Published:Updated:

PUBG இல்லைனா என்ன... இந்த கேம்ஸையெல்லாம் ட்ரை பண்ணிப் பார்க்கலாமே ப்ரோ!

PUBG Alternatives

PUBG தடை குறித்து மக்களுக்கு இன்னும் சில சந்தேகங்கள் இருக்கின்றன. அதற்கான விடைகளை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

PUBG இல்லைனா என்ன... இந்த கேம்ஸையெல்லாம் ட்ரை பண்ணிப் பார்க்கலாமே ப்ரோ!

PUBG தடை குறித்து மக்களுக்கு இன்னும் சில சந்தேகங்கள் இருக்கின்றன. அதற்கான விடைகளை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

Published:Updated:
PUBG Alternatives

சில மாதங்களாகவே சீன-இந்திய எல்லைப்பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவிவருகிறது. இந்நிலையில் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி சீன ஆப்களை தடைசெய்து வருகிறது மத்திய அரசு. ஏற்கெனவே டிக் டாக் உட்பட 59 ஆப்கள் தடைசெய்யப்பட்டிருக்கும் சூழலில் கூடுதலாக 118 ஆப்களைத் தடைசெய்வதாகச் சமீபத்தில் அறிவித்திருக்கிறது அரசு. இதில் பிரபல மொபைல் விளையாட்டான PUBG-ம் இடம்பெற்றிருக்கிறது. இந்தியாவில் மிகவும் பிரபலமான கேமிங் ஆப்பாக இருந்துவந்தது PUBG. இந்தியாவில் மட்டும் 3.3 கோடி பயனாளர்கள் PUBG ஆடிவந்தனர். இந்த அறிவிப்பு என்பது PUBG ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. PUBG தடை குறித்து மக்களுக்கு இன்னும் சில சந்தேகங்கள் இருக்கின்றன. அதற்கான விடைகளை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

Pubg
Pubg

தடை எப்படி அமலுக்கு வருகிறது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஏற்கெனவே கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது PUBG. இணையச் சேவை நிறுவனங்களிடம் (ISP) இந்த ஆப்களுக்கு இணையம் தரக்கூடாது என்று அரசு தரப்பில் உத்தரவு பிறப்பிக்கப்படும். தற்போது, தடைக்கு முன்பு PUBG பதிவிறக்கிய சிலரால் இன்னும் கேம் ஆட முடிகிறதுதான். இதனால் இன்னும் தடை முழுவதுமாக அமலுக்கு வரவில்லை என்று சொல்லலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

PUBG-க்கும் சீனாவுக்கும் என்ன தொடர்பு?

Tencent
Tencent
Mark Schiefelbein

இந்தக் கேள்விக்குத் தெளிவான பதில் என்று ஒன்று இல்லை. PUBG-யை உருவாக்கியவர் ஐயர்லேந்தை சேர்ந்த பிரண்டன் என்பவர். வடிவமைத்துத் தயாரித்த கேம் ஸ்டூடியோ (Bluehole) கொரியாவைச் சேர்ந்தது. PC, Xbox, PS வெர்ஷன்களில் நேரடி சீன தொடர்பு என்பதே கிடையாது. ஆனால், மொபைல் வெர்ஷனை வெளியிடுவது மட்டும்தான் 'டென்சென்ட் கேம்ஸ்' என்னும் சீன நிறுவனம். இதனால்தான் மொபைல் கேமுக்கு மட்டும் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. PC, Xbox, PS வெர்ஷன்களில் உங்களால் தொடர்ந்து PUBG ஆட முடியும்.

மீண்டும் வருமா PUBG?

இந்தத் தடைக்கு அரசு சொல்லும் முக்கியக் காரணம் இந்தியா அல்லாத இடங்களிலுள்ள சர்வர்களில் இந்தியப் பயனர்களின் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன என்பதுதான். இதையும் இந்திய அரசு சுட்டிக்காட்டும் மற்ற சிக்கல்களையும் இந்த ஆப்களால் சரிசெய்ய முடியும்பட்சத்தில் தடைசெய்யப்பட்ட இந்த ஆப்கள் மீண்டும் வர வாய்ப்பிருக்கிறதுதான். ஆனால் இரண்டு மாதங்களுக்கு முன்பு தடைசெய்யப்பட்ட டிக் டாக் போன்ற ஆப்களுக்கு இன்னும் தடை நீங்கவில்லை என்பதால் PUBG விரைவில் மீண்டும் வர வாய்ப்புகள் குறைவுதான். தடை நீங்க இந்திய அரசுடன் கலந்தாலோசித்து வேண்டியதைச் செய்வோம் என டென்சென்ட் கேம்ஸ் தரப்பும் தெரிவித்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த தடையால் சீனாவுக்கு இழப்பு எவ்வளவு?

Boycott china
Boycott china

PUBG மொபைல் வெர்ஷனை பொறுத்தவரையில் இருப்பதிலேயே இந்தியாவில்தான் பயனாளர்கள் அதிகம். அதனால், இந்த தடை என்பது சீனாவின் மிக முக்கிய டெக் நிறுவனமான டென்சென்ட் ஹோல்ட்டிங்ஸுக்கு மிகப்பெரிய பின்னடைவு. இந்த அறிவிப்பு வந்த இரண்டே நாட்களில் சந்தை மதிப்பில் 34 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்திருக்கிறது டென்சென்ட்.

PUBG மாற்றுகள் எவை?

PUBG ஹிட்டாக முக்கிய காரணம் அதிலிருக்கும் 'Battle Royale' வகை போட்டிதான். ஒரு தீவில் 100 பேர் இறக்கிவிடப்படுவர். கடைசி வரை தாக்குப்பிடிப்பவர் வெற்றியாளர். இதைத் தனியாகவும் ஆடலாம், குழுவாகவும் ஆடலாம். இந்த 'Battle Royale' என்பது PUBG-க்கே மட்டுமான சிறப்பு அம்சம் எல்லாம் இல்லை. எக்கச்சக்க Battle Royale கேம்ஸ் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. சொல்லப்போனால் இப்போது தடைசெய்யப்பட்டிருக்கும் 118 ஆப்களிலேயே சில பிரபலமில்லாத Battle Royale கேம்ஸ் இடம்பெற்றுள்ளன. அதனால் Battle Royale கேம்ஸுக்கு பஞ்சமில்லை. அதைச் சரியாக வடிவமைத்ததில்தான் வெற்றிகண்டது PUBG. அப்படி ஹிட்டடித்த சில மொபைல் Battle Royale கேம்ஸை பற்றிப் பார்ப்போம். PUBG-ஐ அதிகம் மிஸ் செய்வீர்கள் என்றால் இந்த கேம்ஸை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

Call Of Duty Mobile
FPS எனப்படும் First Person Shooter கேம்களில் மிகவும் பிரபல ஃபிரான்சைஸ் 'கால் ஆஃப் டியூட்டி'. இதை COD எனச் சுருக்கமாக அழைப்பார்கள்.
Call Of Duty Mobile
Call Of Duty Mobile

Xbox, ப்ளே ஸ்டேஷன் போன்ற கேமிங் கன்சோல்களிலும் பிசியிலும் பல வருடங்களாக வெளிவந்து கொண்டிருக்கின்றன 'கால் ஆஃப் டியூட்டி' கேம்கள். 90'ஸ் கிட்ஸ் பலரும் இந்த கேமை நிச்சயம் ஒரு முறையாவது ஆடியிருப்பார்கள். அப்படி இல்லை என்றாலும் கேள்வியாவது பட்டிருப்பார்கள். அந்த அளவுக்கு ஷூட்டிங் கேம்களில் மிகப் பிரபலமானவையாக இருந்துவருகின்றன COD கேம்கள்.

முதல்முறையாக இந்த கேமின் மொபைல் வெர்ஷன் கடந்த ஆண்டு அறிமுகமானது. FPS போட்டிகள்தான் அதிகம் என்றாலும் இதிலும் Battle Royale உண்டு. இதுவும் கிட்டத்தட்ட PUBG-ல் இருப்பது போன்ற அதே செட்-அப்தான். தரமான கிராஃபிக்ஸ் இந்த கேமின் முக்கிய ப்ளஸ். அதற்கேற்ற இடமும் (2 GB வரை) மொபைலில் எடுத்துக்கொள்கிறது. கடந்த வருடமே PUBG வெறியர்கள் சிலர் COD பக்கம் தாவிவிட்டார்கள் (தோனி உட்பட). தொடர்ந்து புதிய மேப்ஸ், புதிய கன்ஸ், வித்தியாசமான போட்டிகள் என மாதம் மாதம் கலக்கல் அப்டேட்டும் வந்துவிடுவதால் PUBG-யை மிஸ் செய்பவர்கள் முதலில் முயற்சி செய்து பார்க்க வேண்டியது COD-யைதான்.

ஆப்பிள் ஸ்டோர் ரேட்டிங்- 4.8 (11,00,000 ரேட்டிங்ஸ்)

கூகுள் ப்ளே ஸ்டோர் ரேட்டிங்- 4.5 (1,04,44,000 ரேட்டிங்ஸ்)

குறிப்பு: Activision என்ற அமெரிக்கா நிறுவனம் தயாரித்த கேம் என்றாலும் இதையும் சீன நிறுவனமான டென்சென்ட் கேம்ஸ்தான் வெளியிடுகிறது என்பதால் இதற்கும் தடை வர வாய்ப்பிருக்கிறது.
Garena Free Fire
இந்தியர்கள் அதிகம் பேரால் ஆடப்படும் மற்றுமொரு Battle Royale கேம் இது. சொல்லப்போனால் ஏ, பி சென்டர்களில்தான் PUBG மாஸ் ஹிட், சி சென்டரில் ஃபரீ ஃபயர்தான் கெத்து.

50 பேர் Battle Royale கேம் இது. 'ஏழைகளின் PUBG' என அழைக்கும் அளவுக்கு பட்ஜெட் போன்களுக்கெனவே செதுக்கப்பட்ட கேம் ஃபரீ ஃபயர். வாகனங்களை ஓட்டுவது, பிளேயர் தோற்றத்தை மாற்றுவது, புதுப்புது கன்ஸ் தருவது என PUBG-ல் இருக்கும் அம்சங்கள் பலவற்றையும் அதிக ஸ்டோரேஜூம் புராசஸிங் பவரும் எடுத்துக்கொள்ளாமல் ஃபரீ ஃபயர் தருகிறது. மொத்தமாகவே 500 MB ஸ்டோரேஜை மட்டுமே எடுத்துக்கொள்கிறது, 1 GB RAM இருந்தாலே எந்த ஒரு சிக்கலும் இன்றி ஃபரீ ஃபயர் ஆடிவிடலாம். இருப்பினும் ஹை-கிராபிக்ஸில் PUBG ஆடிவிட்டு ஃப்ரீ ஃபயர் பக்கம் வந்தால் கொஞ்சம் ஏமாற்றம் இருக்கவே செய்யும். இந்திய ரசிகர்களைக் குறிவைத்துப் பல விஷயங்களை அறிமுகம் செய்துவருகிறது ஃப்ரீ ஃபயர். சமீபத்தில்தான் ஹ்ரித்திக் ரோஷன் உருவத்தில் ஒரு கதாபாத்திரத்தை கேம்மில் அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

Garena Free Fire
Garena Free Fire

உலக அளவில் இதுவரை 50 கோடி பேர் ஃபரீ ஃபயரை பதிவிறக்கம் செய்திருக்கின்றனர். எந்த ஒரு சீனத் தொடர்பும் இல்லை என்பதால் இங்குத் தடைசெய்யப்படும் வாய்ப்புகளும் குறைவுதான். இதை கேரீனா (Garena) என்ற சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று தயாரித்து வெளியிடுகிறது.

ஆப்பிள் ஸ்டோர் ரேட்டிங்- 3.9 (97,800 ரேட்டிங்ஸ்)

கூகுள் ப்ளே ஸ்டோர் ரேட்டிங்- 4.1 (6,16,15,867 ரேட்டிங்ஸ்)

Ark: Survival Evolved
இது மற்ற Battle Royale கேம்களிலிருந்து கொஞ்சம் வித்தியாசமானது. அப்படியென்ன பெரிய வித்தியாசம் என்கிறீர்களா? இந்த கேம்மில் டைனோசார்கள் உண்டு.
Ark: Survival Evolved
Ark: Survival Evolved

நீர், நிலம், காற்று என ஒவ்வொன்றிலும் சிறப்பாகச் செயல்பாடும் டைனோசார்கள் இருக்கும். மொத்தம் 80 வகையான டைனோசார்கள் இந்த கேம்மில் இருக்கின்றன. அவற்றைப் பிடித்து உங்களால் பயிற்சி அளிக்க முடியும். எதிரிகளைக் கொள்ள அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம். நாமும் ஆயுதங்கள், உடைகள் மற்றும் சில பொருட்களைச் சேகரித்து தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் டைனாசார்களுடனெல்லாம் சண்டை செய்ய முடியும். இந்த கேம்மை நண்பர்களுடன் சேர்ந்து குழுவாகவும் ஆடலாம், இல்லை தனியாகவும் களமிறங்கலாம். ஆண்ட்ராய்டு போனில் 2.4 GB வரை ஸ்டோரேஜ் எடுத்துக்கொள்கிறது இந்த கேம்.

ஆப்பிள் ஸ்டோர் ரேட்டிங்- 4.4 (67,900 ரேட்டிங்ஸ்)

கூகுள் ப்ளே ஸ்டோர் ரேட்டிங்- 4.0 (4,82,635 ரேட்டிங்ஸ்)

Fortnite
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிகம் ஆடப்படும் Battle Royale கேம் ஃபோர்ட்நைட்தான். PUBG-ல் ரியலிசம் இருக்கும் என்றால் இதில் ஒரு காமிக் ஃபீல் இருக்கும்.
Fortnite
Fortnite

ஆனால், ஃபோர்ட்நைட்டின் மொபைல் வெர்ஷனில் சில சிக்கல்கள் உண்டு. ஆப்பிள், கூகுள் என இரண்டு ஆப் ஸ்டோர்களிலுமே ஃபோர்ட்நைட் தற்போது இல்லை. தொடர்ந்து இந்த ஆப் ஸ்டோர்களிலிருக்கும் நடைமுறைகளுக்கு எதிராகப் பேசிவருகிறது ஃபோர்ட்நைட்டை வெளியிடும் எபிக் கேம்ஸ் நிறுவனம். ஆப்பிள் மீது சமீபத்தில்தான் வழக்கு தொடர்ந்திருக்கிறது எபிக் கேம்ஸ். இதனால் தற்போது ஆப்பிள் சாதனங்களில் ஃபோர்ட்நைட் ஆட முடியாதுதான். ஆனால் ஆண்ட்ராய்டு பயனாளர்கள் அவர்களது இணையதளத்திலிருந்து கேம்மை பதிவிறக்கிக்கொள்ளலாம். கிராபிக்ஸ் ஹெவி கேம் என்பதெல்லாம் ஓகேதான், ஆனால் மிகவும் அதிக ஸ்டோரேஜ் (8 GB வரை) எடுத்துக்கொள்கிறது ஃபோர்ட்நைட். ஒரு மொபைல் கேமுக்கு இது மிகவும் அதிகம். இதனால் பட்ஜெட் போன்களில் ஃபோர்ட்நைட் ஆடுவது கிட்டத்தட்ட முடியாத காரியம்தான். குறைந்தபட்சம் 4 GB RAM, மிட்ரேஞ்ச் அல்லது ப்ரீமியம் புராசஸர் இருந்தால்தான் ஃபோர்ட்நைட் உங்கள் போனில் லோடே ஆகும். ஆனால், வேற லெவல் கிராபிக்ஸ், தரமான கேம் பிளே என PUBG-யை விடவும் சிறந்த கேம்மாகவே ஃபோர்ட்நைட்டை பலரும் கருதுகின்றனர். அதனால் வாய்ப்பிருப்பவர்கள் போர்ட்நைட் முயற்சி செய்துபார்க்கலாம்.

Hopeless Land: Fight for Survival
மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறத்தொடங்கியிருக்கும் மற்றுமொரு Battle Royale கேம் இது. இதில் 121 பேர் வரை ஒரு Battle Royale கேம்மில் களமிறக்கப்படுகிறார்கள். கடைசி வரை உயிர்பிழைப்பவர் வெற்றியாளர்.
Hopeless Land: Fight for Survival
Hopeless Land: Fight for Survival

முக்கியமாக இந்த கேமில் ஒரு ஆசிய லுக் இருக்கிறது. இதிலுள்ள இடங்கள் நம்மூரை நினைவுபடுத்துவதாக அமைக்கப்பட்டிருக்கின்றன. எவ்வளவு நல்ல ஆயுதங்கள் இருந்தாலும் தெளிவான திட்டமிடல் இருந்தால்தான் இதில் வெற்றிபெற முடியும். ஹெலிகாப்டர் போன்ற உயர்ரக வாகனங்களும் இந்த கேமில் உண்டு. இதுவரை கூகுள் பிளே ஸ்டோரில் மட்டும் இந்த கேம்மை 5 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். பட்ஜெட் போன்களிலேயே எளிதாக எந்தப் பிரச்னையுமின்றி இந்த கேமை ஆட முடியும். இப்போதுதான் மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக பிக்-அப்பாக தொடங்கியிருக்கிறது இந்த கேம்.

ஆப்பிள் ஸ்டோர் ரேட்டிங்- 3.9 (1,200 ரேட்டிங்ஸ்)

கூகுள் ப்ளே ஸ்டோர் ரேட்டிங்- 3.9 (16,47,327 ரேட்டிங்ஸ்)

Battlelands Royale, ScarFall: The Royale Combat, Pixel’s Unknown Battle Grounds, Black Survival, Danger Close, Zooba என இன்னும் பல 'battle royale' கேம்களை பட்டியலிட்டுக்கொண்டே இருக்கலாம். ஆனால் அப்படியே PUBG ஆடியது போன்ற உணர்வைத் தரவேண்டும் என்றால் COD Mobile-ம் போர்ட்நைட்டும் பெஸ்ட் சாய்ஸ்.

இதில் ஏதேனும் கேம்களை நீங்கள் ஆடியிருக்கிறார்களா? உங்கள் கருத்துகளை கமென்ட்களில் பதிவிடுங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism