Published:Updated:

``காரின் கூரையில் சோலார் தகடுகள்!" - இது பொம்மை கார் இல்ல பாஸ்

கார்க்கிபவா

காரின் பேட்டரியின் திறனில் 30-60% வரையிலான மின்சாரத்தை சோலார் மூலம் பெற முடியும் என்கிறது ஹூண்டாய் நிறுவனம். தனது `சொனாட்டா' வகை கார்களில்தான் இந்த முயற்சியைச் செய்திருக்கிறது ஹூண்டாய்

சோலார் பேனல் கார்
சோலார் பேனல் கார் ( ஹூண்டாய் )

உலகம் முழுவதும் மரபுசாரா மின்சாரத்தின் பக்கம் கவனம் செலுத்திவருகிறார்கள். குறிப்பாக, சூரிய எரிசக்தியை எதற்கெல்லாம் பயன்படுத்த முடியுமென்பதைத் தீவிரமாக முயன்றுவருகிறார்கள். கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய்  நிறுவனம் அப்படியொரு முயற்சியைத் தன் கார்களில் செய்திருக்கிறது.

சோலார் பேனல் கார்
சோலார் பேனல் கார்
Twitter/@MotorBeam

பெட்ரோல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் கார்களை ஹூண்டாய் நிறுவனம் தயாரித்திருக்கிறது. அதற்குத் தேவையான மின்சாரத்தை காரின் மேற்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சோலார் தகடுகள் மூலம் பெறக்கூடிய அமைப்பைச் சோதித்திருக்கிறது. காரின் பேட்டரியின் திறனில் 30-60% வரையிலான மின்சாரத்தை சோலார் மூலம் பெற முடியும் என்கிறது ஹூண்டாய் நிறுவனம். தனது `சொனாட்டா' வகை கார்களில்தான் இந்த முயற்சியைச் செய்திருக்கிறது ஹுண்டாய்.

இதுபற்றி  ஹூண்டாய் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஆண்டுக்கு 1,300 கிமீ வரை அதிக தூரத்தை இந்த சோலார் மூலம் பெறப்படும் மின்சாரம் நமக்குத் தரும்" எனச் சொல்லப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக இந்த வகை கார்கள் கொரியாவிலும், பின்னர் வட அமெரிக்காவிலும் விற்பனைக்கு வரும். மற்ற பகுதிகளுக்கு எப்போது வருமென்பதை ஹூண்டாய் சொல்லவில்லை. இதன் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. டொயோட்டா உள்ளிட்ட சில நிறுவனங்களின் சில மாடல்களில் இந்த சோலார் முயற்சி ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.