Published:Updated:

ஒண்ணுமில்லைன்னு பேர் வச்சுட்டு இவ்ளோ விலையா ? லீக்கான Nothing விலைப்பட்டியல்!

Phone 1 ( Nothing )

Nothing என்னும் பெயரில் ஒரு கேட்ஜெட்ஸ் நிறுவனம் இருப்பது தெரியுமா?

ஒண்ணுமில்லைன்னு பேர் வச்சுட்டு இவ்ளோ விலையா ? லீக்கான Nothing விலைப்பட்டியல்!

Nothing என்னும் பெயரில் ஒரு கேட்ஜெட்ஸ் நிறுவனம் இருப்பது தெரியுமா?

Published:Updated:
Phone 1 ( Nothing )

இந்த நிறுவனம் இப்போது வரையில் ஒரே ஒரு TWS ஹெட்செட்டை மட்டுமே வெளியிட்டு இருக்கிறது. அந்த ஹெட்செட்டை கடந்த ஜனவரி மாதம் வரையில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் வாங்கியிருக்கிறார்கள். ஒன்பிளஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து அதிலிருந்து பிரிந்து தனியாக கார்ல் பே ஆரம்பித்த நிறுவனம் தான் நத்திங் . அதாங்க ஒண்ணுமில்ல.

ear (1)
ear (1)
Nothing

ஒன் பிளஸ் ஆரம்பிக்கப்பட்டபோது , அதன் முதல் சீரிஸ் மொபைல்களைப் பெற இன்வைட் வைத்திருப்பது அவசியம். அந்த சீக்ரெட் கோடை வைத்துத்தான் அமேசான் தளத்தில் ஒன் பிளஸ் மொபைலை வாங்க முடியும். எந்தவொரு நிறுவனமும் ஆரம்பிக்கப்படும்போது, இப்படியான ஹைப்புகளை உருவாக்குவது சகஜம்தான். இப்போது நாம் எல்லோரும் அதிகம் பயன்படுத்தும் ஜிமெயில்கூட ஆரம்பக்கட்ட காலத்தில் இன்வைட் ஒன்லி மோடில் தான் இயங்கியது. இப்போது அதுவல்ல விஷயம். நத்திங் நிறுவனம் ஜூலை 12ம் தேதி வெளியிட இருக்கும் தங்கள் முதல் மொபைலை வாங்குவதற்கு இப்போதே போட்டா போட்டி நடக்கிறது என்பதுதான் டெக் உலகின் வைரல் டாக்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அந்த மொபைலை வாங்கக் காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்கள் மட்டும் 1,50,000 பேர். அதாவது இன்வைட் வைத்திருப்பவர்கள் வாங்கிய பின்னர், இவர்களுக்கு அந்த மொபைலை வழங்குமாம் நத்திங் நிறுவனம். தற்போது அந்த மொபைல் என்ன விலையில் வெளியாகப் போகிறது என்பதும் வழக்கம்போல யாருக்கும் தெரியாமல் லீக் ஆகியிருக்கிறது.

8 ஜிபி ரேம் + 128 ஜிபி இண்டெர்னல் மெமரி மாடலுக்கு ரூ.31,300
8 ஜிபி ரேம் + 256 ஜிபி இண்டெர்னல் மெமரி மாடலுக்கு ரூ.33,000
12 ஜிபி ரேம் + 256 ஜிபி இண்டெர்னல் மெமரி மாடலுக்கு ரூ.35,900

என விலை நிர்ணயம் செய்திருக்கிறார்கள் என அரசல் புரசலாக செய்தி வெளியாகியிருக்கிறது.

உலக அளவில் ஜூலை 12ம் தேதிக்குப் பிறகு இரண்டு வாரங்கள் கழித்துத்தான் இந்த மொபைல் வாடிக்கையாளர்களின் கைகளுக்கு கிட்டும் என நம்பப்படுகிறது. சரி, அப்படி ஏக பில்டப்புடன் வெளியாகும் இந்த மொபைலின் பெயர் என்ன தெரியுமா? Phone (1) . ஏதே இதுதான் பெயரா என்கிறீர்களா?. இவர்கள் ஏற்கெனவே வெளியிட்ட இந்த TWS ஹெட்செட்டின் பெயர் ear (1). எல்லாமே நத்திங் தான் போல.