Published:Updated:

5G மொபைல்களான Realme X50 Pro vs IQOO 3, வித்தியாசங்கள் மற்றும் சிறப்புகள் என்னென்ன? #VikatanGadgets

Realme X50 Pro vs IQOO 3
Realme X50 Pro vs IQOO 3

IQOO நிறுவனம் சீனாவில் விவோவின் துணை நிறுவனமாக இருந்தாலும் இந்தியாவில் ஸ்மார்ட் போன் சந்தையில் தனிப்பட்ட நிறுவனமாகவே நுழைந்துள்ளது

இந்தியாவின் முதல் 5G ஸ்மார்ட் போன் என்ற டேக் லைனுடன் இரு நாள்களுக்கு முன்னர் Realme X50 Pro வெளியானது. அதைத் தொடர்ந்து விவோ நிறுவனத்தின் துணை நிறுவனமான IQOO இந்தியாவில் தங்கள் முதல் ஸ்மார்ட் 5G போன் IQOO 3 யை நேற்று வெளியிட்டுள்ளது. (IQOO நிறுவனம் சீனாவில் விவோவின் துணை நிறுவனமாக இருந்தாலும், இந்தியாவில் ஸ்மார்ட் போன் சந்தையில் தனிப்பட்ட நிறுவனமாகவே நுழைந்துள்ளது.)

இந்தியாவில் 5G அலைக்கற்றைப் பயன்பாட்டுக்கு வர பல மாதங்கள் ஆகும் என்றாலும், பல மொபைல் நிறுவனங்கள் தொடர்ந்து 5G ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் இந்த இரண்டு போன்களின் (Realme X50 pro மற்றும் IQOO 3) சிறப்பம்சங்கள் மற்றும் வித்தியாசங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.

ரியல்மீ X50 Pro 5G
ரியல்மீ X50 Pro 5G

விலை:

விலையைப் பொறுத்தவரை இரண்டு மொபைல்களிலுமே மாற்றமே இல்லை. ஹை-என்ஃட் வேரியன்ட்டான 12GB RAM, 256 GB ROM கொண்ட வேரியன்ட் இரண்டிலுமே 45,000 ரூபாய்தான். அதற்குக் கீழ் 8GB மற்றும் 6GB வேரியன்டுகளில் Realme X50 pro-வும் 8GB வேரியன்டில் IQOO 3-யும் கிடைக்கின்றன.

Realme X50 pro விலை விபரம்:

6 GB RAM, 128 GB ROM - ரூ.37,999

8 GB RAM, 128 GB ROM - ரூ.39,999

12 GB RAM, 256 GB ROM - ரூ.49,999

IQOO 3 விலை விபரம்:

8 GB RAM, 128 GB ROM - ரூ.36,990

8 GB RAM, 256 GB ROM - ரூ.39,990

12 GB RAM, 256 GB ROM - ரூ.44,990

மிரட்டும் கேமரா, அசத்தும் டிஸ்ப்ளே... ரியல்மீ X-ன் ப்ளஸ், மைனஸ் என்ன? #VikatanGadgetReview

பேட்டரி:

Realme X50 pro-வில் 4200 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 65W பாஸ்ட் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளதால் 45 நிமிடங்களில் முழுவதுமாக சார்ஜ் ஆகி விடும் எனக் கூறியுள்ளது ரியல்மீ. அதோடு LPDDR5 RAM பயன்படுத்தப்பட்டுள்ளதால் குறைவாகவே பேட்டரி செலவாகும். அதனால் நீண்ட நேரம் சார்ஜ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IQOO 3-யில் 4440 mAh லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் 55W பாஸ்ட் சார்ஜிங் வசதிதான் கொடுக்கப்பட்டுள்ளது. 30 நிமிடங்களில் ஐம்பது சதவிகிதம் சார்ஜ் ஆகும் எனத் தெரிகிறது. இதிலும் LPDDR5 RAM பயன்படுத்தப்பட்டுள்ளதால் குறைவாகவே பேட்டரி செலவாகும் எனத் தெரிகிறது.

IQOO 3
IQOO 3

புராஸசர்:

இரண்டு மொபைல்களிலுமே Qualcomm Snapdragon 865 புராசஸர்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. குவால்காமின் இந்த சிப்செட்டானது 5G மொபைல்களுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மொபைல் பயன்பாட்டையே அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்லும் வகையில் இதன் செயல்பாடு இருக்கும் என குவால்கம் நிறுவனம் கூறியுள்ளது. அதோடு டெஸ்க்டாப்பில் கேம் விளையாடும் அனுபவத்தை மொபைலிலேயே இந்த 865 புராஸசர் கொடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மொபைல்களிமே கேம் விளையாடும்போது எந்தவொரு தொய்வும் இருக்காது சிறப்பான அனுபவத்தையே கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மீயில் வேப்பர் கூலிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளதால் பெரிதாக மொபைல் சூடாகாது எனக் கூறப்பட்டுள்ளது.

கேமரா:

Realme X50 pro:

64MP + 12MP + 8MP + 2MP பின்புறக் கேமரா

8MP இரண்டு முன்பக்க மேமரா

IQOO 3:

48MP + 13MP + 13MP + 2MP பின்புறக் கேமரா

16MP முன்பக்க கேமரா

ரியல்மீ X50 Pro
ரியல்மீ X50 Pro

சிறப்பம்சங்கள்:

IQOO 3 டாப் எண்ட் வேரியன்ட் மட்டும் 5G சப்போர்டுடன் வெளியிடப்பட்டுள்ளது. மற்ற இரண்டு வேரியன்டுகளும் 4G சப்போர்டிலேயே இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. IQOO 3-யில் புதிதாக போனின் பக்கவாட்டில் பிரஷர் டிடெக்ஷன் சென்சார் (Pressure Detection Sensor) கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கேம் விளையாடும்போது டிஸ்பிளேவில் மட்டுமல்லாது நம் கைக்கு எட்டும் வகையில் பக்கவாட்டிலும் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனால் சிறப்பானதொரு கேமிங் அனுபவத்தைப் பெற முடியும்.

Realme-யில் Color OS 7.1 பயன்படுத்தப்பட்டுள்ளது. IQOO-வில் IQOO UI 1.0 பயன்படுத்தப்பட்டுள்ளது. Colour OS இதற்கு முன் வந்த ரியல்மீ மொபைல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதால் அதன் செயல்பாடுகள் எப்படி எனத் தெரிந்திருக்கும். IQOO UI இந்தியப் பயனர்களுக்கு இப்போதுதான் அறிமுகமாகியிருப்பதால் அதன் செயல்பாடுகளை எப்படி எனப் பயன்பாட்டின்போதே தெரியவரும்.

`மின்னல் வேக சார்ஜிங் வசதி, 90Hz டிஸ்ப்ளே!'  - மெர்சலாக களமிறங்கும் ரியல்மீ X2 ப்ரோ

இரண்டு மொபைல் போன்களுமே இப்போதுதான் வெளியாகியிருக்கின்றன என்பதால் அதன் முழுமையான செயல்பாடுகள் எப்படி இருக்கும் எனப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு