Published:Updated:

`கொஞ்சம் ஓரமா போப்பா!' - ப்ரீமியம் செக்மென்ட்டில் ஆப்பிளையும் சாம்சங்கையும் முந்திய மொபைல்

கார்க்கிபவா

2019ன் இரண்டாம் காலாண்டுதான் அதிக ப்ரீமியம் மொபைல்கள் வெளியான காலகட்டம்.

Mobile
Mobile ( Pixabay )

மொபைல் விஷயத்தில் இந்தியர்கள் தாராள குணம் கொண்டவர்களாக மாறிவருகிறார்கள். `10,000-க்குள்ள ஒரு நல்ல ஃபோன் சொல்லுங்க' என்ற குரல்கள் இப்போது `நச்சுன்னு இருக்கணும்... விலை பரவால்ல' என மாறிவிட்டன. ப்ரீமியம் செக்மென்ட்டில் ஆப்பிள், சாம்சங்கின் சில மொபைல்கள் மட்டுமே இருந்ததெல்லாம் அந்தக் காலம். இப்போது அனைத்து பிராண்டுமே ப்ரீமியம் செக்மென்ட்டில் சிக்ஸர் அடிக்கின்றன. அப்படி ஒரு சிக்ஸர் மூலம் முன்னிலையிலிருந்த சாம்சங் மற்றும் ஆப்பிளை ஓரம்கட்டி முதலிடத்துக்கு வந்திருக்கிறது ஒன் ப்ளஸ்.

 ஒன் ப்ளஸ் நிறுவனம்
ஒன் ப்ளஸ் நிறுவனம்

ஒன் ப்ளஸ்ஸின் 7 ப்ரோதான் அந்த நிறுவனத்தின் முதல் 50,000 அதிகமான விலைகொண்ட மொபைல். முதல் மொபைலே 26 சதவிகித பங்கினை எடுத்திருக்கிறது. இரண்டாவது இடத்தில் 22 சதவிகிதத்தோடு சாம்சங் இருக்கிறது. இது,சென்ற ஆண்டைவிட 16 சதவிகிதம் குறைவு. சாம்சங்கின் ப்ரீமியம் செக்மென்ட்டிலே பல மொபைல்கள் உண்டு. ஆனால், ஒன் ப்ளஸ்ஸில் 7 ப்ரோ மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 ன் இரண்டாம் காலாண்டுதான் அதிக ப்ரீமியம் மொபைல்கள் வெளியான காலகட்டம். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவிலே மொபைல்களைத் தயாரிப்பதன் மூலம் வரியைக் குறைத்து விலையைக் கட்டுக்குள் வைக்க முயற்சி செய்து வருகிறது. ஷியொமி, ஓப்போ, விவோ, வாவே எனப் பல சீன நிறுவனங்களும் ப்ரீமியம் மொபைல்கள் வெளியிட்டிருப்பதால் 2019-ன் அடுத்த அரையாண்டு இன்னும் பல உச்சங்களைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.