Published:Updated:

`விரைவில் குணமடைவீர்கள், டேக் கேர்!' - கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள்

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள்
News
கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள்

ஒவ்வொரு அடுக்கிலும் உணவினை வைத்து எந்த அறையில் டெலிவரி செய்ய வேண்டும் என்பதைச் சரியாகச் சொல்லிவிட்டால், ரோபோவானது உணவிற்கான அறையின் முன் நின்று உள்ளிருப்பவர்களை அழைக்கிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் வகையில் மருத்துவமனை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நோயாளிகளுக்கு உணவுகளைப் பரிமாறும் வகையில் புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சீனாவில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் உலக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் சீனாவில் உள்ள வென்சவ், ஷென்ஸென், ஹாங்சவ் போன்ற நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கபெற்றுவருகிறார்கள். இவர்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருள்களை டெலிவரி செய்யும் வகையில் செவிலியர்களின் சில வேலைகளைச் செய்வதற்காக ரோபோக்களை உருவாக்கியுள்ளது ஷென்சென் ஃபாஸ்ட் ஃபூட் டெக்னாலஜி நிறுவனம். இந்த ரோபோவானது நான்கு அடுக்குகளைக்கொண்ட அலமாரியைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதில் ஒவ்வோர் அடுக்கிலும் உணவினை வைத்து எந்த அறையில் டெலிவரி செய்ய வேண்டும் என்பதைச் சரியாகச் சொல்லிவிட்டால், ரோபோவானது உணவிற்கான அறையின் முன் நின்று உள்ளிருப்பவர்களை அழைக்கிறது. அறையிலிருந்து வெளியில் வருபவர்களிடம் அவர்களுக்கான உணவு இருக்கும் அடுக்கினைக் கூறி உணவினை பெற்றுக்கொள்ளச் சொல்கிறது. உணவினைப் பெற்று முடித்தவுடன் நோயாளிகளிடம் விரைவில் குணமடைவீர்கள் என்ற நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்து விட்டுச் செல்கிறது இந்த ரோபோ.

கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள்
கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள்

இதேபோல ஒவ்வோர் அறைக்கும் நேரடியாகச் சென்று உணவு மற்றும் மருந்தினை வழங்கும் வேலையையும் இந்த ரோபோக்கள் செய்கின்றன. இதன் மூலம் நர்ஸ்கள் நோயாளிகளுடன் நேரத்தை அதிகமாகச் செலவிடுவதைத் தவிர்த்து வைரஸ் பரவுதலைச் சிறிதளவு குறைப்பதற்கான முயற்சியாக இது உள்ளது. பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருந்தாலும் தன்னைத் தற்காத்துக்கொள்ள சீனா பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.