Published:Updated:

2021-ல் ஆண்ட்ராய்டில் அதிகம் தரவிறக்கப்பட்ட டாப் 10 செயலிகள்!

டாப் 10 செயலிகள்
Listicle
டாப் 10 செயலிகள்

இந்த வருடத்தின் அதிகமாகத் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் இவைகள் தான்


நம்முடைய அன்றாட வாழ்வின் மிக முக்கியமாக மாறிவிட்ட நம்முடைய கைப்பேசியில் தினம் தினம் புது புது செயலிகள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. ஆனால் அனைத்து செயலியும் தேவையான வீச்சு அடைவதில்லை. சில செயலிகள் மட்டுமே பெரும்பாலான மக்களால் விரும்பப்படுகிறது. அப்படி இந்த வருடத்தில் ஆண்ட்ராய்டில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் இவைகள் தான். இந்த பட்டியலில் அதிக அளவில் இந்தியச் செயலிகளும் உள்ளன.


1
இன்ஸ்டாகிராம்

இளம் தலைமுறையின் ஃபேவரைட் இன்ஸ்டாகிராம்!

இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இன்ஸ்டாகிராம் இளைஞர்களின் மோஸ்ட் ஃபேவரைட் செயலி. இன்ஸ்டாகிராம் உபயோகிக்காத இளம் தலைமுறையினரை விரல்விட்டு எண்ணி விடலாம் என்ற அளவிற்கு இதன் தாக்கம் அவர்களிடம் உள்ளது. இன்ஸ்டாகிராமில் உள்ள ரீல்ஸ் ஆப்ஷன் இதன் ரீச்சுக்கு மிகப்பெரிய காரணம். டிக்டாக்குக்குப் போட்டியாகக் களமிறக்கப்பட்ட சேவைகளில் இதுவும் ஒன்று. இது தவிர ஐஜிடிவி, வீடியோ மற்றும் ஆடியோ சாட் வசதி, ஸ்டோரி ஹைலைட், ஐஜி ஸ்டோர் எனப் பல பல புதுமையான அப்டேட்கள் இதன் டாப் 1 இடத்துக்குக் காரணமாகக் கூறலாம்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

2
ஃபேஸ்புக்

ஆல் டைம் ஃபேவரைட் ஃபேஸ்புக்!

முகநூல் என்றழைக்கப்படும் ஃபேஸ்புக் ஆரம்ப காலங்களில் நமக்குத் தெரிந்த மற்றும் தெரியாத நபர்களுடன் பழகுவதற்கு என்று சொல்லப்பட்டாலும் இன்று ஃபேஸ்புக்கிலும் பல புதிய வசதிகள் வந்துவிட்டன. ஃபேஸ்புக் வாட்ச் ஆப்ஷனைப் பயன்படுத்தி யூடியூப்பில் பார்ப்பது போல அனைத்து வகையான வீடியோக்களையும் பார்க்க முடியும். யூடியூபில் வருமானம் ஈட்டுவது போலவே, ஃபேஸ்புக்கிலும் வீடியோக்கள் மூலம் வருமானம் ஈட்ட முடியும். ஃபேஸ்புக்கில் கேம்ஸ் ஆப்ஷனில் பல்வேறு வகையான ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடும் வசதி கூட உள்ளது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பை உள்ளடக்கிய அதன் தாய் நிறுவனம் இந்த ஆண்டு 'மெட்டா' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.


3
மீஷோ

வீட்டிலிருந்தபடியே விற்பனை செய்ய மீஷோ!

இந்த செயலி ஆன்லைனில் வியாபாரம் புரிவதற்கு உதவும் ஒரு செயலி ஆகும். இது 0℅ முதலீட்டில் ஆன்லைனில் பிசினஸ் செய்ய விரும்புபவர்களுக்கு ஏற்ற செயலி. இந்த செயலியில் உள்ள பொருட்களை நாம் நம்முடைய வெவ்வேறு சமூக வலைத்தளங்களை உபயோகித்து நம்முடைய நண்பர்களிடமும், தெரிந்தவர்களிடமும் விற்றுத் தர வேண்டும். அவ்வாறு விற்றுத் தருவதற்கு நமக்குக் குறிப்பிட்ட தொகை கமிஷனாகக் கிடைக்கும். இந்த செயலி வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க விரும்புபவர்களிடம் குறிப்பாகப் பெண்களிடமும், கல்லூரி மாணவர்களிடமும் அதிக வரவேற்பு பெற்றிருக்கிறது.


4
ஸ்நாப்சாட்

ஃபில்டர்களால் பிரபலமான ஸ்னாப் சாட்!

ஸ்னாப் சாட் என்னும் செயலி நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை நம் நண்பர்களுடன் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வதற்கான செயலி. ஆனால் இதில் பகிரப்பட்ட செய்தியோ, புகைப்படமோ நாம் அனுப்பிய நபர் பார்த்து சில நிமிடங்களில் அழிந்து விடும். இந்த ஸ்னாப்சாட்டில் உள்ள கேமராவின் ஃபில்டர்களுக்காகவே இந்த செயலியைப் பயன்படுத்துபவர்கள் அதிகம். இந்த ஃபில்டர் கள் பல்வேறு வகையில் வித்தியாசமான வகைகளில் புகைப்படங்களை எடுக்க உதவும்.


5
டகாடக்

டிக்டாக்கிற்கு மாற்றான டகாடக்!

'MX டகாடக்' ஷார்ட் வீடியோ எனப்படும் மிகவும் குறைந்த விநாடிகளே வரும் வீடியோக்களை உருவாக்குவதற்கும் அதைப் பகிர்வதற்கும் உரிய செயலி. இந்திய அரசு கடந்த ஆண்டு சீன நாட்டைச் சார்ந்த பல்வேறு செயலிகளைத் தடை செய்த போது இங்கு மிகவும் பிரபலமாக இருந்த ஷார்ட் வீடியோ செயலியான டிக்டாக்கும் தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் அதன் இடத்தை நிரப்பும் வகையில் இந்தியச் செயலியான இந்த டகாடக் மிகவும் பிரபலமடைந்து விட்டது. இதில் நடனம், இசை, நகைச்சுவை என அனைத்து வகைகளிலும் குட்டி குட்டி வீடியோக்களை உருவாக்க முடியும்.


6
ஜோஷ்

குட்டி குட்டி வீடியோக்களுக்கு ஜோஷ்!

ஷார்ட் வீடியோக்களைப் பார்க்க மற்றும் பகிர உதவும் மற்றுமொரு செயலி இந்த ஜோஷ். இந்த செயலியில் ஷார்ட் வீடியோக்களை உருவாக்கி பகிர்வதுடன் பல்வேறு வகையான தினசரி சேலஞ்ச்கள் மற்றும் போட்டிகளிலும் நம்மால் பங்கேற்க உள்ளன. இந்த போட்டிகளுக்குப் பல வகையான பரிசுகளும் இருக்கின்றன. ஷார்ட் வீடியோக்களை வைத்து ஹிட்டடித்த செயலிகள் பட்டியலில் இணைகிறது இந்தச் செயலி.


7
மோஜ்

இந்திய ஷார்ட் வீடியோ செயலி மோஜ்!

மோஜ் எனப்படும் இந்த செயலியும் மற்றுமொரு ஷார்ட் வீடியோ செயலி. ஆனால், இது இந்தியாவைச் சேர்ந்தது. இந்தச் செயலியானது பெங்களூரைச் சேர்ந்த 'மோஹல்லா டெக்' நிறுவனத்தால் உருவாக்கப்பட்டதாகும். இந்த செயலியில் உருவாக்கப்படும் வீடியோக்கள் பதினைந்து விநாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை இருக்கும். மக்களின் பொறுமை வெகுவாக குறைந்து வரும் இந்த காலத்தில் இதுபோன்ற சுருக்கமான வீடியோக்களையே அனைவரும் விரும்புகிறார்கள். அதுவே இதுபோன்ற செயலிகளின் ப்ளஸ் பாய்ண்டாக உள்ளது.


8
லூடை கிங்

ஆன்லைனிலும் ஹிட்டடித்த லூடோ கிங்!

லூடோ கிங்க் என்னும் கேமிங் செயலி நாம் போர்டில் விளையாடும் லூடோவின் ஆன்லைன் வடிவம். இந்தச் செயலியில் பல்வேறு வகையான ஆப்ஷன்கள் இருக்கும். நாம் வீட்டிலேயே போர்டுக்கு பதிலாக இந்த செயலியில் நண்பர்களுடன் ஆஃப்லைனில் விளையாட முடியும். தொலைவில் இருக்கும் நம் நண்பர்களுடன் ஆன்லைன் மூலமும் விளையாடலாம். விளையாடுவதற்கு யாருமே இல்லையென்றாலும் இந்த செயலியின் AI-யுடன் விளையாடலாம். விளையாடும் சமயத்தில் நம் நண்பர்களுடன் சாட்டில் உரையாடிக் கொள்ளலாம் என்பது கூடுதல் சிறப்பு.


9
ப்ளிப்கார்ட்

விற்பனைச் செயலியில் முதன்மையான ஃபிளிப்கார்ட்!

இந்தியாவின் முக்கியமான ஆன்லைன் வர்த்தக தளங்களுள் ஒன்று ஃபிளிப்கார்ட். இது பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நிறுவனமாகும். ஃபிளிப்கார்டில் வீட்டிற்குத் தேவையான பொருட்களில் தொடங்கி எலெக்ட்ரானிக், ஃபேஷன் உட்பட அனைத்தும் வகையான பொருட்களையும் நம்மால் வாங்க முடியும். இந்தியாவின் முக்கியமான ஆன்லைன் ஃபேஷன் சைட்டான மிந்த்ராவையும் 2014-ஆம் ஆண்டு ஃபிளிப்கார்டின் வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. பிளிப்கார்ட்டில் டிக்கெட் புக் செய்வது, ஆன்லைன் பணப்பரிமாற்றம் செய்வது போன்ற வசதிகளும் உள்ளன.


10
ப்ளே இட்

வீடியோக்களைப் பார்க்க ப்ளே இட்!

ப்ளே இட் என்னும் செயலி நம்முடைய மொபைலில் இருக்கும் வீடியோக்களை பார்ப்பதற்கான ஒரு செயலி. இந்த செயலியின் உதவியுடன் வீடியோ எந்த ஃபார்மெட்டில் இருக்கு வீடியோவையும் நம்மால் பார்க்க முடியும். அது மட்டுமில்லாமல் வீடியோவை ஆடியோவாக மாற்றும் வசதியும் இந்த செயலியில் உண்டு. இந்த செயலி மூலம் ஆன்லைனிலும் நமக்குத் தேவையான வீடியோக்களைத் தேடியும் பார்க்க முடியும். இப்படிப் பல வசதிகள் இருப்பதனால் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட டாப் 10 செயலிகள் பட்டியலில் இணைந்திருக்கிறது இந்தச் செயலி.