Published:Updated:

`இஸ்ரோவின் `NavIC' சேவைக்கான சிப்கள் ரெடி..!’- உங்கள் வாகனம் ரெடியா?

NavIC
NavIC ( Youtube )

இஸ்ரோவின் இந்த சேவை செயல்பாட்டுக்கு வந்தவுடன் அவற்றை வாகனங்களில் பயன்படுத்துவதற்காக 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் NavIC ட்ராக்கர்களை உருவாக்கி வருகின்றன.

உலகெங்கும் தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஜிபிஎஸ் சேவைக்கு மாற்றாக இந்தியாவிற்காகப் பிரத்யேகமாக இஸ்ரோ உருவாக்கி இருக்கிற சேவை NavIC (NAVigation with Indian Constellation). இதை ஜிபிஎஸ்ஸுக்கு மாற்றாக கார் தொடங்கி கப்பல் வரை எதிலும் பயன்படுத்தக்கூடிய இஸ்ரோவின் உள்நாட்டுத் தயாரிப்பு.

Xiaomi
Xiaomi
Chinadaily.cn.com

இந்தியாவின் NavIC சேவையைப் பெறும் வகையிலான சிப்களைத் தயாரிப்பதற்காக குவால்கம் நிறுவனத்துடன் இஸ்ரோ ஒப்பந்தம் செய்திருந்தது. தற்போது அந்த வசதியுடனான மூன்று சிப்களை வெளியிட்டுள்ளது குவால்கம் நிறுவனம். Snapdragon 720G, 662 மற்றும் 460 ஆகிய மூன்று சிப்கள் NavIc-ன் சிக்னல்களைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றை தற்போது வெளியிட்டுள்ளது அந்நிறுவனம்.

`இனி அமெரிக்க GPS வேண்டாம்... இந்தியாவின் NavIC ரெடி!' இஸ்ரோ அதிரடி
இந்தியாவின் இந்த NavIC சேவையானது அமெரிக்காவின் GPS-ஐ விட துல்லியமானதாக இருக்கும்
இஸ்ரோ

4G, Wi-fi 6 மற்றும் bluetooth 5.1 ஆகிய வசதிகளையும் இந்த சிப்கள் உள்ளடக்கியுள்ளன என்று குவால்கம் நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று சிப்களையும் தங்களுடைய பட்ஜெட் மற்றும் ப்ரீமியம் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்த ஷாவ்மி நிறுவனமும் ரியல்மீ நிறுவனமும் ஒப்பந்தமாகியுள்ளன. கூடிய விரைவில் NavIc வசதியுடன் கூடிய ஸ்மார்ட் போன்கள் வெளியிடப்படும் என இஸ்ரோ தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.

NavIc
NavIc
Twitter.com
  • மேலும், இஸ்ரோவின் இந்த சேவை செயல்பாட்டுக்கு வந்தவுடன் அவற்றை வாகனங்களில் பயன்படுத்துவதற்காக 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் NavIC ட்ராக்கர்களை உருவாக்கி வருகின்றன.

  • கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் NavIC ட்ராக்கர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த NavIC சேவையானது அமெரிக்காவின் GPS-ஐ விட துல்லியமானதாக இருக்கும் என்று இஸ்ரோ தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பின் செல்ல