Published:Updated:

ரூட்டை மாற்றும் டிக் டாக்!

ரூட்டை மாற்றும் டிக் டாக்

தன் மேல் படிந்திருக்கும் 'ஆபாச' கரையை வெளுக்கும் தீவிர முயற்சியில் இருக்கிறது டிக் டாக்

ரூட்டை மாற்றும் டிக் டாக்!

தன் மேல் படிந்திருக்கும் 'ஆபாச' கரையை வெளுக்கும் தீவிர முயற்சியில் இருக்கிறது டிக் டாக்

Published:Updated:
ரூட்டை மாற்றும் டிக் டாக்

அறிமுகமாகி இரண்டு ஆண்டுகள் கூட ஆகவில்லை என்றாலும் இந்தியாவில் டிக் டாக்கின் பயணம் பெரியது. ராக்கெட் வேக வளர்ச்சி, கூகுளின் சிறந்த ஆப் விருது, தற்காலிக தடை என இந்த குறுகிய காலத்தில் டிக் டாக்கை சுற்றி அத்தனை நிகழ்வுகள் நடந்தேறிவிட்டது. இன்றும் டிக் டாக் என்றால் ஒரு 'ஆபாச' பிம்பம் சிலருக்கு இருக்கிறது. ஆனால் நாங்கள் கிரியேட்டிவ் பிளாட்ஃபார்ம்தான் அழுத்திச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஆனால், இந்த பிம்பம் உடைந்ததாக இல்லை. இந்த மார்ச் மாதம் டிக் டாக்கில் பதிவாகும் வீடியோக்களை தரம் பிரிக்க அனைத்து

முக்கிய மொழிகளுக்கும் ஒன்றிணைந்த பாதுகாப்பு மையம் ஒன்றை நிறுவியது அந்த நிறுவனம். இது எதுவுமே டிக் டாக் மீது பூசப்பட்ட சாயத்தை அழிக்கவில்லை. இதனால் செயலில் இறங்கிவிடுவோம் என #Edutok என்ற பிரச்சாரத்தை தங்கள் தளத்தில் தொடங்கியது டிக் டாக்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

டிக் டாக் மூலம் மக்களுக்குப் பயனுள்ள விஷயங்களைப் பதிவிட வலியுறுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்தான் #Edutok. இதில் பலரும் வீடியோக்கள் பதிவிட்டிருக்கின்றனர். சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் அக்டோபர் வரை இந்தியாவில் சுமார் 1 கோடி வீடியோக்கள் பதிவாகியிருக்கின்றன. இவற்றின் மொத்த வியூஸ் 4800 கோடி, மொத்த ஷேர்ஸ் 180 கோடி. இந்த அபார பங்களிப்பு மற்றும் வரவேற்பை டிக் டாக் நிறுவனமே எதிர்பார்த்திருக்காது. #EdutokTech, #EdutokLanguage, #EdutokMotivation, #EdutokLifeTips, #EdutokCareer எனப் பல வகையான கன்டென்ட் வெளிவரத்தொடங்கியது.

#Edutok கிரியேட்டர்ஸ்
#Edutok கிரியேட்டர்ஸ்

உதாரணத்திற்கு 15 செகண்ட் வீடியோவில் ஒரு ஆங்கில வாக்கியம் கற்றுக்கொடுப்பது, அறிவியல் தொடர்பான விஷயங்களை ஜாலியாக கிரியேட்டிவ்வாக விளக்குவது, ஃபிட்னஸ் டிப்ஸ், அரசு தேர்வுகளுக்கு எப்படி தயாராவது போன்ற பல வீடியோக்கள் இதில் பதிவானது. இது அனைத்துமே தன்னார்வலர்கள் தானாக உருவாக்கியதுதான். இப்போது இதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்ல Toppr, Vedantu, Made Easy, GradeUp போன்ற ஈ-லேர்னிங் தளங்களுடன் கூட்டணி வைத்து வீடியோக்கள் வெளியிட முடிவு செய்துள்ளது டிக் டாக்.

ஏற்கெனவே தொழில்முறை வல்லுநர்கள் பலரும் டிக் டாக்கில் #Edutok வீடியோக்கள் வெளியிட்டுவருகின்றனர். அனிமேஷ் என்ற தொழில்முறை மருத்துவர் உடல்நலம் குறித்து இருக்கும் சில தவறான நம்பிக்கைகளைச் சுட்டிக்காட்டி வீடியோக்கள் வெளியிடுகிறார். இவர் வெறும் ஒரு உதாரணம்தான். தமிழ்நாட்டிலும் இப்படியான #Edutok வீடியோக்கள் வெளியாகத் தொடங்கிவிட்டன.

'15 செகண்ட் வீடியோவால் என்ன மாற்றம் நடந்துவிடப் போகிறது' என்ற கேள்வி எழாமல் இல்லை. ஆனால் சிறிய அளவில் மாற்றம் நடந்தாலும் அது மாற்றம்தான். இந்தியாவின் கடைநிலை குடிமகன் வரை சென்று சேர்ந்திருக்கும் சமூக வலைதளம் டிக் டாக் தான். இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட இணையப் பயனாளர்களை(அப்படிதான் டெக் நிறுவனங்கள் பிரிக்கின்றனர்) ஃபேஸ்புக், ட்விட்டரை விடவும் அதிகம் பெற்றிருப்பது டிக் டாக்தான். அவர்களுக்கு அறிவார்ந்த விஷயங்களை வீடியோக்கள் வழி எடுத்துச்செல்லும் ஆற்றல் டிக் டாக்கிடம் மட்டுமே இருக்கிறது.

சமீபத்தில் யூடியூப்பின் ஆசிய பசிபிக் மண்டல தலைவர் அஜய் வித்யாசாகரிடம் சமீபத்தில் பேசும்போது அவரும் இதுகுறித்து குறிப்பிட்டிருந்தார். "ஒரு விஷயம் குறித்துத் தெரிந்துகொள்ள விரும்பினால் மக்கள் இணையத்தையே பெரிதும் நாடுகிறார்கள். அதுவும் வீடியோ வடிவில்தான் தேடுகிறார்கள். சொந்த மொழியிலேயே கேள்விக்கான விடைகளும் அவர்களுக்குக் கிடைத்துவிடுகிறது. எங்கள் தளத்தில் இதுபோன்ற கற்றல் சம்மந்தமான வீடியோக்களுக்குதான் நல்ல வரவேற்பு கிடைக்கிறது" என்றார்.

அஜய் வித்யாசாகர்
அஜய் வித்யாசாகர்

அதே சமயம் இப்படியான சூழலில் தவறான தகவல்கள் பரவ வாய்ப்பிருக்கிறது. ஒரு தொழில்முறை மருத்துவர் ஆரோக்கியம் குறித்துப் பேசலாம், ஆனால் யாரோ ஒருவர் ஆரோக்கியம் குறித்துப் பேசுவது தவறான எதிர்வினைகளைக் கொண்டுவராதா என்ற கேள்வியை டிக் டாக் இந்தியாவின் பப்ளிக் பாலிசி இயக்குநர் நிதின் சலுஜாவிடம் கேட்டோம். அதற்கு, "ஒருவரை வெரிஃபை செய்வதற்கு முன் அவரது எல்லா விவரங்களையும் கேட்போம். மருத்துவர் என்றால் பட்டப்படிப்பு சான்றிதழ் வரை சோதனை செய்த பின்பேதான் வெரிஃபை செய்வோம். இதனால் போலி நபர்கள் தவறான தகவல் அனுப்புவதெல்லாம் இங்கே நடக்காது. மேலும் இதற்காகத்தான் இந்தியாவில் பாதுகாப்பு மையம் நிறுவியிருக்கிறோம்" என்கிறார்.

ஆனால் வெரிஃபை செய்யப்படாத கணக்குகளிலிருந்து வரும் பொய் பரப்புரைகளை எப்படி தடுக்கப்போகிறது என்பதற்கான தெளிவான விளக்கம் டிக் டாக்கிடம் இல்லை. அதிலும் கவனம் செலுத்தும் என்றால் டிக் டாக்கின் #Edutok வரவேற்கத்தக்க முயற்சிதான்.

டிக் டாக்
டிக் டாக்

சொல்லப்போனால் இன்று பலரும் யூடியூப் வீடியோக்கள் பார்த்துதான் டிகிரியே முடித்திருக்கின்றனர். ரயில் நிலைய இலவச Wifi உதவியுடன் அரசுவேலைக்கு சென்றிருக்கின்றனர் மக்கள். ஏன், 'நான் சினிமா எடுத்ததே இணைய வீடியோக்கள் பார்த்துதான்' என்கின்றனர். இப்படி தினமும் இணையம் கற்றலுக்கு அளிக்கும் ஆயிரம் வாய்ப்புகளை நம்முன் வைத்துக்கொண்டே இருக்கிறது. அதை நாம் சரியாக பயன்படுத்துகிறோமோ என்பதுதான் கேள்வியே!