Published:Updated:

பெங்களூரு முதல் சீனா வரை... ஆழ்துளை மீட்புக்காகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சில வழிமுறைகள்!

சுர்ஜித் மீட்புப் பணி

#SaveSurjith என்ற ஹேஷ்டேக்கின் கீழ் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் குழந்தைகளைக் காப்பாற்ற ஆய்வாளர்கள் சிலர் பரிந்துரைக்கும் சில வழிமுறைகளைப் பார்க்கலாம்.

பெங்களூரு முதல் சீனா வரை... ஆழ்துளை மீட்புக்காகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சில வழிமுறைகள்!

#SaveSurjith என்ற ஹேஷ்டேக்கின் கீழ் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் குழந்தைகளைக் காப்பாற்ற ஆய்வாளர்கள் சிலர் பரிந்துரைக்கும் சில வழிமுறைகளைப் பார்க்கலாம்.

Published:Updated:
சுர்ஜித் மீட்புப் பணி

திருச்சி மணப்பாறையை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் 2 வயதே ஆன சுர்ஜித் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் தொடர்ந்து எந்தத் தொய்வுமில்லாமல் குழந்தையைக் காப்பாற்ற போராடி வருகின்றனர். #savesurjith என்ற ஹேஷ்டேக்கின் கீழ் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழும் குழந்தைகளைக் காப்பாற்ற ஆய்வாளர்கள் சிலர் பரிந்துரைக்கும் சில வழிமுறைகளைப் பார்க்கலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ராக் அண்ட பினியன் மெக்கானிசம் (Rock and Pinion Mechanism)

(Rock and Pinion Mechanism)
(Rock and Pinion Mechanism)

பெங்களூரின் PES பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த ரகோத்தமா பி, அச்சுதா ஆர், ஆதித்தயா பி, ஆஸ்ரே அக்ச், பவன் குமார், தேஜஸ் மற்றும் அமித் கவுடா ஆகியோர் 'போரோட்' என்னும் ரோப்போட்டை வைத்து ஆழ்துளைக் கிணற்றில் விழும் குழந்தைகளைக் காப்பாற்ற கண்டுபிடித்துள்ளனர். இந்த ரோபோட் ராக் அண்ட் பினியன் மெக்கானிசம் மூலம் இயங்குகிறது. அதாவது, காரில் எப்படி ஸ்டியரிங் எந்தப் பக்கம் திரும்புகிறதோ அதே பக்கம் டயர்களும் திரும்புவதை போன்றதே இந்த முறை. இந்தக் கருவியுடன் ஸ்பை மினியேச்சர் கேமரா ஒன்றும் ரோப்போட்டின் கைகளில் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் லைவ் வீடியோக்களைப் பெற முடியும். இதன் சென்சார் மூலம் குழந்தையின் அசைவுகள், விஷவாயுக்களின் அளவுகள் ஆகியவற்றையும் அறிந்துகொள்ள முடியும். குழந்தை உயிரோடு இருப்பது உறுதி செய்யப்பட்டால் ஏர் (Air) பலூன் ரீலிஸாகி குழந்தை இன்னும் கீழே போகாமல் தடுக்கும். இதை ஆண்ட்ராய்டு சாதனங்கள் மூலம் கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இது வெறும் ப்ரோட்டோ டைப் மட்டுமே என்பதால் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நுமாடிக் சிலிண்டர் ரோபோட் (Pneumatic Cylinder)

நுமாடிக் சிலிண்டர் ரோபோட்
நுமாடிக் சிலிண்டர் ரோபோட்

பெங்களூரிலுள்ள ஏபிஎஸ் பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த சரத் பாபு, தனுஷ் குமார் மற்றும் கிரிதரா ஆகியோர் ஆழ்துளையிலிருந்து குழந்தைகளை மீட்பதற்கான ரோபோட்டை வடிவமைத்துள்ளனர். இது நுமாடிக் சிலிண்டரின் உதவி கொண்டு செய்யப்பட்டுள்ளது. இதில் கேமராவும் ஆக்சிஜனும் பொருத்தப்பட்டுள்ளன. குழந்தை இருக்கும் இடத்தை சரியாகக் கண்டறிந்த பின்னர் நுமாடிக் சிலிண்டரை போர்வெல்லுக்குள் செலுத்தினால் அதில் பொருத்தப்பட்டுள்ள ரோபோடிக் கைகள் குழந்தையை சிறிது தூக்கிவிடும் பின்னர். ஏர் பலூன் மூலம் குழந்தை மேலும் கீழே செல்லாதபடி தடுக்க முடியும். ஆனால், இதுவும் ப்ரோட்டோ டைப் வடிவிலேயேதான் உள்ளது என்பது துரதிர்ஷ்டவசமானது.

தூக்குக்கயிறு முறை:

தூக்குக்கயிறு முறை
தூக்குக்கயிறு முறை

சீனாவின் சான்டாங்க் ப்ராவின்சில் மூன்று வயது குழந்தை இரண்டே மணி நேரத்தில் ஆழ்துளைக் கிணறிலிருந்து மீட்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதில் குழந்தை 300 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் 30 அடியில் விழுந்துவிடுகிறான். குழந்தையைக் காப்பாற்ற கயிறு மூலம் சென்ஸார் கேமரா அனுப்படுகிறது. அதனுடன் ஆக்சிஜனும் செலுத்தப்படுகிறது. குழந்தையின் இருப்பிடத்தை உறுதி செய்த பின்னர் சிறிய தூக்குக் கயிறு போல் முடிச்சு போட்டுவிட்டு அதை குழிக்குள் செலுத்துகின்றனர். பின்னர் கேமரா மூலம் கண்காணித்து சரியாகக் குழந்தையின் உடலில் படும் வரை வீசப்படுகிறது. பின்னர், அதே போல் இதர மூன்று கயிறுகளும் செலுத்தப்பட்டு குழந்தை மீட்கப்படுகிறது. இதன் மூலம் மூன்று மணி நேரத்தில் குழந்தையைக் காப்பாற்றி இருக்கின்றனர்.

இத்தகைய வழிகள் இருந்தாலும், இவை எல்லாம் நிஜத்தில் சாத்தியமா என்னும் கேள்வியே எல்லார் மனதிலும் எழுகிறது. இவற்றை எல்லாம் சிறிய நடைமுறை மாற்றங்களுடன் அரசு கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும் என்பதே கோரிக்கையும் கூட..!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism