Published:Updated:

'வொர்க் ஃப்ரம் ஹோம்' கால அளவை நீட்டித்த டெக் நிறுவனங்கள்!

டெக் நிறுவனங்களின் Work from home
டெக் நிறுவனங்களின் Work from home

இவை மட்டுமன்றி அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட டெக் நிறுவனங்களும் அக்டோபர் மாதம் வரை தங்கள் ஊழியர்களுக்கு 'வொர்க் ஃப்ரம் ஹோம்' கால அளவை உயர்த்தியிருக்கின்றன.

கொரோனா நோய்த்தொற்று காரணமாகப் பெரும்பாலான தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் தற்போது வீட்டிலிருந்தபடிதான் வேலை பார்த்து வருகிறார்கள். அமெரிக்காவில் இதன் தாக்கம் உச்சத்தில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் ஆகிய நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களை இந்த ஆண்டு இறுதி வரை 'வொர்க் ஃப்ரம் ஹோம்' முறையே தொடரவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூகுள் | Google
கூகுள் | Google
AP | Patrick Semansky

ஃபேஸ்புக் நிறுவனம் ஜூலை மாதம் வரை அலுவலகம் செயல்படாது எனத் தெரிவித்திருந்தது. மேலும், 2021-வரை அந்நிறுவனம் நடத்தவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்த்தையும் ரத்து செய்யப்பட்டிருந்தது . இந்நிலையில் அந்நிறுவன ஊழியர்கள் பலரும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையிலேயே வேலையைத் தொடரவிருப்பதாகக் கூறியுள்ளது. வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க முடியாதவர்கள் அலுவலகம் வந்து வேலையைத் தொடர்வார்கள் மற்றவர்கள் இந்த ஆண்டின் இறுதி வரை வீட்டில் இருந்தபடியே வேலை பார்ப்பார்கள் எனத் தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.

ராகுல் காந்தி ட்வீட், பிரெஞ்ச் ஹேக்கர், ப்ரைவஸி சிக்கல்... தொடரும் ஆரோக்கிய சேது சர்ச்சைகள்!#FullAnalysis

கூகுள் நிறுவனமும் இதே முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, இந்த ஆண்டின் இறுதி வரை பெரும்பாலான ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே வேலை பார்க்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Facebook | பேஸ்புக்
Facebook | பேஸ்புக்

மேலும், இந்த ஆண்டில் புதிதாக ஆட்களை வேலைக்கு அமர்த்துவது குறைவாகவே இருக்கும் எனவும் சென்ற மாதம் தங்கள் ஊழியர்களுக்கான மின்னஞ்சலில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவை மட்டுமன்றி அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட டெக் நிறுவனங்களும் அக்டோபர் மாதம் வரை தங்கள் ஊழியர்களுக்கு 'வொர்க் ஃப்ரம் ஹோம்' கால அளவை உயர்த்தியிருக்கின்றன.

அடுத்த கட்டுரைக்கு