Published:Updated:

“இயற்கையை விட சிறந்த இன்ஜினீயர் யாருமில்லை!”

பயோமிமிக்ரி
பிரீமியம் ஸ்டோரி
பயோமிமிக்ரி

பயோமிமிக்ரியை பள்ளி மாணவர்களிடம் கொண்டு செல்வதே எங்கள் நோக்கம். இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துகிறோம்.

“இயற்கையை விட சிறந்த இன்ஜினீயர் யாருமில்லை!”

பயோமிமிக்ரியை பள்ளி மாணவர்களிடம் கொண்டு செல்வதே எங்கள் நோக்கம். இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துகிறோம்.

Published:Updated:
பயோமிமிக்ரி
பிரீமியம் ஸ்டோரி
பயோமிமிக்ரி

உலகின் அதிவேக ரயில்களுள் ஒன்றான ஷின்கான்சன் புல்லட் ரயிலை வெற்றிகரமாக வடிவமைத்திருந்த ஜப்பானியப் பொறியாளர்களுக்கு திடீர் சவால் ஒன்று உருவானது. மணிக்கு 200 மைல் வேகத்தில் செல்லக்கூடிய அந்த ரயில், சுரங்கங்களுக்குள் நுழைந்து வெளிவரும்போது மிகப்பெரிய சத்தத்தை ஏற்படுத்தி அரைக் கிலோமீட்டர் தூரத்தை அதிரச்செய்தது. இதற்குத் தீர்வு தெரியாமல் தவித்த நேரத்தில் ஒரு பொறியாளர், மீன்கொத்திப் பறவையொன்று தண்ணீரில் சிறிதும் அதிர்வலையை ஏற்படுத்தாமல் மீனைக் கொத்திக்கொண்டு பறந்ததைப் பார்த்தார். அது எப்படி சாத்தியமாகிறது என்று ஆராய்ந்தார். அந்தப்பறவையின் கோன் வடிவ அலகே அதற்குக் காரணம் என்று தெரியவர, கூர் முனையுடைய புதிய இன்ஜின் வடிவமைக்கப்பட்டது. அது சத்தத்தை முழுமையாகக் குறைத்ததோடு 15% எரிவாயு பயன்பாட்டைக் குறைத்து 10% வேகத்தை அதிகரித்தது.

“இயற்கையை விட சிறந்த இன்ஜினீயர் யாருமில்லை!”

“இதைத்தான் நாங்கள் பயோமிமிக்ரி (Biomimicry) என்று சொல்கிறோம். அதாவது இயற்கை செயல்படும் முறைகளில் இருந்து இயக்கத்தைக் கற்றுக்கொண்டு நமக்கு முன்னிருக்கும் சவால்களுக்கு விடை தேடுவது” என்கிறார் Biomimicry compass நிறுவனத்தின் நிறுவனரான மிருணாளினி.

பயோமிமிக்ரி எனப்படும் இந்தியாவுக்கு அதிகம் பரிச்சயமில்லாத இந்த உயிரிணையாக்கக் கோட்பாட்டை அடிப்படையாகக்கொண்டு ஐஐடி மெட்ராஸ் வளாகத்தில் இயங்கிவருகிறது பயோமிமிக்ரி கேம்பஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனம். கோவிட் பெருந்தொற்றின் ஊரடங்கு காலத்தில் இதுகுறித்த யோசனையைப் பொறியாளர்கள் மிருணாளினி மற்றும் சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்னெடுக்க, ஐஐடி மெட்ராஸின் அப்ளைடு மெக்கானிக்ஸ் துறைத் தலைவர் சிவகுமார் மற்றும் அத்துறைப் பேராசிரியர் சத்யா சேஷாத்ரி இருவரும் செயல்வடிவமாக்க உதவியிருக்கிறார்கள்.

“இயற்கையைவிட மிகச்சிறந்த இன்ஜினீயர் யாருமில்லை. நீருக்குள்ளேயே இருக்கிற தாமரை இலையின் மேற்பகுதி ஈரமற்றதாக இருக்கிறது. மேலே படும் தண்ணீர் தானாகவே வழுக்கிச் செல்லும் வகையில் நுண்ணிய கட்டமைப்பு அந்த இலையில் இருக்கிறது. கறையான்களின் புற்று குறிப்பிட்ட குளிர் சீதோஷ்ணத்திலேயே இருக்கிறது. இதெல்லாம் இயற்கையின் அரிய படைப்புகள். இதுமாதிரியான படைப்புகளைத் தொழில்நுட்பங்களில் உபயோகிப்பதுதான் பயோமிமிக்ரி.

“இயற்கையை விட சிறந்த இன்ஜினீயர் யாருமில்லை!”

“பயோமிமிக்ரியை பள்ளி மாணவர்களிடம் கொண்டு செல்வதே எங்கள் நோக்கம். இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்துகிறோம். ஒன்று இயற்கையிலிருந்து தொழில்நுட்பங்களைக் கண்டறிவது. இன்னொன்று, இவ்வளவு வல்லமைமிக்க இயற்கையின் மீது மதிப்பை உருவாக்குது... இதற்கென ஒரு பாடத்திட்டத்தை வகுத்திருக்கிறோம். இந்த மாதிரி புதிய விஷயங்கள் பற்றி ஆங்கிலத்தில் மட்டுமே படிக்க முடிகிறது. இதை நாங்கள் தமிழில் எடுத்துச்செல்ல முடிவு செய்தோம். பரீட்சார்த்த முயற்சியாக சேவாலயா அறக்கட்டளை நடத்தும் ஒரு பள்ளியைத் தேர்ந்தெடுத்தோம். இதுபற்றி ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்து, தற்போது 9-ம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்றுத்தருகிறோம்” என்கிறார் பேராசிரியர் சிவகுமார்.

சிறுவயது மாணவர்களுக்கு பயோமிமிக்ரி குறித்து எளிமையாகக் கற்றுத்தர வசதியாக காமிக்ஸ் உருவாக்கும் முயற்சிகளும் நடக்கின்றன.

“பயோமிமிக்ரி எதிர்கால உலகுக்கான ஒரு கோட்பாடு. இயற்கையின் முக்கியத்துவத்தையும் அதன் பிரமாண்டங்களையும் இன்று அறியும் மாணவர்கள் இன்னும் 20-30 வருடங்களுக்குப் பிறகு பல அதிசயங்களை நிகழ்த்துவார்கள். இதன்மூலம் 1 பில்லியன் பயோமிமிக்ஸ் உருவாக்குவதே எங்களின் லட்சியம்” என்று கூறும் மிருணாளினியின் வார்த்தைகளில் அத்தனை நம்பிக்கை.

சிவசுப்பிரமணியம், மிருணாளினி, சிவகுமார்
சிவசுப்பிரமணியம், மிருணாளினி, சிவகுமார்

திருநின்றவூர் அருகே கசுவா என்ற கிராமத்திலிருக்கும் சேவாலயா பள்ளியில் 32 மாணவர்கள் பயோமிமிக்ரி படிக்கிறார்கள். பயிற்சியின் தொடக்கத்தில் இருந்ததற்கும் இப்போதைக்குமான இடைவெளியில் மாணவர்கள் இயற்கையைப் பார்க்கும் அணுகுமுறை மாறியிருப்பதாகச் சொல்கிறார்கள் அப்பள்ளி ஆசிரியர்கள். ‘‘அவர்களின் படைப்பாற்றலை அதிகரிப்பதற்காகச் சிறு சிறு தேர்வுகளும் நடத்தப்படுகின்றன” என்கிறார் சிவசுப்பிரமணியம்.

கல்வி, வேலைவாய்ப்புகளில் பெண்கள் பின்தங்கியிருப்பதற்கும் பாலின வேறுபாட்டுக்கும் மாதவிடாய் பிரச்னை முக்கியக் காரணமாக இருக்கிறது. அதை முன்வைத்து பயோமிமிக்ரியைப் பயன்படுத்தி ஆய்வுசெய்துள்ளார் ஒரு கல்லூரி மாணவர். ஐந்து விலங்குகளைத் தேர்வு செய்து, அவை அக்காலகட்டத்தை எப்படிக் கடக்கின்றன என்று ஆய்வுசெய்து அதேநுட்பத்தைப் பயன்படுத்திப் புதிய சானிட்டரி நாப்கின் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

எல்லாவற்றையும்விடப் பெரிது இயற்கை. அதிலிருந்து கற்றுக்கொள்வது ஆக்கபூர்வமான விஷயம். எதிர்விளைவுகள் இல்லாத அப்படியான ஆராய்ச்சிகளே எதிர்காலத்தை பலமாக வடிவமைக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism