Published:Updated:

`20Mbps வேகத்தில் ஃபைல் டிரான்ஸ்ஃபர்!' - ஒன்று சேர்ந்த சீன நிறுவனங்கள்

File Transfer
News
File Transfer

இதன் மூலமாக தேர்டு பார்ட்டி ஷேரிங் ஆப்களின் பயன்பாடு குறையலாம்.

ஆண்ட்ராய்டில் ஸ்மார்ட்போன்களுக்கிடையே ஃபைல் டிரான்ஸ்ஃபர் செய்வதற்கு ஷேர்இட் போன்ற தேர்டு பார்ட்டி ஆப்களின் பயன்பாடே அதிகமாக இருக்கிறது. அதைத் தவிர்த்துப் பார்த்தால் ஒவ்வொரு நிறுவனமும் அவர்களுக்கென தனியாக ஆப்களை வைத்திருக்கிறார்கள்.

File Transfer
File Transfer

இவற்றைப் பயன்படுத்துவதில் சில சிக்கல்களைக் குறைக்கும் நோக்கில் சீனாவைச் சேர்ந்த முக்கியமான மூன்று மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்திருக்கின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஷியோமி, ஓப்போ மற்றும் விவோ ஆகிய இதற்காக வேறு எந்த தேர்டு பார்ட்டி அப்ளிகேஷன்களும் தேவைப்படாது. இதன் மூலமாக முன்று மொபைல்களுக்கும் பொதுவான ஒரு ஷேரிங் தளம் ஒன்று உருவாக்கப்படும். இதைப் பயன்படுத்தி வீடியோ, ஆடியோ என அனைத்து வகையான ஃபைல்களையும் மற்ற மொபைல்களுடன் ஷேர் செய்து கொள்ளலாம்.

File Transfer
File Transfer

ப்ளூடூத் மூலமாக இரண்டு மொபைல்களுக்கு இடையே இணைப்பு உருவாக்கப்படும். இதன் மூலமாக அதிகபட்சமாக 20 MB/s வேகத்தில் ஃபைல் டிரான்ஸ்ஃபர் செய்துகொள்ள முடியும். இந்த வசதிக்கு என்ன பெயர் வைக்கப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஓப்போ, விவோ ஆகிய நிறுவனங்கள் தற்போது இதில் இருக்கும் நிலையில் விருப்பம் இருப்பவர்கள் வந்து இந்தக் கூட்டணியில் இணைந்துகொள்ளலாம் எனவும் ஷியோமி தெரிவித்துள்ளது.