டாடாவின் ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் கார்கள் மட்டுமில்லை, ப்ரைமா, அல்ட்ரா டிரக்களும், மார்க்கோபோலோ பஸ்களும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்தன. சொந்தங்களின் வீட்டில் விளையாடும் வாண்டுகளை வேடிக்கை பார்ப்பதைப்போல எல்லாவற்றையும் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்தார் டாடா மோட்டார்ஸின் கமர்ஷியல் வாகனப் பிரிவுத் தலைவர் கிரிஷ் வாக்.

பெரிய யுத்தத்துக்குப் பின்னான மௌனத்தில்தான் கமர்ஷியல் வாகனத் துறை இருக்கிறது. இதெல்லாம் எப்போது மாறும் என்று பத்திரிகை நண்பர்களோடு உரையாடத் தொடங்கினார்.

“கடந்த 18 மாதங்களாகக் கட்டுமானத் துறையின் தோய்வால் கமர்ஷியல் வாகனத்துறை பாதிக்கப்பட்டது. இப்போது அந்த நிலை சீராக முன்னேறி வருகிறது. டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள் புதிய வாகனங்களைப் பற்றி விசாரிப்பது அதிகரித்துள்ளது. இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, அரசு டெப்ரிசியேஷன் ரேட்டை அதிகப்படுத்தியது. இரண்டாவது, ஓனர்ஷிப் காஸ்ட். பழைய BS-3, BS-4 வாகனங்களை விட புதிய BS-6 வாகனங்களின் ஓனர்ஷிப் காஸ்ட் குறைவாக இருக்கிறது'' என்றார்.

அப்போது சவாலான காலகட்டங்களில் டாடா எப்படி நிலைமையைச் சமாளித்தது என்றும் கூறினார். ``உள்நாட்டு விற்பனை குறைந்தபோது, எங்களுக்கு உதவியது ட்ரக் ஏற்றுமதி தொழில். முன்பு இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களை வெளிநாடுகளில் விற்பனை செய்ய முடியாது. ஆனால், இப்போது பாதுகாப்பு அம்சங்கள், ஆக்ஸில் நார்ம்ஸ், BS-6 என இந்திய ஆட்டோமொபைல் துறை உலகத்தரத்துக்கு வந்துவிட்டதால், ஏற்றுமதி அதிகரித்துள்ளன. இதற்கு முன் 12 சதவிகிதமாக இருந்த ஏற்றுமதியை 20 சதவிகிதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.

டாடா மட்டுமில்லை; நம் நாட்டில் செயல்பட்டுவரும் அனைத்து கமர்ஷியல் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கும் பணிக்காலம் முடிந்து இப்போது கோடை விடியல் தொடங்கியிருக்கிறது என நம்புவோம்.