Published:Updated:

`அமெரிக்க ஏவுகணைகளை விட அதிகசக்தி வாய்ந்தது பிரம்மோஸ்!’ விஞ்ஞானி சிவதாணுபிள்ளை

இந்திய நாட்டை உலக அரங்கில் முதன்மை நாடாக மாற்றும் விதமாக உருவாக்கப்பட்டதுதான் பிரம்மோஸ் ஏவுகணை. அமெரிக்கத் தயாரிப்பு ஏவுகணைகளை விட அதிக சக்தி வாய்ந்த ஏவுகணையை உருவாக்கும் விதமாக ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து தயாரிக்கப்பட்டது பிரம்மோஸ் ஏவுகணை.

விஞ்ஞானி சிவதாணுபிள்ளை
விஞ்ஞானி சிவதாணுபிள்ளை

பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஏவுகணை விஞ்ஞானியான சிவதாணு பிள்ளை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இந்து கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டார். பின்னர் விஞ்ஞானி சிவதாணுபிள்ளை செய்தியாளர்களிடம் கூறுகையில், ``டெல்லியில் காற்று மாசு ஏற்பட பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் விவசாயிகள் தங்கள் பயிர்க் கழிவுகளை எரிப்பது ஒரு முக்கிய காரணம்.

விஞ்ஞானி சிவதாணுபிள்ளை
விஞ்ஞானி சிவதாணுபிள்ளை

காற்று மாசு ஏற்படுவதை தடுக்க பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் விவசாயக் கழிவுகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். வைக்கோல்களை எரிக்காமல் அதிலிருந்து மீட்டுஉருவாக்கம் என்ற வகையில் மாற்று சக்தி உருவாக்கும் வகையில் திட்டம் உள்ளது. அதன் மூலம் அந்த விவசாயிகளுக்கு வருமானமும் கிடைக்கும்.

இது தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு ஏற்கெனவே அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் விவசாயக் கழிவுகளை எரிப்பதால்தான் காற்று மாசு ஏற்படுகிறது. இதற்கு மாற்று திட்டங்களை விரைவில் செயல்படுத்தினால்தான் டெல்லியில் காற்று மாசு குறையும்.

விஞ்ஞானி சிவதாணுபிள்ளை
விஞ்ஞானி சிவதாணுபிள்ளை

இந்திய நாட்டை உலக அரங்கில் முதன்மை நாடாக மாற்றும் விதமாக உருவாக்கப்பட்டதுதான் பிரம்மோஸ் ஏவுகணை. அமெரிக்கத் தயாரிப்பு ஏவுகணைகளை விட அதிக சக்தி வாய்ந்த ஏவுகணையை உருவாக்கும் விதமாக ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து தயாரிக்கப்பட்டது. விண்வெளி ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் நாடுகளுடன் கூட்டு சேர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டால் வெற்றி பெற முடியும். தனியாக நின்று எதையும் சாதிக்க முடியாது. அடுத்தகட்டமாக ஃபியுசன் டெக்னாலாஜி திட்டத்திற்காக இந்தியா உட்பட 7 நாடுகள் ஒன்றுசேர்ந்துள்ளன. அதற்கான பணிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகின்றன" என்றார்.