Published:Updated:

ஆர்ட்ஸ் காலேஜ்ல ரெடியான அசத்தல் ரோபோ!

``ஆர்ட்ஸ்&சயின்ஸ் குரூப் படிக்கிறவங்களால், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் வெற்றி பெறுவது சாத்தியமானு கேட்டாங்க!"

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``ஒரு ஆள் செய்யும் வேலைகளை ரோபோ செய்தால் எப்படியிருக்கும் என்று விரிந்த சின்ன கற்பனை தான் எங்களின் கண்டுப்பிடிப்பான சாரா. இவள் எங்களில் ஒருத்தி" என ஆறு அடி ரோபோ ஒன்றை அறிமுகம் செய்கிறார் சென்னை கல்லூரியின் மாணவியான மதுமிதா. "சாரா இவங்களுக்கு வழிக்காட்டு" என்று மதுமிதா, சாரா ரோபோவுக்கு கட்டளையிட்டதும், மதுமிதாவின் வார்த்தைகளை கோடிங்கில் புரிந்து கொண்டு, அந்த கல்லூரி முழுவதையும் நமக்கு விளக்க ஆரம்பித்தது ரோபோ சாரா.

``இந்தியாவை தலைநிமிரச் செய்வோம்" - ரோபோ ஒலிம்பிக்குக்குத் தேர்வாகிய இந்தியாவின் முதல் பெண்கள் அணி!

சில நிமிடங்கள் ஆச்சரியத்தில் உச்சத்திலிருந்த நம்மை, "எப்படி எங்களின் கண்டுபிடிப்பு?" என கேட்டு மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருகிறார் மதுமிதா. ``இது என்னோட தனிப்பட்ட கண்டுபிடிப்பு இல்ல நான் உட்பட என் தோழிகளான மதுமிதா, வித்திகா, நிவேதனி, பாவனா, குஷி, ஹேமப்பிரியா என ஆறு பேரின் எட்டு மாத உழைப்பு" என்று சொல்லும் இளநிலை பி.சி.ஏ மாணவிகளான இவர்கள் ரோபோ உருவாக்கியது பற்றியும், அதில் சந்தித்த சவால்கள் பற்றியும் விளக்கினர்.

``பொதுவாக அறிவியல் கண்டுபிடிப்புகள் என்றாலே பொறியியல் கல்லூரியைச் சேர்ந்தவர்கள்தான் உருவாக்குவார்கள். அதிலும், ரோபோ போன்ற அதிநவீன கண்டுபிடிப்புகள் எல்லாம் ஆர்ட்ஸ்&சயின்ஸ் குரூப் படிப்பவர்களுக்கு கனவில் கூட எளிதில் சாத்தியப்படாத ஒன்று. எத்தனையோ ஏளனங்களுக்குப் பின்தான் எங்களுக்கும் இந்த சாரா ரோபோ சாத்தியப்பட்டது" என்று குஷியை நிறுத்தி பேச ஆரம்பிக்கிறார் ஹேமப்பிரியா.

ரோபோவை உருவாக்கிய குழு!
ரோபோவை உருவாக்கிய குழு!

"நாங்க ஆறு பேரும் ஒரே வகுப்பில் தான் படிக்கிறோம். படிப்பு போக புதுமையா எதாவது பண்ணனும்னு முயற்சி பண்ணிட்டே இருப்போம். நாங்க ஆர்ட்ஸ் குரூப் எடுத்திருந்தாலும் புதுமையான கண்டுபிடிப்புகள் மீது ஈர்ப்பு அதிகம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் செல் போன், லேப்டாப் போன்றவை எப்படி செயல்படுதுனு அடிக்கடி பேசிட்டே இருப்போம். எங்களோட ப்ரெண்ட் மூலமாக மும்பையில் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான ஹேக்கத்தான் நிகழ்வு நடைபெறுவது தெரியவந்தது. எங்க காலேஜ்ஜில் சொன்னோம். ''ஆர்ட்ஸ் குரூப் படிக்கிறவங்களால், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் வெற்றி பெறுவது சாத்தியமானு" கேட்டாங்க. நாங்க முடியும்னு ஒருமித்த குரலில் சொன்னதும், போட்டியில் கலந்துக்க தேவையான எல்லா நிதியுதவிகளையும் எங்க கல்லூரி நிர்வாகமே ஏத்துக்கிட்டு எங்களை ஊக்கப்படுத்துனாங்க. விவசாயத்திற்கு பயன்படும் தானியங்கு கருவியை ஒன்றை உருவாக்கி போட்டியில் கலந்துக்கிட்டோம்.போட்டி கடுமையாக இருந்ததால் எங்களால் பரிசு வெல்ல முடியல. ஆனால் நிறைய விஷயங்களை தெரிஞ்சுக்கிறதுக்கான வாய்ப்பாக இருந்துச்சு. அந்த போட்டியில் இருந்து திரும்பிய பிறகு எங்களுக்கு ரோபோடிக்ஸ் மீது ஆர்வம் வந்துருச்சு. அதனால் ஆறுமாத ரோபோடிக்ஸ் பயிற்சி வகுப்புக்கு போக ஆரம்பிச்சோம். ஆரம்பத்தில் கோடிங்,புரோகிராமிங்னு நிறைய சிரமப்பட்டோம். ஆனால் கத்துக்கிட்டோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ரோபோடிக்ஸ் முடிச்ச பிறகு ஒரு ரோபோவை உருவாக்கி பார்க்கணும் என ஆசை வந்துருச்சு. ரோபோ உருவாக்க ஆகும் செலவை கல்லூரி நிர்வாகமே தரத் தயாராக இருந்தாங்க. அதனால் என்ன வகை ரோபோ தயாரிக்கலாம். நாம் தயாரிக்கும் ரோபோ எதற்கெல்லாம் பயன்படப் போகிறது என்பதை ஒரு அவுட்லைனாக ஸ்கெட்ச் பண்ணோம். ரோபோ செய்வதற்கான செலவை கல்லூரி ஏற்றுக் கொண்டதால்,கல்லூரிக்கு பயன்படும் வகையில் ரோபோ தயாரிக்கலாம்னு முடிவுக்கு வந்தோம்" என்ற ஹேமப்பிரியாவை தொடர்ந்து, சாரா ரோபோவின் பயன்பாடுகள் பற்றியும் அதன் வடிவமைப்பு பற்றியும் பேச ஆரம்பிக்கிறார் வித்திகா.

"சாராவின் உடல் பகுதி மைல்ட் ஷீட் கொண்டு உருவாக்கப்பட்டது. லெட் ஆசிட் பேட்டரிகள் இரண்டு பொருத்தப்பட்டுள்ளன, இடத்தை பார்வையிட வெப் கேமாராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் பேட்டரி முழுவதும் சார்ஜ் செய்வதற்கு 8 மணி நேரம் ஆகும். ஒரு முறை சார்ஜ் ஏற்றினால் சாராவால் தொடர்ந்து 7 மணிநேரம் வரை இயங்க முடியும். பயனாளர்களுக்கு ஒரு இடத்தை சுற்றிக்காட்டுவது போன்ற வேலைகளை இது பார்க்கும். இதற்கான டேஷ்போர்டு இதனில் இருக்கிறது. இன்னும் சில அப்டேட்களையும் சேர்த்துட்டே இருக்கோம். எங்கள் சாராவின் அடுத்த வெர்ஷன் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் ரோபாவாக இருக்கும்னு நினைக்குறோம்" என்று அவர் கூற, "என்னைப் பயன்படுத்தியதற்கு நன்றி" என்று விடைபெறுகிறது சாரா ரோபோ.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு