Published:Updated:

வாட்ஸ்அப் வீடியோவில் விழுந்த ஜெப் பஸாஸ்... வலைவிரித்த சவுதி இளவரசர்!

ஜெப் பஸாஸ்
ஜெப் பஸாஸ்

இது நடந்து 5 மாதங்களில் வாஷிங்டன் போஸ்ட்டின் பத்திரிகையாளர் ஜமால் காஷோகி கொல்லப்பட்டார். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை ஜெஃப் பஸாஸிற்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது

2018-ல் அமேசான் நிறுவனர் ஜெஃப் பஸாஸின் (Jeff Bezos) மொபைல் போன் ஹேக் செய்யப்பட்டது. இது சவுதி அரேபியாவின் இளவரசரிடமிருந்து வந்த வாட்ஸ்அப் மெசேஜினால் நடந்திருக்கக்கூடும் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

`MBS' (Mohammed Bin Salman) என்று அழைக்கப்படும் சவுதியின் இளவரசர் முகமது பின் சல்மான் அனுப்பிய வீடியோ ஃபைலில் இருந்த ஒரு வைரஸ்தான் பஸாஸின் போனை ஊடுருவியதாக சமீபத்திய டிஜிட்டல் தடயவியல் ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. 2018 மே 1-ம் தேதி அன்று நட்பு ரீதியாக வாட்ஸ்அப்பில் பேசிகொண்டிருக்கும்போது இது நடந்துள்ளது.

Prince Mohammed bin Salman
Prince Mohammed bin Salman

இந்த மெசேஜ் வந்த சில மணிநேரங்களில் பஸாஸின் போனிலிருந்து பல முக்கிய தகவல்கள் திருடப்பட்டிருக்கின்றன. என்னென்ன தகவல்கள் எடுக்கப்பட்டன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த தாக்குதலுக்கும் சவுதி அரேபிய இளவரசருக்கு தொடர்பு இருக்கலாம் என அமெரிக்க பத்திரிகைகள் கூறி வருகின்றன. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. இது சவுதி அரேபியாவுக்கு அமெரிக்க முதலீட்டாளர்களைக் கொண்டுவந்து பொருளாதார வளர்ச்சியை அடையும் MBS-ன் முயற்சிகளுக்குத் தடையாகவும் இருக்கும்.

Jeff Bezos
Jeff Bezos
`இஸ்ரோவின் `NavIC' சேவைக்கான சிப்கள் ரெடி..!’- உங்கள் வாகனம் ரெடியா?

மேலும், இதனால் பல முக்கிய கேள்விகளும் எழுந்துள்ளன. இது நடந்து 9 மாதங்களுக்குப் பிறகு அமெரிக்காவின் `National Enquirer' பத்திரிகை ஜெஃப் பஸாஸின் தனிப்பட்ட தகவல்கள் பலவற்றையும் வெளியிட்டது. இதில் பஸாஸின் பல குறுஞ்செய்திகளும் அடங்கும்.

இது நடந்து ஐந்து மாதங்களில் வாஷிங்டன் போஸ்ட்டின் பத்திரிகையாளர் ஜமால் காஷோகி கொல்லப்பட்டார். வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை ஜெஃப் பஸாஸிற்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹேக்கிங் குற்றச்சாட்டுக்கு சவுதி அரேபியா மறுப்பு தெரிவித்துள்ளது. ஜமால் காஷோகி கூலிப்படை தாக்குதலில் கொல்லப்பட்டார் என்கிறது அந்த அரசு. இந்த வழக்கில் 8 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது சவுதி நீதிமன்றம். இதை போலி நாடகம் என விமர்சித்தனர் அந்நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள்.

bezos, salman
bezos, salman
TRT World
Vikatan

Enquirer பத்திரிகை பஸாஸின் தனிப்பட்ட தகவல்களை வெளியிடுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு சவுதி இளவரசரும், Enquirer பத்திரிகையின் நிர்வாக அதிகாரியான டேவிட் பெக்கரும் நட்பு பாராட்டி வந்ததாக பஸாஸின் தலைமை பாதுகாவலரான ஃகவின் டி ஃபெக்கர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். எனினும், பஸாஸின் மொபைலில் இருந்த தகவல்கள் எவ்வாறு திருடப்பட்டன என்பது குறித்த தெளிவான தகவல்களை அவர் பொதுவெளியில் தெரிவிக்கவில்லை.

Enquirer பத்திரிகை பஸாஸின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட்டதற்கும் சவுதி இளவரசருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்தத் தகவல்கள் அனைத்தும் பஸாஸின் காதலியான லாரன் சான்செஸின் சகோதரரான மைக்கேல் சான்செஸ் மூலமே பெறப்பட்டது என மறுப்புத் தெரிவித்துள்ளது National Enquirer பத்திரிகை.

Jeff Bezos
Jeff Bezos
Brent N. Clarke

ஜமால் கஷோகி தொடர்ந்து வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் சவுதி இளவரசரைத் தாக்கி எழுதி வந்திருந்தார். சவுதியில் இதுவரை இல்லாத அளவு அடக்குமுறையைச் சவுதி இளவரசர் கையாளுவதாக அவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இந்த காரணத்தினாலேயே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பஸாஸுக்குச் சொந்தமானது என்பதால் அவரும் அந்தப் பத்திரிகையில் வெளிவந்த செய்திகளுக்கு காரணமாக இருக்கலாம் என்னும் நோக்கத்தில் பஸாஸின் மொபைலை ஹேக் செய்ய சவுதி வட்டாரங்கள் முயன்றிருக்கலாம் என்ற பாணியில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால், ஜமால் கஷோகியின் கொலைக்கும் சவுதி இளவரசர் காரணமாக இருக்கலாம் என்பதை சவுதி அரசும், National Enquirer பத்திரிகையில் வெளிவந்த பஸாஸின் தகவல்கள் வெளிவந்ததற்குச் சவுதி இளவரசர் காரணமாக இருக்கலாம் என்பதை Enquirer பத்திரிகையின் தாய் நிறுவனமான American Media Inc. நிறுவனமும் முழுமையாக மறுத்துள்ளது. ஆனால் இந்த விவகாரம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு