Election bannerElection banner
Published:Updated:

`எப்படி அவ்வளவு பெரிய குற்றச்சாட்டை சுமத்தினாங்க?’ -பதிலளிக்கும் விஞ்ஞானி நம்பி நாராயணன் #Video

நம்பி நாராயணன்
நம்பி நாராயணன்

உங்கள் விகடன் வெப் டி.வி-யில், ‘பிரபலங்களுடன் பேசலாம் வாங்க’ எனும் புதிய நிகழ்ச்சி இது. பட்டிமன்றப் பேச்சாளர்கள் எஸ்.ராஜா - பாரதி பாஸ்கர் இணைந்து கேள்விகளை முன்வைக்க, பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பதில் சொல்ல வருகிறார்கள்.

பூமியில மட்டுமில்லாம விண்வெளியிலும் அதிகாரம் பெற்ற நாடாக இந்தியா இருக்கணும்னு விரும்பியவர்... Cryogenics எனும் கடுங்குளிரியல் ஆய்வுத் திட்டங்கள்ல முதன்மையாகச் செயல்பட்டவர்... விக்கிரம் சாராபாய், சதீஷ் தவான், அப்துல் கலாம் போன்ற பெரும் ஆளுமைகளுடன் பணிபுரிந்தவர். ‘நாட்டின் ஏவுகணை ரகசியங்களை விற்றதாக’ குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு, பிறகு சிபிஐ, சுப்ரீம் கோர்ட் இரண்டும் நிரபராதினு சொல்லிட, விடுவிக்கப்பட்டவர்... நாகர்கோவிலில் பிறந்த தமிழர். இயற்பியல் அறிஞர் ஐன்ஸ்டைன் வகுப்பெடுத்த பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்...

விஞ்ஞானி
விஞ்ஞானி

நாசா ஃபெல்லோஷிப் கிடைச்சும் அமெரிக்கக் குடியுரிமை கிடைச்சும், அதையெல்லாம் மறுத்து இந்தியாவுக்குத் திரும்பியவர், எளிமையான உறுதியான மனிதர்.

யார் இவர்?

இந்திய விண்வெளி ஆய்வுமையத்தின் முன்னாள் விஞ்ஞானி பத்மபூஷன் திரு. நம்பி நாராயணன்!

  • எப்படி அவ்வளவு பெரிய ஒரு குற்றச்சாட்டை சுமத்தினாங்க… அதற்குப் பின்னால யார் இருந்தாங்க?

  • நடிகர் மாதவன் உங்களது வாழ்க்கையை சினிமாவாக எடுக்கிறாரே... படம் பார்த்தீர்களா?

  • இந்தியா, விண்வெளி ஆய்வில் இன்று முன்னேறியிருக்குனு நினைக்கிறீங்களா?

  • உங்களை காவல்துறை சித்ரவதை செய்ததா?

  • சந்திரயான் 2-வை ஏன் விமர்சிக்கிறீர்கள்?

  • அப்துல் கலாம் அழைப்பை ஏன் மறுத்தீர்கள்?

  • சிறை நாட்களில் கற்ற முக்கியமான பாடம் என்ன?

  • ஹிட்லரைக் கொல்ல திட்டமிட்டவனை சந்தித்தீர்களாமே?

  • காமராஜர் உங்களிடம் ஏன் கோபப்பட்டார்?

இப்படி நிறைய கேள்விகள்… சுவாரஸ்யமான பதில்கள்!

உங்கள் விகடன் வெப் டி.வி-யில், ‘பிரபலங்களுடன் பேசலாம் வாங்க’ எனும் புதிய நிகழ்ச்சி இது. பட்டிமன்றப் பேச்சாளர்கள் எஸ்.ராஜா - பாரதி பாஸ்கர் இணைந்து கேள்விகளை முன்வைக்க, பல துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் பதில் சொல்ல வருகிறார்கள்.

மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாய்

உணர்ச்சிகரமான உரையாடல்கள்!

பிரபலங்களுடன் பேசலாம் வாங்க!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு