Published:Updated:

டெக் தமிழா Notifications

டெக் தமிழா Notifications
Listicle
டெக் தமிழா Notifications

கடந்த மாத டெக் செய்திகளின் தொகுப்பு!


Fitbit | ஃபிட்பிட்

ஃபிட்னஸ் சாதனங்கள் தயாரிப்பதற்குப் புகழ்பெற்ற ஃபிட்பிட் (Fitbit) நிறுவனத்தை 2.1 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கியுள்ளது கூகுள். கூகுளின் Wear OS இயங்குதளத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும் சொந்தமாக ஸ்மார்ட் வாட்ச்களைத் தயாரித்து சந்தையில் விற்கவும் சிறந்த வாய்ப்பை இந்த முதலீடு வழங்கும் என்று கூகுள் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. ஃபிட்பிட் நிறுவனத்தை வாங்க ஃபேஸ்புக்கும் முயற்சி செய்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் "ஃபிட்பிட் சாதனங்களில் இருக்கும் பயனாளர்கள் டேட்டாவை எந்த ஒரு காரணத்துக்காகவும் கூகுள் பயன்படுத்தாது, அதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்" என்று ஃபிட்பிட் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ | Apple Airpods Pro

சமீபத்தில் ஆப்பிள் அதன் வயர்லெஸ் ஹெட்போன்ஸான ஏர்பாட்ஸை அப்டேட் செய்து ஏர்பாட்ஸ் ப்ரோவை அறிமுகம் செய்தது. நாய்ஸ் கான்சலேஷன் வசதியுடன் வரும் இது அனைத்து விதத்திலும் முந்தைய ஏர்பாட்ஸைவிட மேம்பட்டதாக இருக்குமாம். iOS 13.2 , iPadOS 13.2, WatchOS 6.1, TvOS 13.2, MacOS Catalina 10.15.1 ஆகிய இயங்குதளங்களில் இயங்கும் ஆப்பிள் சாதனங்களில் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். இதனுடன் வரும் Announce Messages என்னும் புதிய வசதியின் மூலம் செயற்கை நுண்ணறிவு அசிஸ்டன்ட்டான சிரி உங்களுடைய மெசேஜ்களை ஏர்பாட்ஸில் வாசிக்கும். இதன் விலை 24,900 ரூபாய். அடேங்கப்பா...!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

செலினா கோமேஸ் | Selena Gomez

ஐபோன்களை விட கூகுளின் பிக்ஸல் மொபைல்கள்தான் படங்கள் எடுக்கச் சிறந்த கேமரா என்பதுதான் சில வருடங்களாக கேட்ஜெட் வட்டாரங்களில் பரவலான பேச்சு. இதனால் இம்முறை கேமராவில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி 11 சீரிஸ் ஐபோன்களை வெளியிட்டது ஆப்பிள். சில நாள்களுக்கு முன்பு கூகுளும் அதன் புதிய பிக்ஸல் 4 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இதனால், மீண்டும் யார் பெஸ்ட் என்ற விவாதம் தொடங்குவதற்கு முன்பே பிரபல பாடகி செலினா கோமேஸின் 'Lose You To Love Me' ஆல்பம் சாங் வீடியோ முழுவதுமாக ஐபோன் 11 ப்ரோ மேக்ஸில்தான் எடுக்கப்பட்டது என்று மார்க்கெட்டிங்கில் சிக்ஸர் அடித்திருக்கிறது ஆப்பிள். ஸ்டூடியோ ரெடி ஐபோன்!


Airtel vs Jio vs vodafone

ஜியோ மற்ற நிறுவனங்களின் அழைப்புகளுக்குக் குறைவான ரிங் டைம் வைக்கிறது என்று ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள் குற்றம்சாட்ட அது பெரும் சர்ச்சை வெடித்தது. இதுகுறித்து தொலைத்தொடர்பு ஆணையமான ட்ராயிடம் ஏர்டெல் நிறுவனம், ‘ரிங்டைமை 45 நொடிகளாக வரையறுக்க வேண்டும்’ என்றது. வோடஃபோன் - ஐடியா நிறுவனம், ‘30 நொடிகள் வைக்கலாம் அல்லது அழைக்கப்படுகின்ற டெலிகாம் நிறுவனமே இதை நிர்ணயிக்கலாம்’ என்றது. ஆனால், ஜியோ நிறுவனமோ, ‘94 சதவிகித அழைப்புகள் 20-25 நொடிகளிலேயே ஏற்கப்பட்டுவிடுகின்றன. தவிர, உலகளவிலும் ரிங்டைம் 15-20 நொடிகள் மட்டுமே இருக்கிறது. அதிக நொடிகள் ரிங்டைம் வைப்பதால் நெட்வொர்க் வீணாகிறது’ என்று வாதாடியது. இறுதியாக மொபைல் அழைப்புகளுக்குக் குறைந்தபட்சம் 30 விநாடிகள் ரிங்டைம் இருக்கவேண்டும் என்று அறிவித்திருக்கிறது ட்ராய்.


Twitter| ட்விட்டர் ( Pinterest )

இன்று அரசியல்வாதிகளின் முக்கிய பிரசாரக்களம் சமூக வலைதளங்கள்தான். ஆனால், அதற்கு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது ட்விட்டர். அரசியல் விளம்பரங்களுக்கு எங்கள் தளத்தில் இடமில்லை என்று அறிவித்திருக்கிறார் ட்விட்டர் சிஇஓ ஜாக் டார்சி. "ஒருவரின் அரசியல் கருத்துகள் தானாக மக்களைச் சென்று சேரவேண்டுமே தவிர அதைப் பணம் கொடுத்து வாங்குவது சரியாகாது" என்ற இவரின் கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒன்றுசேர இருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியான சில நாள்களுக்கு முன்புதான் ஃபேஸ்புக் 'அரசியல் விளம்பரங்களின் உண்மைத்தன்மையைச் சோதிக்கமாட்டோம்' என்று அறிவித்திருந்தது. அரசியல் விளம்பரங்கள் விஷயத்தில் இந்த இரு பெரும் சமூக வலைதள நிறுவனங்களும் எதிர்மறையான நிலைப்பாடுகள் எடுத்திருப்பதுதான் டெக் உலகில் கடந்த மாதம் வைரல் டாபிக்.


பிக்ஸல் 4 | Pixel 4

கூகுள் அதன் பிக்ஸல் 4 ஸ்மார்ட்போனை #madebygoogle நிகழ்வில் அறிமுகப்படுத்தியது. அறிமுகமான அன்றே இந்த மொபைல் இந்தியாவில் விற்பனைக்கு வராது என்று அறிவித்தது கூகுள். இதற்கு எந்தக் குறிப்பிட்ட காரணமும் கூகுள் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. இந்த மொபைலில் அறிமுகமாகும் ப்ராஜெக்ட் சோலிதான் இதற்குக் காரணம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரேடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இந்த 'ப்ராஜெக்ட் சோலி' வசதி மூலம் மொபைலில் கைவைக்காமல் வெறும் கையசைவுகள் மூலமே மொபைலை இயக்கமுடியும். இதற்குத் தேவையான 60GHz அலைவரிசைக்கான அனுமதி இந்தியாவில் யாருக்கும் கொடுக்கப்படவில்லை. மேலும், இந்தியாவில் முந்தைய பிக்ஸல் போன்களுக்கும் பெரிய அளவில் வரவேற்பு பெறாததால் இதற்கெனப் போராட வேண்டாம் என்று இந்த முடிவை எடுத்திருக்கிறது கூகுள்.