Published:Updated:

₹294 கோடி... உங்கள் குழந்தைகளைக் குறிவைத்த விளம்பரங்களின் தொகை இது!

குழந்தைகளுக்கு விளம்பரம் பிடித்திருந்தாலே போதும், அடுத்த சில மணி நேரத்தில் அந்தப் பொருள் வீட்டில் இருக்கும் என்ற சூட்சுமத்தைத் தெரிந்துகொண்டுள்ள பல்வேறு விளம்பர நிறுவனங்கள் குழந்தைகளைக் கவரும் விதத்தில் அனிமேஷன்களாவும், குழந்தைகளை வைத்தும் விளம்பரங்களை எடுக்கின்றன.

TV Advertisement
TV Advertisement

புதிதாக ஒரு பொருளைத் தயாரித்து விட்டு அதை மக்களிடம் எப்படி எடுத்துச் செல்வது, அதை எப்படி வாங்க வைப்பது என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கு உதவியாக இருப்பது விளம்பரங்கள்தான். விளம்பரங்கள் இல்லாவிட்டால் உங்கள் பொருளை மக்களிடம் ஒழுங்காக எடுத்துச்செல்ல முடியாது. அதுவும் மக்களுக்குப் பிடித்த வகையில் சரியான விளம்பரங்கள் இல்லையேல், அதற்கான பணமும் வீண்தான். தற்போதைய காலத்துக்கு ஏற்ப டிஜிட்டலில், பத்திரிகைகளில் என விளம்பரத்துறையும் அதிக வளர்ச்சியடைந்துள்ளது.

Advertisement
Advertisement

நாம் அனைவரும் விளம்பரங்கள் சூழ்ந்த ஓர் உலகில்தான் வசித்து வருகிறோம். நம் வீட்டில் தொலைக்காட்சியில், ரேடியோ, பத்திரிகைகள், வீதியில் எனப் பார்க்கும் இடங்களில் எல்லாம் விளம்பரங்கள். விளம்பரம் என்பது கலையும் அறிவியலும் கலந்த ஒரு தொழில்நுட்பம் என்றே சொல்லலாம். எத்தனை தரமான பொருளாக இருந்தாலும் அதற்கென அழகான விளம்பரம் ஒன்றை உருவாக்கத் தெரியாவிட்டால் அதற்குப் பிரயோஜனமே இல்லை.

குழந்தைகளுக்கு விளம்பரம் பிடித்திருந்தாலே போதும், அடுத்த சில மணி நேரத்தில் அந்தப் பொருள் வீட்டில் இருக்கும் என்ற சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டுள்ள பல்வேறு விளம்பர நிறுவனங்கள் குழந்தைகளைக் கவரும் விதத்தில் அனிமேஷன்களாவும், குழந்தைகளை வைத்தும் விளம்பரங்களை எடுக்கின்றன. இதற்காகக் கோடிக்கணக்கில் பணத்தைச் செலவழித்து விளம்பரங்களையும் எடுத்து வருகின்றன. இதுபற்றிய சுவாரஸ்யமான புள்ளிவிவரம் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது.
TV Remote
TV Remote

PwC Kids Digital Media Report - 2019 அறிக்கையின்படி, 2016-ம் ஆண்டு குழந்தைகளை இலக்காகக் கொண்ட டிஜிட்டல் விளம்பரமானது 15 சதவிகிதம் மட்டுமே இருந்தது. ஆனால் அதற்கடுத்த மூன்று ஆண்டுகளில் 22 சதவிகிதம் அதிகரித்துள்ளது. வருகிற அடுத்த மூன்று ஆண்டுகளில் இது 37 சதவிகிதமாக அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு வினாடிக்கும் இரண்டு குழந்தைகள் புதிதாக ஆன்லைனுக்கு வருகின்றனர். மூன்றில் ஒரு குழந்தை இணையத்தைப் பயன்படுத்துகிறது.
PwC Kids Digital Media Report - 2019
குழந்தைகள் Vs விளம்பரங்கள்
குழந்தைகள் Vs விளம்பரங்கள்
Vikatan Infographics

2018-ம் ஆண்டு கணக்குப்படி, உலகம் முழுவதும் 6.2 கோடி குழந்தைகள் இணையதளத்தைப் பயன்படுத்துகின்றனர். இதில் 40 சதவிகிதம் பேர் இணையத்துக்குப் புதிதானவர்கள். ஒவ்வொரு விநாடிக்கும் இரண்டு குழந்தைகள் புதிதாக ஆன்லைனுக்கு வருகின்றனர். மூன்றில் ஒரு குழந்தை இணையத்தைப் பயன்படுத்துகிறது. அதிகமாக யூடியூபில் 31 சதவிகிதமும், சமூக வலைதளங்களில் 25 சதவிகிதமும் விளம்பரங்களைப் பார்க்கின்றனர். இதற்கேற்றாற்போல் விளம்பரங்களும் லட்சக்கணக்கில் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

குறிப்பாகத் தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களை விட ஆன்லைனில் வரும் விளம்பரங்கள் அதிகம். இதற்காகக் கடந்த ஆண்டு 63 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. டிஜிட்டல் அல்லாத தளங்களில் விளம்பரங்கள் வெளியிட 231 கோடி செலவிட்டுள்ளனர். 2018-ல் மொத்தமாக 294 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர். இதன்படி பார்த்தால் 2021-ம் ஆண்டு டிஜிட்டலில் மட்டும் 119 கோடிக்குச் செலவு அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Advertisement

இந்தத் தொகையானது கடந்த மூன்று ஆண்டுகளைக் காட்டிலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு டிஜிட்டல் தளங்களில் வெளிவரும் விளம்பரங்களுக்காக 21.6 சதவிகிதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.