Published:Updated:

சார்ஜ் செய்தபடியே லேப்டாப் பயன்படுத்தும்போது தீப்பற்றும் அபாயம்... பாதுகாக்க 10 டிப்ஸ்!

லேப்டாப்

பெரும்பலான வேலைகள் இன்று லேப்டாப், கம்ப்யூட்டருக்கு என்று ஆகிவிட்ட பிறகு இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் பாதுகாப்பாகப் பணியாற்ற வேண்டியது குறித்த விழிப்புணர்வு அவசியம்.

சார்ஜ் செய்தபடியே லேப்டாப் பயன்படுத்தும்போது தீப்பற்றும் அபாயம்... பாதுகாக்க 10 டிப்ஸ்!

பெரும்பலான வேலைகள் இன்று லேப்டாப், கம்ப்யூட்டருக்கு என்று ஆகிவிட்ட பிறகு இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் பாதுகாப்பாகப் பணியாற்ற வேண்டியது குறித்த விழிப்புணர்வு அவசியம்.

Published:Updated:
லேப்டாப்

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், மேகவரிப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சுமலதா. பெங்களூருவில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவன ஊழியரான இவர் வீட்டிலிருந்தபடியே பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தனது மூடப்பட்ட அறையில் படுக்கையில் அமர்ந்து சமீபத்தில் லேப்டாப்பை சார்ஜ் செய்துகொண்டே பணியாற்றத் தொடங்கியுள்ளார். அவர் அமர்ந்திருந்த கட்டிலின் மேல் நிறைய துணிகளும் கிடந்துள்ளன.

Laptop (Representational Image)
Laptop (Representational Image)
Photo by Marvin Meyer on Unsplash

சுமலதா பணியாற்றத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே லேப்டாப் சார்ஜர் அடாப்டரில் இருந்து தீப்பற்றியது. அந்தத் தீயானது படுக்கையில் கிடந்த துணிகள் மீது பரவி அதிலிருந்து அறை முழுவதும் பரவியது. அறையின் உள்ளிருந்தபடியே தீயை அணைக்க முயன்றார் சுமலதா. தீ வேகமாகப் பரவியதால் அவரால் முடியவில்லை. அறைக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டிருந்தது. உடனடியாகத் திருப்பதியில் உள்ள ஓர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுமார் 100% தீக்காயம் ஏற்பட்டதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். தீ விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், லேப்டாப் சார்ஜர் அடாப்டரில் இருந்து ஏற்பட்ட தீப்பொறியின் வழியே பரவியிருக்கலாம் என்று போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Representational Image
Representational Image
Kid laptop photo created by pressfoto - www.freepik.com

பெரும்பலான வேலைகளை இன்று லேப்டாப், கம்ப்யூட்டரில் செய்யப் பழகிவிட்ட நிலையில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல் பாதுகாப்பாகப் பணியாற்ற வேண்டியது குறித்த விழிப்புணர்வு அவசியம். இத்தகைய விபத்துகளைத் தவிர்க்க லேப்டாப் பயன்பாட்டாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து சென்னையைச் சேர்ந்த, ஐடி பொருள்கள் தயாரிப்பு நிறுவனரும், கணினி ஆலோசகருமான வெங்கடேஷ் விளக்குகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மடிக்கணினியை சார்ஜ் செய்யும்போது ரெகுலேட்டர் பவரில் போட்டு வைத்துக்கொள்வது நல்லது. ரெகுலேட்டர் பவரில் சார்ஜ் செய்வதால் திடீரென அதிக மின்சார விநியோகத்தில் ஏற்ற இறக்கம் (Flutcuation) வரும்போது, ரெகுலேட்டரே அதைக் கட்டுப்படுத்தி சீரான மின்சாரத்தை லேப்டாப் பயன்பாட்டுக்கு கொடுக்கும். இல்லையென்றால் நேரடியாக லேப்டாப்பை சார்ஜ் போடும்போது அதிக அளவு மின்சாரம் வந்தால் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க இயலாது.

Venkatesh
Venkatesh

முடிந்தவரையிலும் சார்ஜ் போட்டுக்கொண்டே லேப்டாப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். பயன்பாடு இல்லாத நேரத்தில் சார்ஜ் செய்து வைத்துக்கொண்டால் லேப்டாப் ஆஃப் ஆகும் நிலையில் அவசரமாக சார்ஜ் செய்துகொண்டே பணிபுரிவதைத் தவிர்க்கலாம்" என்றார்.

பாதுகாப்பான லேப்டாப் பயன்பாட்டுக்கு பயனுள்ள 10 டிப்ஸ்:

* லேப்டாப்பை சுத்தமான, தூசி இல்லாத மேற்பரப்பில் வைக்கவும். டிவி மேசை, படுக்கை என கண்ட இடங்களிலும் லேப்டாப்பை வைப்பதைத் தவிர்க்கவும்.

* லேப்டாப்பின் மீது தேவையற்ற பொருள்கள் வைப்பதைத் தவிர்க்கவும்

* உணவுப்பொருள்கள், தண்ணீர் உள்ளிட்ட திரவங்களை லேப்டாப் அருகில் வைக்க வேண்டாம்.

Laptop
Laptop

* லேப்டாப்பை அடிக்கடி துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

* பயன்பாடு இல்லாத நேரங்களில் லேப்டாப் திரையை சரியான முறையில் மூடி வைக்க வேண்டும்.

* அதற்கென்று கொடுக்கப்பட்டிருக்கும் பையில் லேப்டாப்பை போட்டு வைக்கவும்.

* தேவையற்ற நேரங்களில் லேப்டாப்பை ஆஃப் செய்து வைத்து அதன் பேட்டரிக்கு ஓய்வு கொடுங்கள்.

* லேப்டாப், கம்ப்யூட்டர் ஆன்டிவைரஸை அவ்வப்போது புதுப்பித்து பயன்படுத்துங்கள்.

Password
Password

* பயன்பாடு மற்றும் பராமரிப்பு குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறும் ஆதாரபூர்வமான தகவல்களை மட்டும் நம்புங்கள்.

* லேப்டாப், கம்யூட்டரின் பாஸ்வேர்டை குறிப்பிட்ட இடைவெளியில் மாற்றிப் பயன்படுத்துங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism