Published:Updated:

டெக் தமிழா Notifications

டெக் தமிழா Notifications
Listicle
டெக் தமிழா Notifications

கடந்த மாத டெக் செய்திகளின் தொகுப்பு!


ரியல்மீ X2

இதுவரை பட்ஜெட், மிட்- ரேஞ்ச் மார்க்கெட்டில் கலக்கிவந்த ரியல்மீ நிறுவனம், சமீபத்தில் ப்ரீமியம் சந்தைக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறது. ஏற்கெனவே, சீனாவில் வெளியான ரியல்மீ X2 மாடலை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். இம்மாடலின் ஹைலைட்டான Super VOOC 50w ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம், இந்த போனை சாம்சங் கேலக்சி 10+, ஐபோன் 11 போன்ற விலையுயர்ந்த மாடல்களை விடவும் வேகமாக சார்ஜ் செய்துவிடும் எனக் கூறியிருக்கிறார், ரியல்மீ நிறுவனத் தலைவர். வெறும் 35 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஏறிவிடும் இம்மாடலின் ஆரம்ப விலை 29,999 ரூபாய்.


ஸ்மார்ட் டி.வி

“உங்கள் வீட்டில் இருக்கும் ஸ்மார்ட் டி.வி-யின் இன்டர்நெட் இணைப்பு மூலமாக இணைய வழி ஹேக்கர்களால் உங்கள் டி.வி சேனல்களை மாற்றுவது தொடங்கி, நம் வீட்டு படுக்கையறையில் உள்ள தொலைக்காட்சியின் கேமராக்கள் மற்றும் மைக் வரை இயக்க வாய்ப்புள்ளது” என அதிர்ச்சி அலெர்ட் வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் FBI அமைப்பு. அதனால் டி.வி-யை போட்டுட்டு ஸ்மார்ட்போன் நோண்டும் மக்களே, நீங்க டி.வி பார்க்கலைனாலும் டி.வி உங்களைப் பார்க்கும். உஷார்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

Mi நோட்-10

“DSLR கேமராலாம் ஓரம் போ!” என சொல்லாமல் சொல்ல வருகிறது, ஷாவ்மி நிறுவனத்தின் புதிய மொபைல். ஆம், 108-மெகா பிக்ஸல் மெயின் கேமரா, 20-மெகா பிக்சல் அல்ட்ரா-வைடு கேமரா, டெலிபோட்டோ கேமரா, மேக்ரோ கேமரா மற்றும் 12-மெகாபிக்ஸல் portrait கேமரா என ஐந்து கேமராக்களுடன் Mi நோட்-10 மாடலைக் களமிறக்கவிருக்கிறது அந்நிறுவனம். இந்தியாவில் இந்த மாதம் 26-ம் தேதி ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படும் இம்மாடலின் விலை 40,000 ரூபாயைத் தொடும் என டெக் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


வாட்ஸ் அப்

திடீரென காஷ்மீரைச் சேர்ந்த மக்கள் அனைவரும் கூட்டம் கூட்டமாக வாட்ஸ்அப் குரூப்களிலிருந்து வெளியேற, 'என்ன ஆச்சு?' என விசாரித்தால், “எங்களுக்கு இன்டர்நெட் இணைப்பே இல்லையே... நாங்க என்ன பண்ணோம்” எனப் புலம்புகிறார்கள். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டபோது, துண்டிக்கப்பட்ட இணையதளச் சேவை அங்கு இன்னும் திரும்பவில்லையாம். அப்புறம் ஏன் இந்தக் கணக்குகள் நீக்கப்பட்டது என்று கேட்டதற்கு வாட்ஸ்அப் நிறுவனம், “120 நாள்கள் பயன்படுத்தப்படாத ஒரு வாட்ஸ்அப் அக்கவுன்ட் பாதுகாப்பு கருதி, தானாகவே காலாவதி ஆகிவிடும்” என விளக்கமளித்திருக்கிறது.


ஃபேசியல் ரெக்கக்னைஷன்

இதுவரை தேசிய அடையாள அட்டையைக் காண்பித்து சிம் கார்டு வாங்கி வந்த சீன மக்கள், இனிமேல் தங்கள் முகத்தையும் ஸ்கேன் செய்தால்தான் மொபைல் இணைப்பைப் பெறமுடியும் என்ற புதிய விதியை கட்டாயமாக்கியிருக்கிறது, அந்நாட்டு அரசு. ஏற்கெனவே, இணையம் மற்றும் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதில் பல கட்டுப்பாடுகள் உள்ள சீனாவில், இந்த ஃபேசியல் ரெக்கக்னைஷன் டேட்டாவை வைத்து மக்களை இன்னும் தெளிவாகக் கண்காணிக்க நினைக்கிறது, சீன அரசு. இதற்கு எதிராகப் பல குரல்கள் எழுந்தாலும் எதையும் கண்டுகொள்வதாக இல்லை சீனா.


ஐபோன்

ஆப்பிள் மொபைல்களை ஆராய்வதில் புகழ்பெற்ற மிங்-சி கோ (Ming-Chi Kuo), புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். வெளியாகப்போகும் ஐபோன்கள் பற்றிய தகவல்களைத் துல்லியமாகக் கணிக்கும் இவர், 2021-ம் ஆண்டில் ஆப்பிள் ஐபோன்கள் போர்ட்டு (Port) இல்லாமல் வெளிவரும் எனக் கணித்துள்ளார். அதாவது இயர்போன்ஸ், சார்ஜிங் என அனைத்துமே அதில் வயர்லெஸ்தான். ஏற்கெனவே, தற்போது வரும் மொபைல்கள் சார்ஜிங்கிற்கான போர்ட்டுடன் மட்டுமே வருகின்றன.


தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism