Published:Updated:

விலை ரூ.1,50,000 பிளாட்டினம் பூச்சு: விஜய் வசந்த் தொலைத்த பேனாவின் சிறப்பு என்ன தெரியுமா?

விஜய் வசந்த்

இந்த பேனா நிப்புகள், சுத்த தங்கத்தால் செய்யப்பட்டவை. இது ஆடம்பரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பேனா செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பொருள்களும், மிகவும் விலை உயர்ந்தவை.

விலை ரூ.1,50,000 பிளாட்டினம் பூச்சு: விஜய் வசந்த் தொலைத்த பேனாவின் சிறப்பு என்ன தெரியுமா?

இந்த பேனா நிப்புகள், சுத்த தங்கத்தால் செய்யப்பட்டவை. இது ஆடம்பரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பேனா செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பொருள்களும், மிகவும் விலை உயர்ந்தவை.

Published:Updated:
விஜய் வசந்த்

கன்னியாகுமரி எம்.பி-யான விஜய் வசந்த், சென்னை கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது, அவரின் பேனா தொலைந்துள்ளது. இதையடுத்து தன்னுடைய பேனாவை கண்டுபிடித்துத் தருமாறு காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

பேனா தொலைந்து போனதெற்கெல்லாம் யாராவது புகார் அளிப்பார்களா என்ற கேள்வி எழுகிறதல்லவா? ஆனால், அவர் தொலைத்தது ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்புள்ள, `மான்ட்பிளாங்க்' (montblanc) பேனாவை.

விஜய் வசந்த்
விஜய் வசந்த்

இவ்வளவு விலை கொடுத்து இந்தப் பேனாவை வாங்கும் அளவுக்கு அதில் அப்படி என்னதான் ஸ்பெஷல்?

*இருபதாம் நூற்றாண்டில் இருந்தே ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் உள்ள மான்ட்பிளாங்க் நிறுவனம், மான்ட்பிளாங்க் பேனாக்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. பேனா மட்டுமல்லாமல் விலை உயர்ந்த ரோலக்ஸ் கைக்கடிகாரங்களையும், தொழில்நுட்ப கருவிகளையும், தோல் பைகளையும், ப்ரீஃப்கேஸ்களையும் இது விற்பனை செய்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

*இந்தப் பேனாக்களின் நிப்புகள், சுத்த தங்கத்தால் செய்யப்பட்டவை. இது ஆடம்பரத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. பேனா செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பொருள்களும் மிகவும் விலை உயர்ந்தவை. பெரும்பாலும் பிரபலங்களும், உயர் பதவிகளில் இருப்பவர்களும், இப்பேனாவை விரும்பி வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

*மையைப் பயன்படுத்தி எழுதும் பேனாக்களையும், பால்பாயின்ட் பேனாக்களையும் விற்பனை செய்கிறது மான்ட்பிளாங்க் நிறுவனம். நீண்ட நாள்கள் உபயோகிக்கும் வகையில், பேனாவின் மையை மீண்டும் நிரப்பிக்கொள்ளலாம்.

*இந்த பேனா, ஒரு தலைமுறையில் இருந்து மற்றொரு தலைமுறைக்கு பொக்கிஷமாகக் கொடுக்கப்படுகிறது.

*பேனாவின் தரம் மற்றும் பேனாவில் மேற்கொள்ளப்படும் கைவினை வேலைப்பாடுகள் அனைத்தும் தனித்துவம் வாய்ந்தவை.

montblanc
montblanc
montblanc

*சரியாகப் பிடித்து எழுதும்படி, பேனாவின் உறுதித்தன்மை சிறப்பாக இருக்கும். வெவ்வேறு வண்ணங்களில் பேனாக்கள் விற்கப்படுகின்றன. மிகவும் கலைநயத்தோடு வடிவமைக்கப்படும் பேனாவின் மூடி, பிளாட்டினத்தால் பூசப்பட்டு லோகோ மற்றும் தனி வரிசை எண் பொறிக்கப்பட்டு இருக்கும்.

*மான்ட்பிளாங்க் பால் பாயின்ட் பேனாக்களில் தங்கத்தால் ஆன நிப் இல்லை. இருந்தபோதும் அவற்றைத் தயாரிக்கும்போது, பேனாவின் வேலைப்பாடுகளில் தங்கம் மற்றும் பிளாட்டினம் பயன்படுத்தப்படுகிறது.

*இப்பேனாவுக்கு சில நிபந்தனைகளோடு வாரன்ட்டி வழங்கப்படுகிறது. பழுது பார்த்துக்கொள்ளும் சேவையோடு, பேனாவை மாற்றிக்கொள்ளும் வசதியும் உண்டு.