Published:Updated:

`இந்த 14 வெப்சைட்டுகளைப் பார்க்காதீங்க!' - கொரோனா பெயரால் உங்களின் தகவல்கள் திருடப்படலாம் #Corona

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஒரு குறிப்பிட்ட செய்தி குறித்த உண்மைத்தன்மையைக் கண்டறிய முடியவில்லை எனில், அதைப் பகிராமல் இருப்பதே நல்லது. இதனால் கொரோனா தொடர்பான வதந்திகளைப் பெருமளவு தடுக்கலாம்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் இந்தியாவில் இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவின் தாக்கத்தோடு, கொரோனா தொடர்பான வதந்திகளும் தினம் தினம் புதிதாக வந்துகொண்டிருக்கின்றன. கொரோனா மீது இருக்கும் அச்சம் காரணமாக, அது தொடர்பான தகவல்களைத் தெரிந்து கொள்வதிலும், விழிப்பாக இருப்பதிலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி பல இணையதளங்கள் நம் தனிப்பட்ட தகவல்களைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

கொரோனா பெயரில் பல ஸ்பேம் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு தனிநபர் தகவல்களைக் கைப்பற்ற முயல்வதாகவும் சைபர் பாதுகாப்பு நிறுவனமான ரெக்கார்டட் பியூச்சர் (Recorded Future) என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது.
முடக்கப்பட்ட இணையதளம்
முடக்கப்பட்ட இணையதளம்
கொரோனா பரவுவதைத் தடுக்க `பிரேக் தி செயின்' பூத்! - கேரளாவின் புதிய திட்டம் #Breakthechain

கொரோனா பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய இணையதளங்கள்:

  • 1. coronavirusstatus.space

  • 2. coronavirus-map.com

  • 3. blogcoronacl.canalcero.digital

  • 4. coronavirus.zone

  • 5. coronavirus-realtime.com

  • 6. coronavirus.app

  • 7. bgvfr.coronavirusaware.xyz

  • 8. coronavirusaware.xyz

  • 9. coronavirus.healthcare

  • 10. survivecoronavirus.org

  • 11. vaccine-coronavirus.com

  • 12. coronavirus.cc

  • 13. bestcoronavirusprotect.tk

  • 14. coronavirusupdate.tk

மேற்கண்ட இணையதளங்கள் யாவும், நம் தனிப்பட்ட தகவல்களைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட இணையதளங்களை யாரும் அணுக வேண்டாம்.

கொரோனா தொடர்பான தகவல்களை எங்கு தெரிந்து கொள்வது?

கொரோனா தொடர்பான காணொலிகள், புகைப்படங்கள் மற்றும் வாட்ஸ்அப் பகிர்வுகள் எனத் தினமும் நூற்றுக்கணக்கான செய்திகள் நம்மை அடைந்துகொண்டிருக்கின்றன. இவற்றில் பல உண்மைத் தகவல்கள் இருந்தாலும் வதந்திகளும் நிறைய கலந்துள்ளன. எனவே, நம்பத் தகுந்த, ஆதாரமுடைய தகவல்களை மட்டும் பகிரவும். உலக சுகாதார நிறுவனத்தின் இணையதளத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா எப்படிப் பரவுகிறது, கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்வது எவ்வாறு, கொரோனா தொடர்பான கேள்வி பதில்கள் மற்றும் கொரோனாவின் தற்போதைய உலக நிலவரம் என அனைத்துத் தகவல்களும் அந்த இணையதளத்தில் முழுவதுமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த இணையதளத்தை அணுகி முழுமையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
உலக சுகாதார நிறுவனத்தின் இணையதளம்
உலக சுகாதார நிறுவனத்தின் இணையதளம்
இளைஞரின் அலட்சியம்... எட்டு மாத குழந்தையையும் விடாத கொரோனா! - கண்காணிப்பு வளையத்தில் 355 பேர்

இந்தியாவில் கொரோனா தொடர்பான தகவல்களுக்கு:

  • இந்தியாவில் கொரோனா தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ள +91-11-23978046 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

  • இந்தியாவில் கொரோனாவின் பாதிப்புகள் மற்றும் கொரோனாவின் நிலவரங்களை அறிய, மத்திய உடல்நலம் மற்றும் குடும்ப நலத்துறையின் இணையதளத்தை அணுகலாம்.

  • இந்தியாவில் மின்னஞ்சல் மூலம் கொரோனா தொடர்பான விவரங்களைப் பெற ncov2019@gmail.com என்ற கணக்குக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

வதந்திகளைப் பரப்ப வேண்டாம்:

வாட்ஸ்அப்பில் வரும் பகிர்வுகளை உடனடியாக மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். மற்றவர்களுக்குப் பகிர விரும்பினால், அதன் உண்மைத்தன்மையை நீங்களே பரிசோதியுங்கள். அந்தத் தகவல்கள் சரியானவை என்று நிரூபணமானால் மற்றவர்களுக்குப் பகிருங்கள். ஒரு குறிப்பிட்ட செய்தி குறித்த உண்மைத்தன்மையைக் கண்டறிய முடியவில்லை எனில், அதை மற்றவர்களுக்குப் பகிராமல் இருப்பதே நல்லது. இதனால் கொரோனா தொடர்பான வதந்திகளைப் பெருமளவு தடுக்கலாம்.

Google
Google

கூகுளின் முயற்சி:

கொரோனா தொடர்பான உண்மைத் தகவல்களை வழங்க அனைத்து நிறுவனங்களும் தங்களால் இயன்ற முயற்சிகளை எடுத்து வருகின்றன. ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் தங்கள் தளங்களில் வரும் கொரோனா தொடர்பான வதந்திகளையும் பொய்யான தகவல்களையும் நீக்கி வருகின்றன.

கூகுளின் துணை நிறுவனமான வெரிலி (Verily), கொரோனாவுக்கெனத் தனிப்பட்ட இணையதளம் ஒன்றையும் உருவாக்கி வருகிறது. அது, இன்று மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என கூகுள் தெரிவித்திருந்தது. எனினும், இதுவரை அது உலகம் முழுவதுக்குமான கொரோனா தகவல்களை உள்ளடக்கிய இணையதளமா என்று கூகுள் எதுவும் குறிப்பிடவில்லை. எனவே, இதை அனைவரும் பயன்படுத்த முடியமா என்று இணையதளம் பயன்பாட்டுக்கு வரும்போதுதான் தெரிய வரும்.

இதுவரை கிடைத்த தகவல்படி, ஒருவருக்கு ஏற்பட்டுள்ள அறிகுறிகளை வைத்து, அவர்களுக்கு அருகில் இருக்கும் கொரோனா சோதனை மையம் குறித்து தெரியப்படுத்தி, அவர்கள் சோதனை செய்துகொள்ள உதவும் வகையில், அமெரிக்க அரசுடன் சேர்ந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவிருக்கிறது கூகுள்.

அடுத்த கட்டுரைக்கு