Published:Updated:

MX Takatak-ஐ வாங்கும் SharChat-ன் தாய் நிறுவனம் விலை எவ்வளவு தெரியுமா?

ShareChat

ஷார்ட் பார்மெட் வீடியோக்களை பகிரும் வகையில் மோஜ் (Moj) என்ற புதிய செயலி ஒன்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷேர்சேட்டின் (ShareChat) தாய் நிறுவனமான மோகல்லா டெக்

MX Takatak-ஐ வாங்கும் SharChat-ன் தாய் நிறுவனம் விலை எவ்வளவு தெரியுமா?

ஷார்ட் பார்மெட் வீடியோக்களை பகிரும் வகையில் மோஜ் (Moj) என்ற புதிய செயலி ஒன்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷேர்சேட்டின் (ShareChat) தாய் நிறுவனமான மோகல்லா டெக்

Published:Updated:
ShareChat

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் கடந்த சில ஆண்டுகளில் பிரபலமடைந்து விட்டது டிக்-டாக். உலகின் முன்னணி சமூக வலைதளமான பேஸ்புக்குக்கே சவால் விடும் அளவுக்கு இருக்கிறது டிக்-டாக்கின் வளர்ச்சி. 2020-ல் சீனாவுடனான எல்லைப் பிரச்னையின்போது, சீனாவைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட செயலிகளைத் தடை செய்தது மத்திய அரசு. அவற்றில் உலகளவில் பிரபலமான டிக்-டாக் மற்றும் பப்ஜி போன்ற செயலிகளும் தடை செய்யப்பட்டன. இந்தியாவிலும் மிகவும் பிரபலமான அந்தச் செயலிகள் தடைசெய்யப்பட்டதால் அவற்றுக்கு மாற்றாக இந்தியாவில் புதிய செயலிகளை அறிமுகப்படுத்தின இந்தியாவைச் சேர்ந்த டெக் நிறுவனங்கள்.

டிக் டாக்கிற்கு இணையான ஷார்ட் பார்மெட் வீடியோக்களை பகிரும் வகையில் மோஜ் (Moj) என்ற புதிய செயலி ஒன்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷேர்சேட்டின் (ShareChat) தாய் நிறுவனமான மோகல்லா டெக் என்ற நிறுவனம். அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டுக்கு உள்ளேயே 160 மில்லியன் பயனர்களுடன் முன்னணியில் செயலியாக வலம் வரத் தொடங்கியது மோஜ். தங்களுடைய பிரதானப் போட்டியாளராக இன்ஸ்டாகிராமின் ரீல்ஸையே கருதி வந்தது மோஜ். இந்த நிலையில் தான், இந்தியப் பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வரும் மற்றொரு ஷார்ட் பார்மெட் வீடியோக்களை பகிரும் செயலியான MX டகாடக் செயலியை வாங்கியிருக்கிறது மோகல்லா டெக் நிறுவனம். மோஜூக்கான போட்டியாளர்களைக் குறைக்கும் நோக்கத்தில் டகாடக்கை மோகல்லா டெக் வாங்கியிருக்கலாம் எனத் தெரிகிறது.

ஷேர்சேட் , டகாடக்
ஷேர்சேட் , டகாடக்

700 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் (இந்திய மதிப்பில் 5,250 கோடி ரூபாய்) டகாடக்கை வாங்கியிருக்கிறது மோகல்லா டெக். டகாடக் செயலியானது 100 மில்லியன் பயனர்களுடன் மோஜூக்கு அடுத்தபடியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தம் குறித்து இருநிறுவனங்களும் எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. இந்த ஒப்பந்தம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகலாம் எனத் தெரிகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism