ட்ரூகாலர் அப்டேட்டில் இருந்த`பக்’ - நடவடிக்கை எடுத்த என்.பி.சி.ஐ! #NPCI
ட்ரூகாலர் நடவடிக்கை எடுக்கும் முன்பே National Payments Corporation of India களத்தில் இறங்கியது. ட்ரூகாலர் ஆப் மூலம் வரும் புதிய பதிவுகளை யு.பி.ஐ தளம் ஏற்காது என அறிவித்திருக்கிறது NPCI. இது தொடர்பான விளக்கம் ஒன்றையும் அந்த அமைப்பு வெளியிட்டிருக்கிறது.

மொபைல் பயனர்கள் மத்தியில் பிரபலமான ஒரு செயலி ட்ரூகாலர். ஐசிஐசிஐ வங்கியுடன் கைகோத்து பேமென்ட் சேவைகளையும் இந்தியாவில் வழங்கி வருகிறது ட்ரூகாலர். உலகம் முழுவதும் பல கோடி பேர் பயன்படுத்தும் இந்தச் செயலி சில நாள்களுக்கு முன்பு சர்ச்சையில் சிக்கியது.
ட்ரூகாலரின் 10.41.6 வெர்ஷனை அப்டேட் செய்தவர்களுக்கு மிகப்பெரிய பிரச்னை தரக்கூடிய 'பக்' ஒன்றும் டவுன்லோடு ஆனது. பயனர்ளின் மொபைல்களிலிருந்து அவர்களுக்கே தெரியாமல் அவர்கள் எண் மூலம் யுபிஐ (Unified Payment Interface) கணக்கைத் தொடங்கியது. குறுஞ்செய்தி மூலம் அது மூலமான தகவல் வந்தாலும், பெரும்பாலானோர் அதைக் கவனிக்கத் தவறிவிட்டனர். இணையம் மூலம் இந்தப் பிரச்னை பற்றிய தகவல்கள் வைரல் ஆனதும் நிறைய பேர் ட்ரூகாலர் செயலியை அன்இன்ஸ்டால் செய்தனர்.
இதைத் தடுக்க ட்ரூகாலர் நடவடிக்கை எடுக்கும் முன்பே National Payments Corporation of India களத்தில் இறங்கியது. ட்ரூகாலர் ஆப் மூலம் வரும் புதிய பதிவுகளை யு.பி.ஐ தளம் ஏற்காது என அறிவித்திருக்கிறது NPCI. இது தொடர்பான விளக்கம் ஒன்றையும் அந்த அமைப்பு வெளியிட்டிருக்கிறது.

இந்தப் பிரச்னை தொடர்பாக விசாரணை நடந்துகொண்டிருப்பதாகவும் மேலதிக தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் NPCIன் தலைமை செயல் அதிகாரி திலீப் சொல்லியிருக்கிறார்.
பிரச்னை கட்டுக்குள் இருந்தாலும் இனி ட்ரூகாலர் செயலி மீதான நம்பிக்கை இந்தியப் பயனர்களிடம் குறைவாகவே இருக்கும். ஸ்பேம் காலர்களை அடையாளம் காட்டவும் அந்த எண்களை பிளாக் செய்யவும் இந்தியர்கள் ட்ரூகாலரைதான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது