Published:Updated:

`` 'டிக் டாக்'கின் ட்ராக்கிங் தொழில்நுட்பம் நடுங்கச் செய்கிறது!'- பிரபல சமூக வலைதள CEO கடும் தாக்கு

'டிக் டாக்'கை பல டெக் நிறுவனங்களும் கடுமையாகச் சாடிவருகின்றன. ஃபேஸ்புக்கின் COO ஷெரில் சண்ட்பெர்க், ஒரு பிரபல பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் டிக் டாக்கை விமர்சித்திருந்தார்.

உலகமெங்கும் இருக்கும் மக்களின் ஸ்மார்ட்போன்களை ஆட்கொள்ளத் தொடங்கியிருக்கிறது, டிக் டாக். பல சர்ச்சைகளைச் சந்தித்தாலும் டிக் டாக்கின் அபார வளர்ச்சி நிற்பதாக இல்லை. கடந்த ஜனவரி மாதம்கூட, உலக அளவில் அதிகம் பதிவிறக்கப்பட்ட ஆப், டிக் டாக் தான். இந்தப் பட்டியலில் டிக் டாக்கிற்கு அடுத்துதான் வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் போன்ற ஆப்களே இருக்கின்றன. இந்நிலையில், பிரபல சமூக வலைதளம் ஒன்றின் தலைமைச் செயல் அதிகாரி, டிக் டாக்கை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஸ்டீவ் ஹஃப்மேன்
ஸ்டீவ் ஹஃப்மேன்
Cody Glenn / Web Summit / Sportsfile

'Social 2030' என்ற முதலீட்டாளர்கள் கருத்தரங்கில் பேசிய Reddit தளத்தின் CEO மற்றும் துணை நிறுவனரான ஸ்டீவ் ஹஃப்மேன், "இதைச் சொன்னதற்காக நான் வருத்தப்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால், சிந்தனை அளவில்கூட டிக் டாக் செய்வதைச் சரியென எண்ண மறுக்கிறது மனம். டிக் டாக் ஒரு ஒட்டுண்ணி, நம்மை அது எப்போதும் கவனித்துக்கொண்டே இருக்கிறது. அவர்களின் ட்ராக்கிங் (fingerprinting) தொழில்நுட்பம் என்னை நடுங்கச் செய்கிறது. என்னால் அவர்கள் ஆப்பை என் போனில் பதிவேற்ற முடியாது" என்று பேசியுள்ளார்.

ஹஃப்மேன் குறிப்பிடும் 'fingerprinting' என்னும் முறையில் ஆடியோ மற்றும் பிரௌசர் செயல்பாடுகள் ட்ராக் செய்யப்படுகிறது. டிக் டாக் தரப்பில் இது பாதுகாப்பிற்காகச் செய்யப்படுவதாகக் கூறப்பட்டாலும், இதில் பிரச்னை இருப்பதாகப் பல ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

"இந்த உளவுபார்க்கும் ஆப்பை இன்ஸ்டால் செய்யாதீர்கள் எனத் தொடர்ந்து மக்களுக்கு வலியுறுத்திவருபவன் நான்."
ஸ்டீவ் ஹஃப்மேன்.

டிக் டாக்கை, பல டெக் நிறுவனங்களும் கடுமையாகச் சாடி வருகின்றன. ஃபேஸ்புக்கின் COO ஷெரில் சண்ட்பெர்க் ஒரு பிரபல பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் டிக் டாக்கை விமர்சித்திருந்தார். "அவர்கள், பெரும் சக்தியாக உருவெடுத்துவருகின்றனர். இந்த இடத்திற்கு எங்களைவிட பல மடங்கு வேகத்தில் வந்துவிட்டனர்" என டிக் டாக்கில் இருக்கும் பாதுகாப்புப் பிரச்னைகளை விவரித்தார் அவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னேறும் டிக் டாக், PUBG...! 2019-ன் டாப் ஆப்ஸ் & கேம்ஸ் இவைதான்

"எப்படிப் பார்த்தாலும் டிக் டாக் ஒரு சீன நிறுவனம். மக்கள் தங்கள் டேட்டாவைப் பற்றி கவலைகொள்வதாக இருந்தால், முதலில் அவர்களிடம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று பேசியுள்ளார் அவர்.

ஷெரில் சண்ட்பெர்க்
ஷெரில் சண்ட்பெர்க்

ஆனால், ஃபேஸ்புக் தரப்பு இதுபற்றி குற்றம் சாட்டுவது வேடிக்கையானது. தொடர்ந்து, கேம்பிரிட்ஜ் அனலிடிக்கா போன்ற முக்கிய பிரைவசி சர்ச்சைகளில் சிக்குவது ஃபேஸ்புக்தான். கடந்த வருடம்கூட, இதற்காக பேஸ்புக்கிற்கு, அமெரிக்காவின் 'Federal Trade Commission' 5 பில்லியன் டாலர் அபராதம் விதித்தது. இதுவரை எந்த ஒரு டெக் நிறுவனத்திற்கும் இத்தனை பெரிய அபராதம் விதிக்கப்பட்டதில்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு