Published:Updated:

இந்தியாவில் Oneplus Nord 2T 5G மாடல்; எப்படி இருக்கிறது இந்த வெர்சன்?

Oneplus Nord 2T 5G

கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியான Oneplus Nord 2 5G மாடலின், அப்டேட்டேட் வெர்ஷனாக Oneplus Nord 2T 5G மாடலை வெளியிட்டிருக்கிறது ஒன்ப்ளஸ்.

இந்தியாவில் Oneplus Nord 2T 5G மாடல்; எப்படி இருக்கிறது இந்த வெர்சன்?

கடந்த ஆண்டு இந்தியாவில் வெளியான Oneplus Nord 2 5G மாடலின், அப்டேட்டேட் வெர்ஷனாக Oneplus Nord 2T 5G மாடலை வெளியிட்டிருக்கிறது ஒன்ப்ளஸ்.

Published:Updated:
Oneplus Nord 2T 5G

ஒன்பிளஸ் நிறுவனம் புதுப்புது வெர்சன்களை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகிறது.அந்தவகையில் கடந்த ஆண்டு Oneplus Nord 2 5ஜி மாடலை வெளியிட்டு இருந்தது. தற்பொழுது அந்த நிறுவனத்தின் புதிய மாடல் Oneplus Nord 2T 5G இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த oneplus Nord 2T 5ஜி மாடல் Oneplus Nord 2 5ஜி மாடலை விட பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் சிறப்பம்சங்களை பார்ப்பதற்கு முன்பாக OnePlus Nord 2T 5G விலை விவரத்தைப் பார்க்கலாம்.

8 ஜிபி இண்டெர்னல் மெமரி + 128 ஜிபி ஸ்டோரேஜ் - ₹28,999

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

12 ஜிபி இண்டெர்னல் மெமரி + 256 ஜிபி ஸ்டோரேஜ் - ₹33,999

இது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான Oxygen OS 12.1 மூலம் தான் செயல்படுகிறது . 6.43 இன்ச் முழு HD+ (1,080x2,400 பிக்சல்கள்) AMOLED டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. விலைக்கு ஏற்ற 90Hz refresh Rate டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு ஆதரவும் இதில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 1300 SoC மூலம் இயக்கப்படுகிறது.முந்தைய Nord 2 5ஜி ஆனது 65W சார்ஜிங், டைமன்சிட்டி சிப்செட் ஆதரவை மட்டுமே கொண்டிருந்தது. ஆனால் இந்த அப்கிரேடட் மாடல் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கிறது . 50 எம்பி சோனி IMX766 முதன்மை சென்சார் இதில் பொருத்தப்பட்டிருக்கிறது. 32 எம்பி Sony IMX615 செல்பி கேமராவை இந்த சாதனம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் எடை 190 கிராமாக இருக்கும்.

Oneplus Nord 2T  5G
Oneplus Nord 2T 5G

இந்த மாடல் ஜூலை 5 முதல் விற்பனைக்கு கிடைக்கும். இது Gray Shadow மற்றும் Jade Fog வண்ணங்களில் வெளிவர இருக்கிறது. அமேசான், ஒன்பிளஸ்.இன், ஒன்பிளஸ் ஸ்டோர் ஆப்ஸ், ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர் மற்றும் நாட்டில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் இவை கிடைக்கும் .