Published:Updated:

`நெகட்டிவ் ரிவ்யூக்களை நீக்கிய கூகுள்' - மீண்டும் பழைய ரேட்டிங்கை பெற்ற `டிக் டாக்'

டிக் டாக்
டிக் டாக்

சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் டவுன்லோடு செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் டிக்டாக் ஆப்பின் ஸ்டார் ரேட்டிங் கூகுள் பிளே ஸ்டோரில் கடந்த வாரம் 1.3 வரை குறைந்தது.

ஆபாச சர்ச்சை, தகவல் திருட்டு போன்ற காரணங்களால் டிக் டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட வேண்டும் என்ற கருத்து கடந்த ஆண்டிலிருந்தே பேசப்படும் ஒன்றாக இருந்து வந்தது.

இந்நிலையில், யூடியூப் பிரபலமான கர்ரி மினாட்டி என்பவர் யூடியூப் வீடியோக்களில் இருக்கும் தகவல்களை டிக்டாக் பயனாளர்கள் பலரும் திருட்டுத்தனமாகப் பயன்படுத்தி வருவதாகப் பேசி ' Youtube VS tiktok : The end" என்ற ஒரு வீடியோ ஒன்றைக் கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். அது வைரலாகி டிக்டாக்கை இந்தியாவில் தடை செய்யப்பட வேண்டும் என்ற கருத்து பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவை யூடியூப் நிறுவனம் நீக்கினாலும், டிக்டாக்கை இந்தியாவில் தடை செய்யப்பட வேண்டும் என்ற கருத்து தீவிரமடைந்தது. அதனால் பலரும் டிக்டாக்கிற்கு நெகட்டிவ் 1 ஸ்டார் ரேட்டிங்கை வழங்க அந்தச் செயலியின் ஸ்டார் ரேட்டிங் 1.3 ஆகக் குறைந்தது.

இதுகுறித்து விரிவாகக் கீழ்க்காணும் கட்டுரையில் படிக்கலாம்!

மீண்டும் ட்ரெண்டாகும் #BanTikTok... டிக்டாக் பாதுகாப்பானதா? #DoubtofCommonMan
இந்தநிலையில் கூகுள் நிறுவனம், போலியான ரேட்டிங்கை நீக்கியதாகக் கூறி, பிளே ஸ்டோரில் 4.4 ஆக ரேட்டிங்கை உயர்த்தியுள்ளது.

`` கூகுள் டிக்டாக் ரேட்டிங் தொடர்பான சர்ச்சையில் சரியான முடிவையே எடுத்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் டிக்டாக்கின் ஸ்டார் ரேட்டிங் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கூகுள் கணக்கெடுப்பின்படி அதில் 80 லட்சம் போலியான ரேட்டிங் இருந்ததால் அவற்றை நீக்கியுள்ளோம். மக்கள் வழங்கும் ஸ்டார் ரேட்டிங் மற்றும் கமென்ட்ஸ்களும்தான் மற்றொருவர் அந்தச் செயலியைப் பயன்படுத்த வேண்டுமா, வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கிறது என்பது உண்மைதான். அதற்காகப் போலியான ரிவ்யூவையும் ரேட்டிங்கையும் அப்படியே விட்டுவிடமுடியாது. ஏற்கெனவே வகுக்கப்பட்டிருக்கும் நடைமுறைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். கடந்த ஒரு வாரத்தில் கூகுள் பிளே ஸ்டோரில்தான் டிக்டாக்கின் ஸ்டார் ரேட்டிங்கில் பெரும் வேறுபாடுகள் இருந்தன.

டிக் டாக்
டிக் டாக்

ஆனால் ஆப்பிள் ஆப் ஸ்டோர் அதுபோன்ற பெரிய அளவு ரேட்டிங் மாற்றம் ஒன்றும் நிகழவில்லை. கடந்த வாரம் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டிக்டாக்கின் ஸ்டார் ரேட்டிங் 3.5 ஆக இருந்தது. இந்த வாரம் 3.4 ஆக மாறியுள்ளது. ஒரு ஆப்பின் வளர்ச்சியைத் தனிப்பட்ட நபரின் போலியான கருத்து குறைத்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கூகுள் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த ரேட்டிங் பிரச்னை சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு எதிர்ப்புகள் கிளம்பி வந்தாலும் டிக்டாக் பயனாளர்கள் பலரும் இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு