Published:Updated:

"தீபாவளி முதல் 5ஜி சேவை; 2.3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!" - ஜியோவின் அதிரடி திட்டங்கள்

முகேஷ் அம்பானி

இந்த நிகழ்வில் முகேஷ் அம்பானி தனது மகள் இஷா அம்பானியை ரிலையன்ஸ் குழுமத்தின் ரீடைல் (சில்லறை) வணிகத்தின் தலைவராக அறிமுகப்படுத்தினார்.

"தீபாவளி முதல் 5ஜி சேவை; 2.3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு!" - ஜியோவின் அதிரடி திட்டங்கள்

இந்த நிகழ்வில் முகேஷ் அம்பானி தனது மகள் இஷா அம்பானியை ரிலையன்ஸ் குழுமத்தின் ரீடைல் (சில்லறை) வணிகத்தின் தலைவராக அறிமுகப்படுத்தினார்.

Published:Updated:
முகேஷ் அம்பானி
ஜியோ நிறுவனத்தின் 45-வது வருடாந்திர பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஜியோ நிறுவனத்தின் 5ஜி சேவை குறித்தும் நிறுவனத்தின் அடுத்தக் கட்ட செயல்பாடுகள் குறித்தும் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்நிலையியல் இந்த நிகழ்ச்சியில் வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் உயர்மட்ட அதிகாரிகளிடம் கலந்துரையாடினர் முகேஷ் அம்பானி.
5ஜி
5ஜி

அப்போது பேசிய அவர், "தீபாவளி முதல் ஜியோவின் 5ஜி சேவையை நடைமுறைப்படுத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். இதன் முதற்கட்டமாக டெல்லி, மும்பை, சென்னை,கொல்கத்தா உள்ளிட்ட நான்கு நகரங்களில் 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வரவுள்ளது. ஏற்கெனவே குறிப்பிட்டதன்படி பெங்களூரு, சென்னை, காந்தி நகர், சண்டிகர், அகமதாபாத், குருகிராம், புனே, ஹைதராபாத், ஜாம்நகர் மற்றும் லக்னோ போன்ற முக்கிய மெட்ரோ நகரங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வரும். அதைத் தொடர்ந்து விரைவில் இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் 5ஜி சேவை பயன்பாட்டிற்கு வரும். இந்த 5ஜி சேவை சரியான விலையில் எல்லா மக்களும் பயன்படுத்தும் வகையில் இருக்கும்" என்று கூறியுள்ளார்.

இஷா அம்பானி
இஷா அம்பானி

இந்த நிகழ்வில் முகேஷ் அம்பானி தனது மகள் இஷா அம்பானியை ரிலையன்ஸ் குழுமத்தின் ரீடைல் (சில்லறை) வணிகத்தின் தலைவராக அறிமுகப்படுத்தினார். அப்போது, "ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் உலக அளவில் முக்கிய நிறுவனமாக வளர்ந்து வருகிறது. இதன் மூலம் சுமார் 2.3 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது" என்பதையும் குறிப்பிட்டிருந்தார்.

ரிலையன்ஸ் குழுமத்தின் ரீடைல் (சில்லறை) வணிகத்தின் தலைவராக தான் முன்னெடுக்கவுள்ள எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசிய முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, "பழங்குடியினர் மற்றும் பிற விளிம்புநிலை மக்களால் உற்பத்தி செய்யப்படும் தரமான பொருள்களை விரைவில் இந்தியா முழுவதும் சந்தைப்படுத்தத் தொடங்குவோம். அதுமட்டுமில்லாமல் 'வாட்ஸ்அப்-ஜியோமார்ட்' இணைந்து பல புதிய திட்டங்களையும், இன்னும் பல புதிய தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்று கூறினார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
முகேஷ் அம்பானி, கடந்த ஜூன் மாதம் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் என்கிற தொலைத் தொடர்பு பிரிவின் தலைவராக அவரது மகன் ஆகாஷ் அம்பானியை நியமித்தது குறிப்பிடத்தக்கது.

ஜியோ - மெட்டா நிறுவனம் இணைப்பில் உருவாகிவுள்ள 'வாட்ஸ்அப்-ஜியோமார்ட்' திட்டம் குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மார்க் சக்கர்பார்க், "இந்தியாவில் ஜியோமார்ட் உடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது வாட்ஸ்அப்பில் எங்களின் முதல் எண்ட்-டு-எண்ட் ஷாப்பிங் அனுபவமாக இருக்கும். இனி மக்கள் 'வாட்ஸ்அப்' செயலியின் மூலம் ஜியோமார்ட்டில் மளிகைப் பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். இது மக்களையும் வணிகத்தையும் இணைக்கும் பாலமாக இருக்கும். இந்த 'பிசினஸ் மெசேஜ்' அமைப்பை விரைவில் மக்களும் தங்களது பிசினஸ்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.

இது தவிர, கிரீன் ஹைட்ரஜன் திட்டம், சோலார் எனர்ஜி திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் பற்றி இந்தக் கூட்டதில் கலந்துரையாடப்பட்டது.