Published:Updated:

மோட்டார் கிளினிக்

மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்

நீங்கள் நகர்ப்புறங்களில் ஸ்கூட்டரை அதிகமாகப் பயன்படுத்துவீர்கள் என்றால், ஜூபிட்டர் நல்ல தேர்வாக இருக்கும்.

மோட்டார் கிளினிக்

நீங்கள் நகர்ப்புறங்களில் ஸ்கூட்டரை அதிகமாகப் பயன்படுத்துவீர்கள் என்றால், ஜூபிட்டர் நல்ல தேர்வாக இருக்கும்.

Published:Updated:
மோட்டார் கிளினிக்
பிரீமியம் ஸ்டோரி
மோட்டார் கிளினிக்

நான் ஏற்கெனவே பஜாஜ் பல்ஸர் 150, ராயல் என்ஃபீல்டு புல்லட் வைத்திருக்கிறேன். தற்போது புதிதாக ஒரு தரமான ஸ்கூட்டர் வாங்க விரும்புகிறேன். முதுகு வலி தராத சொகுசான பயணம், கால் வைக்க நல்ல இடவசதி வேண்டும். ஆக்டிவா 125, ஆக்ஸஸ் 125, ஜூபிட்டர் 110 ஆகியவற்றில் எதைத் தேர்வு செய்யலாம்?

- முஹம்மது அசாருதீன், இராமநாதபுரம்.

மோட்டார் கிளினிக்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நீங்கள் நகர்ப்புறங்களில் ஸ்கூட்டரை அதிகமாகப் பயன்படுத்துவீர்கள் என்றால், ஜூபிட்டர் நல்ல தேர்வாக இருக்கும். ஏனெனில் இதில் இருக்கும் 110சிசி இன்ஜின், எதிர்பார்த்தபடியே 125சிசி ஸ்கூட்டர்களைவிட பவர்குறைவாக உள்ளது. ஆனால் 125 சிசி ஸ்கூட்டர்களிலேயே இல்லாத பின்பக்க 12 இன்ச் வீல் மற்றும் கேஸ் ஷாக் அப்ஸார்பர் காரணமாக, ஜூபிட்டரின் ஓட்டுதல் அனுபவம் சொகுசாக இருக்கிறது. மெட்டல் பாடி என்பதால், ஸ்கூட்டரின் கட்டுமானமும் சிறப்பாக அமைந்திருக்கிறது. மற்றபடி நீங்கள் குறிப்பிட்ட 125சிசி ஸ்கூட்டர்களில், ஆக்ஸஸ் 125 நல்ல தேர்வாக இருக்கும். 125சிசி செக்மென்ட்டின் டாப் செல்லிங் மாடலாக இது இருப்பதே, அதன் வெற்றிக்கான சான்று. இதன் BS-6 வெர்ஷனில் வெளிப்புற பெட்ரோல் டேங்க் மூடி, புதிய இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், LED ஹெட்லைட் ஆகிய புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டன. என்றாலும் போட்டியாளர்களுடன் ஒப்பிட்டால், வசதிகளில் பின்தங்கிவிடுகிறது ஆக்ஸஸ். இந்தக் குறைபாடு, பெர்ஃபாமன்ஸ் மற்றும் ஓட்டுதலில் சரிக்கட்டப்பட்டுவிட்டது. எனவே டெஸ்ட் டிரைவ் செய்துவிட்டு, உங்களுக்கான ஆப்ஷனை வாங்கவும்.

மோட்டார் கிளினிக்

நான் முதன்முறையாக கார் வாங்கப் போகிறேன். நான் ஒரு வாரத்தில் 2-3 நாள்கள் அதைப் பயன்படுத்துவேன் (ஒரு நாளில் 60-70 கிமீ). பெலினோ, டிசையர், கிளான்ஸா ஆகியவற்றின் மிட் வேரியன்ட்களில் ஒன்றே எனது சாய்ஸ். இதில் எது சிறந்தது? குறைவான பராமரிப்புச் செலவுகள் மற்றும் அதிக மைலேஜைத் தரும் கார் எது? கொடுக்கும் பணத்துக்கான மதிப்பு மற்றும் அதிக வசதிகள் அவசியம்.

- எம்.சுரேஷ் கண்ணன், அரியலூர்.

பேட்ஜைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், பெலினோவும் கிளான்ஸாவும் ஒன்றுதான். எனவே டிசைன், இன்ஜின் - கியர்பாக்ஸ், வசதிகள் ஆகியவற்றில் ஒற்றுமைகளே அதிகம். ஆனால் மாருதி சுஸூகியுடன் ஒப்பிட்டால், கொஞ்சம் குறைவான விலையில் அதிக வாரன்ட்டியுடன் டொயோட்டா வருவது கவனிக்கத்தக்கது. அதிக மைலேஜ் வேண்டும் என்றால், SHVS உடன் வரும் மாடலைத் தேர்வு செய்வது நலம். BS-6 வெர்ஷனில் ஃபேஸ்லிஃப்ட் ஆகி இருக்கும் டிசையர், முன்பைவிட வித்தியாசமான முன்பக்கத் தோற்றத்துடன் வருகிறது. மேலும் 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனுடன், இந்த காம்பேக்ட் செடான் கிடைக்கிறது. மற்றபடி நீங்கள் குறிப்பிட்ட அனைத்துமே 4 மீட்டருக்குட்பட்ட கார்கள் என்பதால், இடவசதியில் இவை ஒரே மாதிரிதான் உள்ளன. என்றாலும், செடான் வடிவமைப்பு தேவை என்றால் டிசையரையும், ப்ரீமியம் ஹேட்ச்பேக் வேண்டும் என்றால் கிளான்ஸாவையும் டிக் அடிக்கலாம்.

மோட்டார் கிளினிக்

என்னுடைய பட்ஜெட் 1.5 லட்ச ரூபாய். நான் புதிதாக வாங்கப்போகும் 150-160சிசி பைக்கில், பெரும்பாலும் தனியாகத்தான் செல்வேன். அது ஸ்டைலாக இருக்க வேண்டும் என்பதுடன், ஓரளவுக்கு நல்ல மைலேஜும் தருவது நலம். பல்ஸர் 150 ட்வின் டிஸ்க், ஹோண்டா எக்ஸ்-ப்ளேடு ஆகியவற்றில் எது எனக்கு ஏற்றதாக இருக்கும்? இதே விலையில் வேறு ஆப்ஷன்கள் இருக்கின்றனவா?

- விக்னேஷ்வரன், வந்தவாசி.

உங்கள் பட்ஜெட்டில், 200சிசி பைக்குகளையே வாங்க முடியும். நீங்கள் குறிப்பிட்ட இரு மாடல்களுமே, பிராக்டிக்கலான 150-160சிசி பைக் வேண்டும் என்பவர்களை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் பல்ஸரைவிட 2,000 - 6,000 அதிக விலையில் (சென்னை எக்ஸ்-ஷோரூம்) கிடைக்கக்கூடிய எக்ஸ்-ப்ளேடில் அதனை நியாயப்படுத்தும்படி LED ஹெட்லைட், கியர் இண்டிகேட்டருடன் கூடிய டிஜிட்டல் மீட்டர், அகலமான பின்பக்க டயர் (130/70-17), Hazard இண்டிகேட்டர்கள், பெட்டல் டிஸ்க் பிரேக்ஸ், டூயல் போர்ட் எக்ஸாஸ்ட், 0.15kgm அதிக டார்க்கைத் தரும் பெரிய 162.7சிசி இன்ஜின் (1.47kgm), 6 கிலோ குறைவான எடை (144 கிலோ), மோனோஷாக், லேட்டஸ்ட் டிசைன் என அசத்துகிறது. மற்றபடி பல்ஸர் 150 ட்வின் டிஸ்க் பைக்குக்குப் பதிலாக, எக்ஸ்-ப்ளேடின் டூயல் டிஸ்க் வேரியன்ட்டின் விலையில் கிடைக்கக்கூடிய பல்ஸர் NS160 பைக்கை நீங்கள் பரிசிலிக்கலாம். இது பெயருக்கேற்றபடியே NS200 பைக்கின் மினி வெர்ஷனாகக் கவர்கிறது.

மோட்டார் கிளினிக்

எனது முதல் கார், காம்பேக்ட் எஸ்யூவியாக இருக்கவேண்டும். அதில் 5 பேருக்கான இடவசதி, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், சன்ரூஃப் ஆகியவை இருப்பது அவசியம். மாதத்துக்கு 1,000 கிமீதான் காரைப் பயன்படுத்துவேன் என்பதால், பெட்ரோல் காரே போதுமானது. எனது பட்ஜெட்டான 12-15 லட்ச ரூபாய்க்கு என்னென்ன மாடல்கள் கிடைக்கும்? கியாவின் தயாரிப்புகள் எனக்குப் பிடித்திருக்கிறது. டிரைவர் வைத்து கார் ஓட்டுவேன் என்றாலும், மாதம் ஒருமுறை குடும்பத்துடன் பயணம் மேற்கொள்வேன்.

அருண், சென்னை.

சோனெட்டின் புக்கிங் தொடங்கிய முதல் நாளிலேயே 6,523 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டன! மேலும் தற்போதைய சூழலில், புக்கிங் எண்ணிக்கை 35,000 கார்களைக் கடந்துவிட்டது. தவிர, முதல் மாதத்திலேயே 9,266 கார்களை கியா நிறுவனம் நம் நாட்டில் விற்பனை செய்திருக்கிறது. 5 பேருக்கான இடவசதியைத் தவிர, நீங்கள் குறிப்பிட்ட அம்சங்கள் அனைத்தும் சொனெட்டில் இருக்கின்றன. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலில் மட்டுமே ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைப்பதால் (iMT/DCT), காரைக் கட்டாயமாக டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கவும். செல்ட்டோஸ் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்தாலும், அதன் விலை உங்கள் பட்ஜெட்டைவிட அதிகமாக உள்ளது. தவிர இதிலிருக்கும் 1.5 லிட்டர் NA பெட்ரோல் இன்ஜினின் அராய் மைலேஜும் குறைவுதான். மற்றபடி இந்த கார்களின் ஒரிஜினல் வெர்ஷன்களான வென்யூ மற்றும் க்ரெட்டா ஆகியவற்றைக் கூட நீங்கள் பரிசிலிக்கலாம். விலை - டிசைன் - வசதிகளில் சில வித்தியாசம் இருக்கும்.

உங்கள் கேள்விகள், சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும், எங்களுக்கு எழுதுங்கள்.

அனுப்ப வேண்டிய முகவரி: மோட்டார் கிளினிக், மோட்டார் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2. இ-மெயில்: motor@vikatan.com

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism