Published:Updated:

ஆங்கிலத்தில் பயமுறுத்தும் கொரோனோ காலர் டியூன்..!

corona
corona

திரையரங்குகளில் படம் பார்க்கச் செல்லும்போது படம் தொடங்குவதற்கு முன்பு புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு விளம்பரங்கள் வரும். அது முதலில் அச்சுறுத்தும் வகையில்தான் இருக்கும். ஆனால், அதை அடிக்கடிப் பார்க்கப் பார்க்க அந்த விளம்பரம் குறித்த நமது பார்வை மாறும்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை 39 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு பலவிதங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. பள்ளிகள், விமான நிலையங்கள், முக்கிய ரயில் நிலையங்களில் வைரஸ் பரவலுக்கு எதிரான ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. மற்றொரு பக்கம் பி.எஸ்.என்.எல், ஜியோ போன்ற டெலிகாம் நெட்வொர்க்குகள் வழியாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களை அழைத்து இந்த வைரஸ் பாதிப்பு காலத்தில் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து அறிவுறுத்தி வருகிறார்கள்.

corona
corona

கூடவே வாடிக்கையாளர்களின் காலர் ட்யூன்களும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வுக்காக மாற்றப்பட்டுள்ளது. இருமல் சத்தத்தோடு தொடங்கும் கொரோனா எச்சரிக்கை பயமுறுத்தும் வகையில் இருப்பதாக பலர் தெரிவிக்கிறார்கள். அதுவும் ஆங்கிலத்தில் வருகிறது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், ``COVID-19 குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் புதிய மொபைல் காலர் ட்யூன் அனைத்து டெலிபோன் நெட்வொர்க் ஆபரேட்டர்களால் தொடங்கப்பட்டிருக்கிறது. பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல், ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடபோன் - ஐடியா நிறுவனங்களின் 117.2 கோடி வாடிக்கையாளர்கள் எஸ்.எம்.எஸ் மற்றும் போன் மூலமாகத் தொடர்புகொள்ளப்பட்டு இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக, கொரோனா காலர் ட்யூன்களுக்கு மாறியுள்ள நெட்வொர்க் நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு பேசினோம். பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையோடு பேசிய ஒரு தொலைதொடர்பு நிறுவன அதிகாரி ``மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் வாடிக்கையாளர்களின் காலர் ட்யூன்களை மாற்றியுள்ளோம். சர்வதேச அளவில் இந்த நோய் பரவியுள்ளதால் இந்த நடவடிக்கையை அவர்கள் எடுத்துள்ளார்கள்.

`கொரோனா பரிசோதனை வார்டு எப்படி இருக்கிறது?'- கேரள யூடியூபரின் நேரடி அனுபவம் #Video

திரையரங்குகளில் படம் பார்க்கச் செல்லும்போது படம் தொடங்குவதற்கு முன்பு புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு விளம்பரங்கள் வரும். அது முதலில் அச்சுறுத்தும் வகையில்தான் இருக்கும். ஆனால், அதை அடிக்கடிப் பார்க்கப் பார்க்க அந்த விளம்பரம் குறித்த நமது பார்வை மாறும். அதுபோலதான் இதுவும். காலர் ட்யூன்களால் ஏற்படும் அச்சத்தை விட கொரோனா நோய் பரவுவதால் ஏற்பட்டுள்ள அச்சம் பெரிதாக இருக்கிறது. அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதே சரியாக இருக்கும். இதில் மேலதிகத் தகவல்களுக்கு அரசின் தகவல் தொலைதொடர்புத் துறையைத் தொடர்பு கொள்ளுங்கள்” என்பதோடு முடித்துக் கொண்டனர்.

அடுத்த கட்டுரைக்கு