.

இவையெல்லாம் ஆங்காங்கே டெக் ஆர்வலர்கள் பலர் கணித்திருக்கும் தகவல்கள்தாம். ஆனால், மொபைல் உலகில் இந்த மாதிரி கசியும் தகவல்கள் பெரும்பாலும் உண்மையாகவே இருந்திருப்பதுதான் வரலாறு. இந்த ஆண்டும் அது நடக்குமா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.