வேலை செய்யும்போது போர் அடிக்குதா? இந்த விளையாட்டுகளை ட்ரை பண்ணிப் பாருங்களேன்! #Games
கூகுள் க்ரோமைத் தேடுவதற்கு மட்டுமல்ல கேம் விளையாடுவதற்கும் பயன்படுத்தலாம். டவுன்லோடு எதுவும் செய்யாமல் சிம்பிளாகத் தேடி விளையாடக்கூடிய கேம்கள் இவை.
கூகுள் க்ரோமைத் தேடுவதற்கு மட்டுமல்ல, கேம் விளையாடுவதற்கும் பயன்படுத்தலாம். டவுன்லோடு எதுவும் செய்யாமல் சிம்பிளாகத் தேடி விளையாடக்கூடிய கேம்கள் இவை. அதுவும் 90'ஸ் கிட்ஸாக இருந்தால் கண்டிப்பாக உங்களுக்குத்தான் இந்த விளையாட்டுகள் அனைத்தும்.
ப்ளே ஸ்னேக் (Play Snake)
90'ஸ் கிட்ஸ் நோக்கியா போனில் விளையாடிய ஆஸ்தான பாம்பு கேம் இது. கூகுள் க்ரோமில் சர்ச் ஃடேபில் `Play Snake' எனத் தேடினால், முதல் தேடலில் ஒரு பாம்பு கேம் தோன்றும். அதில் உள்ள ப்ளே பட்டனை அழுத்தி விளையாடத் தொடங்கலாம். கலர் கலரான பாம்புகள், வித விதமான பாம்பு உணவுகள் எனப் பல வெரைட்டி உண்டு. அதோடு பல வகையான கேம் ப்ளேயும் உண்டு என்பதால் விளையாட உட்கார்ந்தால் நிச்சயம் சிறிது நேரத்திற்குக் கணினியுடன் நம்மைக் கட்டிப்போடும்.
டிக் டேக் டோ (Tic Tac Toe)
பள்ளியில் வகுப்பறைகளில் நாம் விளையாடிய பேப்பர் விளையாட்டின் டிஜிட்டல் வெர்ஷனைக் கொடுத்திருக்கிறது கூகுள். சுலபம், கடினம் என மூன்று விதமான நிலைகள் உண்டு. `Tic Tac Toe' எனத் தேடினால் போதும், முதல் தேடலிலேயே உங்கள் கண் முன் வந்து நிற்கும்.
விளையாட: Tic Tac Toe
பேக் மேன் (Pac Man)
80-களில் வெளியான பேக் மேன் கேமை அவ்வளவு சீக்கிரம் நாம் மறந்துவிட முடியாது. தற்போது பப்ஜி, க்ளாஷ் ஆஃப் க்ளான்ஸ் என நம்மை ஈடுபாட்டுடன் வைத்திருக்க பல கேம்கள் இருந்தாலும், இன்றும் பேக் மேன் காதலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கிளாஸியான பேக் மேனுடன் சிறிதுநேரம் செலவிட விரும்புபவர்கள். Pac Man எனத் தேடி மஞ்சள் பையனுடன் சிறிது நேரம் விளையாடலாம்.
விளையாட: Pac Man
அடாரி ப்ரேக்அவுட் (Atari Breakout)
நூறு ரூபாய் வீடியோ கேம் பொம்மைகளில் நாம் ரசித்து விளையாடிய விளையாட்டை கணினித் திரைகளில் காணும் ஆர்வம் யாருக்குத்தான் இருக்காது. அதுவும் ஒரே கிளிக்கில் நம் கண் முன் தோன்றினால் படு குஷிதான். `Atari Breakout' என கூகுளில் தேடினால், முடிவுகளில் வரும் முதல் லிங்க்கை கிளிக் செய்க. கூகுளில் படங்கள் காட்டும் பகுதி கற்களாக் மாறி ஒரு பந்தும் நம் முன் பறந்து வரும். பின் என்ன துவம்சம் செய்து விளையாட வேண்டியதுதான்.
விளையாட: Atari Breakout
ஸெர்க் ரஷ் (Zerg Rush)
இந்த விளையாட்டு கொஞ்சம் சுவாரஸ்யமானது. கூகுள் Zerg Rush எனத் தேடி வரும் முடிவுகளில் முதல் முடிவை கிளிக் செய்தால் போதும். திடீரென நாலாப் பக்கமும் இருந்து பல குட்டிக் குட்டி வளையங்கள் வந்து கூகுள் தேடல் பக்கத்தைத் தாக்கத் தொடங்கும். அவற்றை அழித்து உங்கள் தேடல் பக்கங்களைப் பாதுகாக்க வேண்டும், இதுதான் டாஸ்க்.
விளையாட: Zerg Rush
குவிக் ட்ரா (Quick Draw)
வழக்கம் போல் கூகுள் தேடல் பக்கத்தில் `Quick Draw' எனத் தேடி, முடிவுகளில் வரும் முதல் லிங்க்கை கிளிக் செய்தால் ஒரு மஞ்சள் பக்கம் தோன்றும். அதில் உங்களுக்கு ஒரு வார்த்தை கொடுக்கப்படும். அந்த வார்த்தைக்கான படத்தை 20 நொடிகளுக்குள் கூகுள் கண்டுபிடிக்கும் வண்ணம் வரைய வேண்டும், அவ்வளவுதான்.
விளையாட: Quick Draw
சாலிடேர் (Solitaire)
கேம் என்று சொல்லிவிட்டு சாலிடேர் கேம் இல்லாமலா? விண்டோஸில் கேம் என்றால் சாலிடேர்தான் முதலிடத்தில் இருக்கும். ஏற்கெனவே கணினியில் அந்த விளையாட்டு இருக்கும் என்பதால் மொபைல் பயன்பாட்டாளர்கள் கூகுளில் இருக்கும் சாலிடேர் கேமைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
விளையாட: Solitaire