Published:Updated:

விழிச்சவாலைப் போக்கும் `ஸ்மார்ட் விஷன் கண்ணாடிகள்' - நம்பிக்கை அளிக்கும் புதிய தொழில்நுட்பம்!

Specs (Representational Image) ( Photo by David Travis on Unsplash )

தங்களுக்குப் பிடித்த புத்தகத்தைப் படிக்கலாம், பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களில் உள்ள செய்திகளைப் பற்றி அறிந்துகொள்ளலாம், மாணவர்கள் ஸ்க்ரைப் இல்லாமல் தங்கள் தேர்வுகளை எழுதலாம்.

விழிச்சவாலைப் போக்கும் `ஸ்மார்ட் விஷன் கண்ணாடிகள்' - நம்பிக்கை அளிக்கும் புதிய தொழில்நுட்பம்!

தங்களுக்குப் பிடித்த புத்தகத்தைப் படிக்கலாம், பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களில் உள்ள செய்திகளைப் பற்றி அறிந்துகொள்ளலாம், மாணவர்கள் ஸ்க்ரைப் இல்லாமல் தங்கள் தேர்வுகளை எழுதலாம்.

Published:Updated:
Specs (Representational Image) ( Photo by David Travis on Unsplash )

பார்வை இழந்தவர்களுக்கும், பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கும் சாதாரணமாகச் செய்யும் வேலைகளுக்கும் கூட பிறரை எதிர்பார்த்திருக்கும் சூழல் உள்ளது. பஸ் ஏறுவதற்கும், தேர்வு எழுதுவதற்கும், படிப்பதற்கும் எனப் பிறரைச் சார்ந்து வாழும் சூழலில், அலெக்சாவைப் போல ஒரு குரல் இவர்கள் கேட்கும் அனைத்தையும் வழங்கும். பார்வையை இழந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில் பிறரைச் சாராமல் இருக்க, நடக்க, படிக்க, பிறரிடம் பேச என முற்றிலும் அவர்களின் தேவையைப் புரிந்துகொண்டு உருவாக்கப்பட்டதே `ஸ்மார்ட் விஷன் கண்ணாடிகள்' (Smart Vision Glasses). பார்வையை இழந்தோர் மற்றும் பார்வை இழப்பைச் சரிசெய்ய முடியாத நபர்களுக்கு இந்தத் தொழில்நுட்பம் உதவும். 

Specs (Representational Image)
Specs (Representational Image)
Photo by K8 on Unsplash

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குறிப்பாக பார்வை இழப்பு, மஸ்குலர் டீஜெனரேஷன், டயாபடிக் ரெட்டினோபதி, ரெட்டினைடிஸ் பிக்மென்டோஸா, கிளக்கோமோ, கண்புரை மற்றும் பிற பார்வைக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட நபருக்கு இந்தச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப சாதனத்தை வழங்கலாம். இது அவர்களின் இருண்ட உலகத்தை மிகவும் சுவாரஸ்யமானதாகவும் சுதந்திரமானதாகவும் மாற்றும். அவர்கள் தங்களுக்குப் பிடித்த புத்தகத்தைப் படிக்கலாம், பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள் களில் உள்ள செய்திகளை அறிந்துகொள்ளலாம், தேர்வுகளை எழுதலாம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதுமட்டுமல்லாமல் வெளியே உள்ள வாகனங்கள், தடைகள், போக்குவரத்து சிக்னல்கள், ஜீப்ரா கிராசிங்குகள், மரங்கள் மற்றும் வீட்டின் உள்ளே உள்ள ஜன்னல், திரை, டேபிள், லேப்டாப், மொபைல், பாட்டில் போன்ற பொருள்களை உணர்ந்து அவர்கள் பத்திரமாக நடமாட உதவும். எதிரில் இருக்கும் நபர்களை அடையாளம் காண்பதோடு, அவர்களின் தோராயமான வயது, அவர்கள் வெளிப்படுத்தும் சைகைகளையும் வெளிப்படுத்தும்.  

புத்தகங்கள், செய்தித்தாள்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகளைப் படிக்க உதவும். படிப்பதைப் புரிந்துகொள்ள பிரத்யேக வசதிகள் உண்டு. ஆங்கிலத்துடன் கூடுதலாக இந்திய பிராந்திய மொழிகளான இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி முதலிய மொழிகளிலும் படிக்க முடியும்.  

Specs (Representational Image)
Specs (Representational Image)
Photo by Joshua Newton on Unsplash

பாதுகாப்புக்காக செயற்கை நுண்ணறிவுடன் ப்ராக்ஸிமிட்டி சென்சார் இணைக்கப்பட்டுள்ளது. நடக்கும்போது எதிர்வரும் தடைகளைச் சொல்வதோடு, எதன் மீதும் மோதாமல் இருக்க நேரத்துக்கு அலர்ட் குரலும் ஒலிக்கும். GPS-ஐ பயன்படுத்தி போக வேண்டிய இலக்கின் தூரத்தையும் தெரிந்துகொள்ள முடியும். தயாரிப்பின் விலை, மலிவு விலையில் அனைவரும் வாங்கும் வகையில் உள்ளது. இந்த ஸ்மார்ட் விஷன் கிளாஸை வாங்கி உபயோகித்து வருபவர்கள் எளிதாக பஸ் வருவதை இந்தத் தொழில்நுட்பம் தெரியப்படுத்துவதாகவும், வீட்டுக்குள் இருக்கும் பொருள்களை எளிதாகக் கையாளவும் படிக்கவும் உதவுவதாகவும் தெரிவித்துள்ளனர். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism