Published:Updated:

`ரூபாய் நோட்டை அடையாளம் காண சிறப்பு ஆப்!' - பார்வையற்றவர்களுக்கு உதவும் ரிசர்வ் வங்கி

பார்வையற்றோருக்கு உதவும் வகையில், ரூபாய் நோட்டுகளை அடையாளம் காணப் பயன்படும் புதிய செயலியை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.

MANI ஆப்
MANI ஆப்

பார்வையற்றோருக்கு உதவும் வகையில் செயலி ஒன்றை வெளியிட்டுள்ளது ரிசர்வ் வங்கி. நேற்று (1.1.2020) அன்று பார்வையற்றோருக்கு உதவும் வகையில் ரூபாய் நோட்டுகளை அடையாளம் காணப் பயன்படும் புதிய செயலியை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் அறிமுகம் செய்து வைத்தார்.

`ரூபாய் நோட்டை அடையாளம் காண சிறப்பு ஆப்!' - பார்வையற்றவர்களுக்கு உதவும் ரிசர்வ் வங்கி
`இனி 24 மணி நேர சேவை; பொதுமக்களின் ஆர்வம்!'- நெஃப்ட் குறித்து ரிசர்வ் வங்கி

இந்தப் புதிய செயலியைக் கூகுள் மற்றும் ஐ.ஓ.எஸ் இரண்டிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 'MANI' (Mobile Aided Note Identifier) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து இணைய வசதி இல்லாமலேயே பயன்படுத்த முடியும்.

ரூபாய் நோட்டுகளை மொபைல் கேமராவில் ஸ்கேன் செய்ய வேண்டும். அதன் பின்னர் இந்தச் செயலியானது அது எத்தனை ரூபாய் நோட்டு என்று ஒலி வடிவில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தெரிவிக்கும்.

RBI
RBI
இந்தச் செயலியானது போலி ரூபாய் நோட்டுகளை அடையாளம் காணாது என்றும் ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் விழித்திறன் சவாலுடன் கேட்கும் திறன் சவால்களும் இருப்பவர்களுக்கு மொபைல் அதிர்வின் மூலம் இந்தத் தகவலைத் தெரிவிக்கும் வசதியும் இந்தச் செயலியில் கொடுக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப் பதிவிறக்க லிங்க்:

ஆண்ட்ராய்டு: https://play.google.com/store/apps/details?id=com.rbi.mani

ஐஓஎஸ்: https://apps.apple.com/app/id1491441464