Published:Updated:

`30 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் ஏற்றலாம்'... கிராபீன் பேட்டரிக்கு மாறுகிறதா சாம்சங்?

மு.ராஜேஷ்

இது பயன்பாட்டுக்கு வந்தால் சார்ஜ் ஏற்றும் நேரம் வெகுவாகக் குறையும்

 சார்ஜிங்
சார்ஜிங்

அண்மைக்காலமாக ஸ்மார்ட்போன்களில் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக வழக்கமான நேரத்தைவிடவும் குறைவான நேரத்தில் சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடிகிறது. அந்த நேரத்தை மேலும் குறைக்க மொபைல் நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன.

பேட்டரி
பேட்டரி

ஃபாஸ்ட் சார்ஜிங்குக்காக சார்ஜர் மற்றும் உள்ளே இருக்கும் புராஸசர் போன்றவற்றில் மாற்றம் செய்யப்படுகிறது. முக்கியமான பகுதியான பேட்டரியைப் பொறுத்தவரையில் லித்தியம் அயான் பேட்டரி நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Vikatan

அதில் தற்போது சாம்சங் நிறுவனம் மாற்றம் செய்ய முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இவான் பிளாஸ் (Evan Blass) என்பவர் ட்விட்டரில் இதைப் பற்றித் தெரிவித்துள்ளார். சாம்சங் அடுத்த வருடம் அல்லது 2021-ம் வருடத்தில் கிராபீனைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் பேட்டரியை அதன் ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்தும் என அவர் தெரிவித்திருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டில் `graphene ball' ஒன்றை உருவாக்கியிருப்பதாகவும் அதை வெறும் 12 நிமிடங்களில் சார்ஜ் செய்துகொள்ள முடியும் எனவும் சாம்சங் அறிவித்திருந்தது.

கிராபீன்
கிராபீன்

ஆனால், கிராபீனைப் பயன்படுத்தும் பேட்டரிகள் எவ்வளவு வேகமாக சார்ஜ் ஏறுமோ அவ்வளவு வேகமாக சார்ஜ் இறங்கவும் செய்யும். எனவே, அதைச் சரி செய்ய சாம்சங் ஏதாவது வழியைக் கண்டறிந்திருக்கலாம். கார்பனிலிருந்து உருவாக்கப்படும் கிராபீன் மிகவும் வலிமையானது, அதிக நெகிழ்வுத் தன்மையையும் கொண்டது. அடுத்த சில வருடங்களில் சிலிக்கானுக்கு மாற்றாக இருக்கும் என இது எதிர்பார்க்கப்படுகிறது.

Vikatan