Published:Updated:

`இனி அவ்வளவு ஈஸியா மெசேஜை ஃபார்வேர்டு பண்ணமுடியாது..!' -வாட்ஸ்அப்பின் புதிய கட்டுப்பாடு

கு.தினகரன்
கார்த்திகேயன் மேடி
வாட்ஸ்அப் வதந்திகள்
வாட்ஸ்அப் வதந்திகள் ( கார்த்திகேயன் மேடி )

போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நேற்று வாட்ஸ்அப் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

கொரோனா வைரஸைவிட அது பற்றிய வதந்திகள் வேகமாகப் பரவி வருகின்றன. பெரும்பாலும் வாட்ஸ்அப்பில் வலம் வரும் போலிச் செய்திகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வாட்ஸ்அப் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. ஒரு செய்தியை ஒரே நேரத்தில் ஒரு குழுவுக்கோ அல்லது ஒரு நபருக்கோ மட்டுமே ஃபார்வேர்டு பண்ண இயலும். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு ஒரு நேரத்தில் மெசேஜை இனி ஃபார்வேர்டு செய்ய இயலாது. இதற்குமுன் ஒரு செய்தியை ஒரே நேரத்தில் ஐந்து பேருக்கு ஃபார்வேர்டு செய்ய முடியும்.

போலிச் செய்திகள் மற்றும் தவறான தகவல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நேற்று வாட்ஸ்அப் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

Whatsapp
Whatsapp
குறைக்கப்பட்ட வாட்ஸ்அப் ஸ்டேடஸ் நேரம்... காரணம் என்ன தெரியுமா?

உலகெங்கிலும் உள்ள மக்களைப் பாதிக்கும் கொரோனா வைரஸ் பரவும் இந்தக் காலத்தில் வாட்ஸ்அப்பின் இந்தப் புது அப்டேட் வரவேற்கத்தக்கது. மேலும், பகிரப்பட்ட செய்திகளின் உண்மைத் தன்மையைச் சரிபார்க்க ஒரு சிறப்பு அம்சத்தையும் வாட்ஸ்அப் சமீபத்தில் கொண்டுவந்துள்ளது.

இந்தியா உட்பட பல நாடுகளில் லாக்டவுனால் பலரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளதால், வாட்ஸ்அப் ஃபார்வேர்டு எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளன என்று வாட்ஸ்அப் நிறுவனம் கூறியுள்ளது. வீட்டிலேயே இருக்கும் மக்கள் வாட்ஸ்அப்பை அதிகம் பயன்படுத்துகின்றனர், ஆதாரமில்லாத போலிச் செய்திகளை பல்வேறு குழுக்களுக்கு ஃபார்வேர்டு செய்துவருகின்றனர். இந்த மாதிரியான நேரத்தில் தவறான தகவல் பரவலுக்கு இது மிகப்பெரிய பங்களிக்க வாய்ப்புள்ளது என வாட்ஸ்அப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எனவே, வாட்ஸ்அப் ஒரு நேரத்தில் ஒரு நபருக்கோ, ஒரு குழுவுக்கோ மட்டுமே ஃபார்வேர்டு மெசேஜை அனுப்பும்படி செய்துள்ளது. ஒரு மெசேஜை, காபி செய்து எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், மக்கள் எளிதாக ஒரே கிளிக்கில் பலருக்கும் இனி ஃபார்வேர்டு செய்ய முடியாது.

whatsapp
whatsapp

வாட்ஸ்அப் கடந்த ஆண்டு ஆகஸ்டில் அறிமுகப்படுத்திய வசதியின்படி அடிக்கடி ஃபார்வேர்டு செய்யப்படும் மெசேஜ்கள் `Frequently Forwarded' எனக் குறிப்பிடப்படும். இதன்‌ மூலம் அந்த மெசேஜ் நெருங்கிய தொடர்பிலிருந்து வரவில்லை, பலமுறை ஃபார்வேர்டு செய்யப்பட்ட செய்தி என்பதை எளிதில் அடையாளம் காண முடிந்தது. இந்தப் புதிய அப்டேட் மூலம் அதிகமான போலித் தகவல்களும் செய்திகளும் பரவுவது மேலும் குறையும் என எதிர்பார்க்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு