Published:Updated:

`சொந்தமாக 3டி பிரின்டர்; மறுசுழற்சி இயந்திரம்!' - லாக்டெளனில் அசத்திய நீலகிரி இளைஞர்

Sesil
Sesil

புனேயில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் நீலகிரி இளைஞர் ஒருவர் ஊரடங்கில் முடங்காமல் உபயோகமானதாக மாற்றி தொழில்நுட்பத்தில் அசத்திவருகிறார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்தவர் செசில் 30 வயதான இவர், மெக்கெட்ரானிக்ஸ் படிப்பை முடித்துவிட்டு தற்போது புனேயில் உள்ள ஒரு தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

Sesil
Sesil

உலகின் மற்ற நாடுகளை அச்சுறுத்திவந்த கொரோனா இந்தியாவிலும் கோரத்தைக் காட்டத்துவங்கியதும் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மற்றவர்களைப் போல இவரும் சொந்த ஊருக்குத் திரும்ப முயற்சி செய்துள்ளார்.

அனைத்து வகையான போக்குவரத்தும் முடக்கப்பட்ட நிலையில் வேறு வழியின்றி செசிலும் தனது அறைக்குள் முடங்கியுள்ளார். முதல் இரண்டு நாள்களிலேயே தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய இவர், தான் நேசிக்கும் கண்டுபிடிப்பில் கவனத்தைச் செலுத்தி முழு செயல்பாட்டில் இறங்கியுள்ளார்.

Sesil
Sesil

கிடைத்த பொருள்களையெல்லாம் வைத்து முதலில் ஒரு 3டி பிரின்டரை உருவாக்கியுள்ளார். பின்னர் பொருள்களை வடிவமைத்து அதன்மூலம் பொருள்களைத் தயாரித்து அசத்திவருகிறார்.

செசிலை தொடர்புகொண்டு பேசினோம், ``மே மாதம் மூன்றாம் தேதி எனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. சற்றும் எதிர்பாராமல் லாக் டெளன் அறிவிக்கப்பட்டது. புனேவிலிருந்து ஊருக்குச் செல்ல முடியவில்லை. முதல் இரண்டு நாள்கள் கஷ்டமாக இருந்தது.

Sesil
Sesil

பின்னர் எனது கனவுத் திட்டமான 3D பிரின்டர் மற்றும் சிறிய அளவிலான மறுசுழற்சி இயந்திரம் உருவாக்கும் பணியைத் துவக்கினேன். முதலில் நானே பிரின்டரை உருவாக்கினேன். பின்னர் இதன்மூலம் சிறிய அளவிலான பொருள்களை உருவாக்கி வருகிறேன். நாள்கள் போனதே தெரியவில்லை. விரைவில் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யும் இயந்திரத்தை உருவாக்குவேன். நேரம் இல்லை என புலம்பிக் கொண்டிருந்தவர்கள் இந்த நேரத்தை அவர்களுக்குப் பிடித்த ஆக்கபூர்வ செயல்களில் ஈடுபடுத்தினால் மனமும் உடலும் நலமுடன் இருக்கும்'' என்றார் உற்சாகமான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு